நான்கு வேடங்களில் விஜயகாந்த்!?
Friday, April 21, 2006
இதுவரை சினிமாவில் அதிகபட்சம் மூன்று வேடங்களில் நடித்து வந்த கேப்டன்.விஜயகாந்த் விருத்தச்சலம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நடிக்கிறார்! ஸாரி போட்டியிடுகிறார். அதில் திடீர் திருப்பமாக விஜயகாந்த் என்ற பெயரில் மேலும் 3 பேர் போட்டியிடுவதால் தேமுதிகவினர் கலங்கிப் போயுள்ளனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனைவி பிரேமலதா மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓட்டு போடும் வரும் வாக்காளர்களைக் குழப்ப இந்த மூன்று விஜய்காந்த்களையும் பாமக தான் மறைமுகமாக நிறுத்தியுள்ளதாக விஜய்காந்த் தரப்பு கருதுகிறது.
மனுதாக்கல் செய்த 3 பேரில் ஒருவர் அ.விஜயகாந்த். இவர் கடலூர் மாவட்டம் சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர். இன்னொருவர் க. விஜயகாந்த். இவர் சிதம்பரம் வையலூர் காலனியைச் சேர்ந்தவர். 3வது விஜயகாந்த் ச.விஜயகாந்த். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்.
நடிகர் விஜயகாந்த்தின் இனிஷியலும் அ என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்த் உள்பட நான்கு விஜயகாந்த்துகளுக்கும் சுயேச்சை சின்னமே ஒதுக்கப்படவுள்ளது.
இதனால் ஒரே தொகுதியில் நான்கு விஜயகாந்த்துகள் போட்டியிடுவதால் வாக்காளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்படும் எனத் தெரிகிறது.
இந்தக் குழப்பத்தில் விஜய்காந்த்துக்கு வரும் வாக்குகள் சிதறும் என கணக்குப் போட்டு இவர்களை களமிறக்கியதே பாமகவினர் என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர் தேமுதிகவினர்.
அ.விஜயகாந்த்க.விஜயகாந்த்ச.விஜயகாந்த்: பாமக வைத்த 'பாம்': அதிர்ச்சியில் தேமுதிக!
கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததால் விஜயகாந்த் தன்னை "கேப்டன்" என்று அழைத்துக் கொள்வதை விரும்புகிறார். அதேபோல் "கரிமேடு கருவாயன்" படத்தில் நடித்திருப்பதால், கருவாயன் விஜயகாந்த் என்றாலும் ஏற்றுக் கொள்வாரா? என பா.ம.க. அனுதாபி ஒருவர் கேட்கிறார். வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் பதில் சொல்வாரா?
நம்ம கமெண்ட்: சினிமாவில் விஜயகாந்திற்கு டூப்பாக நடிப்பவர்களும் பிரச்சாரத்திற்கு வராமல் இருந்தால் நல்லது! Read more...