டென்மார்க் ஒரு இந்திய மாநிலம் ? - வேதாந்தியின் புதிய பத்வா
Friday, October 05, 2007
"நான் பாத்வா விதித்ததற்கு என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நான் பாத்வா விதித்தது போல் முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் முஸ்லீம் மதத்தை பற்றி தவறாக சித்தரித்த தனிஷ் (டென்மார்க்) கார்டூனிஸ்ட் மீது பாத்வா விதித்திருந்தார்.ஆனால் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - ராம் விலாஸ் வேதாந்தி. (முழு உளரல்)
தமிழக முதல்வர் கருணாநிதியின் நாக்கையும் தலையையும் வெட்டி கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் பரிசு என்று கொலைவெறி கருத்தைச் சுதந்திரமாகச் சொன்ன ராம் விலாஸ் வேதாந்திதான் இவ்வாறு புலம்பியுள்ளார்.
வரவர சங் பரிவாரங்களின் உளரல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது! நேற்றுதான் ராஜ் நாத்(த) சிங் உளரியதைப் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்குள் நம் நநக்கு,தலெ ஸ்பெஷலிஸ்ட் ராம்விலாஸ் வேதாந்தி இவ்வாறு சொல்லியுள்ளார்.
இந்தியச் சட்டத்திற்கு எதிராகப் பேசினால், குற்றவியல் தண்டனை சட்டப்படி இந்தியாவில் எவரும் வழக்குப் போடலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கவும் செய்யலாம். அதேபோல் டென்மார்க் கார்ட்டூனிஸ்டுக்கு எதிராக பத்வா கொடுத்த முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் மீது டென்மார்க்கில் வேண்டுமானால் நடவடிக்கை எடுக்கலாம்.
டென்மார்க் சார்பாக (அல்லது டென்மார்க் அரசு/ இண்டர்போல் கேட்டுக் கொள்ளத வரையில்) இந்தியாவில் அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாது என்பது வேதாந்திகளுக்குத் தெரியாதா? அல்லது "அகன்ற பாரதம்" திட்டத்தை டென்மார்க் வரைக்கும் நீட்டியுள்ளார்களா?
ஒன்னுமே புரியவில்லைடா சாமியோவ்!