Showing posts with label ஓரினச்சேர்க்கை. Show all posts
Showing posts with label ஓரினச்சேர்க்கை. Show all posts

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்?

Saturday, February 18, 2012

மனிதன் தன்னை ஆறறிவு கொண்டவன் என்று மேம்படுத்திச் சொல்லிக்கொண்ட போதிலும் சிலரின் சிந்தனை குறைபாடுகளால் சிலசமயம் ஐந்தறிவுக்கும் கீழான உயிரினங்களின் குணாதிசயங்களுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறான்.

ஓரினச்சேர்க்கை குறித்த வழக்கொன்றில், "மாறி வரும் சமூக சூழலைக் கருத்தில் கொண்டு ஓரினச்சேர்க்கை விவகாரத்தைப் பார்க்க வேண்டும்" என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து ஒழுக்கம் பேணும் சமூகத்தவரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் பரஸ்பரம் சம்மதித்து பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஒழுக்க நெறிமுறைகளுக்கும் கலாசாரத்துக்கும் ஓரினச் சேர்க்கை எதிரானது என்றும், சட்ட விரோதமானது என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் பி.பி.சிங்கால், யோகாகுரு பாபா ராம்தேவ் மற்றும் பல பொதுநல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் அம்ரேந்திர சரண் வாதாடினார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், “1860ம் ஆண்டுக்கு முன்பே ஓரின சேர்க்கை குற்றமாக கருதப்படவில்லை. கஜுராஹோவில் உள்ள ஓவியங்களும் சிற்பங்களும் இதை காட்டுகின்றன” என்றனர்.

அதற்கு பதிலளித்த சரண், “சிற்பங்களை வைத்து சமூக பிரச்னைகளை முடிவு செய்யக் கூடாது” என்று வாதிட்டார் .இதற்கு பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது:

"சிற்பங்களும் ஓவியங்களும் அந்தக் காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றன. ஓரினச் சேர்க்கையை வெறும் பாலியல் ரீதியான உறவாக மட்டுமே பார்க்கக் கூடாது. 20 ஆண்டுகளுக்கு முன் ஒழுக்கமற்றதாக கருதப்பட்டவைகளை சமூகம் இப்போது ஏற்றுக் கொள்கிறது!

திருமணம் செய்து கொள்ளாமலே இருவர் சேர்ந்து வாழ்வது, செயற்கை முறையில் கருத்தரிப்பு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது போன்றவை 30 ஆண்டுகளுக்குமுன் இயற்கைக்கு முரணாக கருதப்பட்டது. இப்போது, செயற்கை முறையில் கருத்தரித்தல் வெற்றிகரமான 'வியாபாரமாக' நடந்து வருகிறது. சமூகம் மாறிக் கொண்டு வருகிறது. மாறிவரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும்" என்று மாண்புமிகு??? நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதேபோல், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி-12,2012 அன்று MODERNISM (நவீனத்துவம்) என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் தற்காலத்தில் எவையெல்லாம் நவீனம் (MODERN) என்று விவாதிக்கப்பட்டன. தனிநபர் நடை, உடை, பாவனைகள் முதல் நட்பு, இல்லறம் ஆகியவற்றோடு நவீன சீரழிவுகளான ஓரினச்சேர்க்கை (HOMOSEX&LESBIAN) குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றும் கேட்கப்பட்டபோது, கலந்து கொண்ட சிலர் அதை நியாயப்படுத்தி பேசியது வியப்பாக இருந்தது என்றால் அவர்களில் பெண்களும் நியாயப்படுத்திப் பேசியது அதிர்ச்சியாக இருந்தது!



ஆண்கள் சார்பில் பேசியவர், பிறருக்கு தொந்தரவு இல்லாதவரை "அது" தவறல்ல என்று திருவாய் மலர்ந்தார்! ஆண்கள் பகுதியிலிருந்த பெரும்பாலான "ஆண்கள்" பிற நவீனங்களை கருத்தளவில் ஏற்றுக்கொண்டாலும் இத்தகைய ஒழுக்கமீறலை நவீனம் என்று கருதவில்லை என்று சொன்னது சற்று ஆறுதலான விசயம். அதேபோல், பெண்கள் பகுதியில் "அதை" நியாயப்படுத்திய பெண்மணிகள், இத்தகைய ஒழுக்க மீறல் இயற்கைக்கு முரனாணது என்றவர்களை ஒரு பிடிபிடித்தனர்! இவ்வாறு ஒழுக்கம் மீறுவதும் இயற்கையான நிகழ்வே என்றதுதான் இவர்சொன்ன அபத்தம் என்றால், இறுதியில் இவருக்கு பரிசளித்து கவுரவித்தது அதைவிடக் கொடுமை!



பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் போதிக்கப்பட்ட நெறிகளில் "ஒழுக்கம்" முக்கிய பங்கு வகிக்கிறது. உயிரினங்களில் மனிதப்படைப்பு மட்டுமே ஒழுக்கம் பேணுவதாக நம்பப்படுவதால் வகுப்பறைக்கு மட்டுமின்றி தனிமனித, சமூக வாழ்க்கையிலும் ஒழுக்கம் அவசியம் என்று வலியுறுத்திக் கூறப்படுகிறது. தனிமனித ஒழுக்கமே, ஒழுக்கமுள்ள குடும்பத்தை உருவாக்கும். ஒழுக்கமுள்ள குடும்பமே ஒழுக்கமுள்ள சமூகம் என்று ஒழுக்கம்- தனிமனிதர்கள் மட்டுமின்றி தலைமுறை தாண்டியும் பேசப்படும்.

இன்றைய தலைமுறையினர், நவீனம் என்ற பெயரில் ஒழுக்கம் பிறழ்ந்து பல ஆண்டுகளாகி விட்டாலும், விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டுள்ள ஒழுக்கம் காரணமாக சமூக அமைப்பு ஓரளவு அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கொன்றும்-இங்கொன்றுமாக இலைமறைகாயாக ஒளிவுமறைவாக, குற்ற உணர்ச்சியுடன் நடந்து கொண்டிருந்த ஓரினச்சேர்க்கை எனும் ஒழுக்க மீறல், நவீனம் என்ற பெயரில் பொதுவான நியதியாக திட்டமிட்டு முன்னிறுத்தப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் பொழுதுபோக்கு சாதனங்கள்வரை இந்த விஷக்கருத்தை நியாயப்படுத்தும் மேட்டிமை போக்கு எதிர்கால சந்தியினர் மீதான அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாலியல் அரக்கனான எயிட்ஸின் பிடியிலிலிருந்து மீளமுடியாமல் உலகமும், வல்லரசு கனவில் சஞ்சரித்துள்ள இந்தியாவும் விழிபிதுங்கி நிற்கும்போது, ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும் போக்கு தீவிரவாதத்தை விடவும் சீரியசான விசயம் என்பதை ஆட்சியாளர்களும் அதிகார மட்டமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இயற்கையின் படைப்பில் ஆண்-பெண் என்ற எதிரெதிர் பாலினத்தின் ஈர்ப்பு காரணமாகவே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானதும் தலையாயதுமான தேவையாக உடலுறவு உள்ளது. மனநிலை பிறழ்ந்தவர்கூட உடலுறவு கொண்டால் அதன் இன்பத்தை உணரமுடியும். ஆணுக்குப்பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமே உடலுறவை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை என்பதால்தான் அனைத்து உறுப்புக்களும் ஒத்திருந்தபோதிலும் உடலுறவுக்கான பாலுறுப்புகள் மட்டுமே இயற்கை விதியுடன் பொருந்தும் வகையில் (+/-) வெவ்வேறாக படைக்கப் பட்டுள்ளது. ஒரே உடலமைப்பைக் கொண்டுள்ள புழு, பூச்சி, பறவையினங்களிலும்கூட ஆண்-பெண் பாகுபாட்டை இயற்கை வகுத்து உள்ளதை இந்த அறிவு ஜீவிகள் ஏனோ கவனிக்கவில்லை!

இயற்கைக்கு எதிரான முறையற்ற ஓரினச் சேர்க்கையை இயற்கையான உணர்வு என்பது மடமைத்தனம்! ஆண்-பெண் உறவுகளிலும் முறையான உறவு (திருமணம்) முறையற்ற உறவு (விபச்சாரம்) என்று பகுத்துள்ளபோது, முறையற்ற உறவை விடவும் கேவலமான ஓரினச் சேர்க்கையை இயற்கை உணர்வு என்பவர்கள் நிச்சயம் மனச்சிதைவு கொண்டவர்களாகவே இருக்க வேண்டும்.

பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்வதால் "அது" தவறல்லையாம்! பிறருக்கு தொந்தரவின்றி கொலை, கொள்ளை, ஊழல் இவற்றைக்கூட நியாயப்படுத்தலாம் என்பதை இத்தகைய இயற்கை விரும்பிகளுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும்.

பரிதோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிதோம்பித்
தேரினும் அஃதே துணை

விளக்கம்: ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு பேணிக்காக்க வேண்டும். பலவகை அறங்களையும் ஆராய்ந்து, எவ்வளவு கவனமாக தேர்ந்தாலும் அவ்வொழுக்கமே துணையாக அமையும்.


நன்றி : இந்நேரம்.காம்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP