அப்பாவி வாக்காளனின் ‘இலவச’ கணக்கு
Wednesday, April 06, 2011
தேர்தலின்போது எந்தக் கட்சியின் கொள்கைகள் நல்லவை என்று ஆய்ந்து முடிவு எடுக்க விடாமல் மானாவாரியாக இலவசங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் வாக்காளர்கள் குழம்பியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இதோ நம்மால் ஆன சிறுமுயற்சி.தேர்தல் இலவசங்கள் மூலம் சராசரி ஆண்டு வருமானம்
- திமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.43,200.00
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.52,740.00
- தமிழக மக்களின் தனிநபர் அரசுக் கடன் = ரூ.15,000.00
- மூவர் கொண்ட குடும்பத்தின் மொத்தக்கடன் = ரூ.45,000.00
வருமானம் – கடன்
- திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.43,200-ரூ.45,000 = -1,800.00 ரூ.
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.52,740-ரூ.45,000= +7,740.00 ரூ.
இந்தக் கணக்குப்படி,இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் தலா 1,800 ரூபாய் நஷ்டம் வருகிறது!