Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

க்காஆஆஆஆ த்த்தூ!

Sunday, November 09, 2008

உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்களின் பாதுகாவலர்களாகச் சொல்லி உண்டியல் குலுக்கி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாமர மக்களுக்கு மதவெறியூட்டி கலவரங்களை நடத்தி அரசியல் பண்ணும் சங்பரிவாரக்கும்பல் இலங்கைத் தமிழர்களை இந்துக்களாகக் கருதவில்லை; அவர்களை இன்னும் இராவணின் சந்ததிகளாகவே பார்க்கிறார்கள்!

பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் பதிலாக இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தத் தயங்குவதில்லை. மலேசியாவின் சட்டத்திற்குப் புறம்பாக இந்துக்களைத் திரட்டிப் போராட்டம் செய்துவரும் ஹிண்ட்ராப் எனும் சங்பரிவாரக் கிளைக்கும்பல் மலேசிய போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது "ஐயையோ இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை" என்று மூக்கு சிந்திய தமிழக இந்துமுன்னனிக் கும்பல், ஈழத்தமிழர்களிலும் இந்துக்களுள்ளார்கள் என்பதை அறியவில்லையா?

தமிழக இந்துக்களைப் போன்றே முருகனுக்கு அலகு குத்தி, காவடி எடுத்து, விரதமிருந்து வருகிறார்கள். இலங்கையில் மட்டுமின்றி புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் இந்துசமய திருவிழாக்களைத் தவறாது கொண்டாடி அக்மார்க் இந்துக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.காஷ்மீர் பண்டிட்களுக்காக ர(த்)த யாத்திரைச் செல்லும் அத்வானி இந்தியப் பூர்வகுடிகளான இலங்கைத் தமிழர்களுக்காகவும் ஓர் யாத்திரை செய்திருக்கலாமே?

தமிழ்திரையுலகினர் நடத்திய ஈழத் தமிழர் ஆதரவுப் பேரணியில் இயக்குனர் அமீர்,நடிகர் மன்சூர் அலிகான்,இயக்குனர் சைமன் என்கிற சீமான் ஆகியோர் சிறுபான்மையினர் என்ற காரணத்தால் பெயர்குறிப்பிட்டுக்கைது செய்யக் கோரினார் இல.கணேசன்! உணர்வுப்பூர்வப் போராட்டங்களில் உணர்ச்சி வயப்பட்டு தேசவிரோதமாகப் பேசியது தவறுதான். சட்டப்படி குடியுரிமை பெற்று ,வரிசெலுத்தி,வாக்களித்து தேசப்பற்றுடன் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பார்த்து பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லிவரும் சங்பரிவாரங்களுக்கு அதைச் சொல்ல அருகதையில்லை!

சங்பரிவாரக் கும்பலைப் பொருத்தவரை ஆதாயமில்லாமல் சேற்றில்குதிக்க மாட்டார்கள். இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படுமென்று உறுதியாக நம்பினால் மட்டுமே இந்துக்களுக்காக மூக்குச் சிந்துவார்கள். மலேசிய இந்துக்களுக்காக மூக்கு சிந்தியதுகூட உண்டியலில் வந்துவிழும் காணிக்கைகள் தடைபட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணமே தவிர வேறில்லை.

சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கும் மணல் திட்டுக்கள் தகர்க்கப்பட்டபோது, இந்துக்களின் உணர்வுகள் புண்படுமென்று நிர்வாண சாதுக்களைத் திரட்டி தாண்டவமாடிய சங்பரிவாரங்கள், இலங்கை ராணுவத்தின் குண்டுக்களால் அப்பாவித் ஈழத்தமிழ்மக்களின் குடியிருப்புகள் அநியாயமாகத் தகர்க்கப்படும்போது உணர்வுகள் புண்படவில்லையா? அமர்நாத்தில் கழிப்பிடத்திற்காகப் போராடிய பாஜக கும்பலுக்கு ஈழத்தமிழர் வசிப்பிடங்கள் தகர்க்கப்படுவதை யார்தான் எடுத்துச் சொல்வதோ?

இந்துக்களுக்குப் பாதுகாப்பு என்று சொல்லிக் கொண்டு இனி எவனாச்சும் தமிழர்களிடம் உண்டியல் குலுக்கிக் கொண்டு வந்தால் மறக்காமல் செய்ய வேண்டியது:


"க்காஆஆஆஆ த்தூ"

குறிப்பு: பின்னூட்டங்களைத் துப்பலாகவும் பதிக்கலாம் ;-)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP