சற்றுமுன் காப்பியடித்தது?
Tuesday, May 15, 2007
வலைப்பூ நண்பர்கள் நடத்தும் "சற்றுமுன்" தளம் தொடங்கப்பட்ட புதிதில் உலகெங்கும் நடக்கும் செய்திகளை மொழிமாற்றி அல்லது முன்னுரையுடன் உடனுக்குடன் வெளியிட்டார்கள்.
சமீபத்தில் 'சற்றுமுன்" தளத்தில் வெளியாகும் பதிவுகள் பெரும்பாலும் தட்ஸ்தமிழ் டாட்காம் போன்ற தளங்களிலிருந்து காப்பி அடித்த செய்திகளாகவே இருக்கின்றன. (கஷ்டப்பட்டு செய்தி சேகரிக்கும் தட்ஸ்தமிழ்காரர்கள் வருத்தப்பட மாட்டார்களா?:)
பிறதளங்களை விட தட்ஸ்தமிழ் செய்திகளை தரும் வேகம் சிறப்பானது. மேலும் முன்பு தானியங்கு எழுத்துருவில் இருந்த தளத்தை, சமீபத்தில் யூனிகோட் எழுத்துருவுக்கு மாற்றி இருக்கிறார்கள். ஆகவே, அதில் வரும் செய்திகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதைப் படிப்பது சற்றுமுன் தளத்தை எந்த விதத்தில் வேறுபடுத்தும்?
வெவ்வேறு நாடுகளில், நகரங்களிலிருந்து பங்கேற்று ஆர்வமாக எழுதும் வலைப்பூ செய்தியாளர்கள் ஆங்காங்கு நடக்கும் அல்லது நாளிதழ்களில் வெளிவராத உள்ளூர் செய்திகளை பதியலாமே. இதன் மூலம் மற்ற செய்திகளை விட அதிக நம்பகத்தனமையைப் பெற முடியும்.
"சற்றுமுன்" நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற ஆதங்கத்தில் சொல்லி விட்டேன்.
அப்புறம், சற்றுமுன் வெளியான என் இன்னொரு பதிவையும் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும். :-)
Read more...