சிம்புவின் கன்னம் சிவந்தது

Saturday, January 28, 2006

குடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.நடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில், குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.

சிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக் லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவா போன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடி விட்டனர்.

இருட்டில் சிம்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டே அத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.

அடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்து வந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

ரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக் கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்கு வந்துள்ளார்.

எவன்டா என் மகனை அடிச்சது என்று 'செயின் ஜெயபால்' ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார். இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன் அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர் டாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சக நடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமை என்றால்....?
http://thatstamil.oneindia.com/specials/cinema/heroes/simbu12.html

செயின் ஜெயபால் ஸ்டைல்ல பின்னூட்டம் போடுங்கடா...சாரி போடுங்க!

Read more...

புத்தாண்டுச் செய்தி

Tuesday, January 24, 2006



சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானம். எட்டு குழந்தைகள் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராக களத்தில் நிற்கின்றனர்.

Ready!
Steady!!
Bang!!!

பொம்மை துப்பாக்கி வெடித்ததும் ஓடுகளத்தில் நிற்கும் போட்டியாளர்கள் ஓடத் தொடங்குகிறார்கள். கஷ்டப்பட்டு சில அடிதூரங்கள் ஓடியிருப்பார்கள். அவர்களில் ஒரு சிறுமி தட்டுத் தடுமாறி கீழே விழுந்தாள். விழுந்ததும் அழத்தொடங்குகிறாள். சிறுமியின் அழுகுரலைக் கேட்ட மற்ற ஏழு சிறுமிகளும் தங்கள் ஓட்டத்தை நிறுத்தி விட்டு கீழே விழுந்த சிறுமியின் அருகில் வருகின்றனர்.

அவர்களில் ஒருத்தி, கீழே விழுந்த சிறுமியை பரிவுடன் தடவிக் கொடுத்து "இப்போ வலி குறைஞ்சிடுச்சா?" என்று அன்பாகக் கேட்டு ஆறுதலாக விழுந்த சிறுமியை முத்தமிடுகிறாள். மற்றவர்களும் அவளைத் தூக்கி நிறுத்தி, அவளுக்குத் துணையாக தங்களுடன் அரவணைத்து வெற்றிக்கோடு நோக்கி அழைத்து வருகின்றனர்.


போட்டியை நடத்திக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து நின்றனர். உணர்ச்சிப் பெருக்கில் பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து எழுப்பிய கரவோசம் விண்ணை எட்டியது. சிலருக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் கசிந்தது.

ஆம்! இது நடந்தது ஹைதராபாத்தில். தேசிய மனநலம் குன்றியோருக்கான பள்ளியில் (National Institute of Mental Health) போட்டியின் போது நடந்த நிகழ்சி இது. போட்டியில் கலந்து கொண்ட எட்டு சிறுமிகளும் மனநலம் குன்றியவர்கள். ஆம்! மனரீதியில் ஊனமுற்றவர்கள்.

போட்டி நிறைந்த இந்த உலகிற்கு இவர்கள் சொன்னது எதுவாக இருக்கும்?

மனிதத்தைத் தொலைத்து விட்டு உலக ஆதாயங்கலுக்காக ஓடிக் கொண்டிருப்பவர்களே தடுக்கி விழுந்த மனிதத்தையும் அழைத்துச் செல்லுங்கள் என்றா?

"Successful people help others who are slow in learning so that they are not felt far behind"

This is really a great message. Spread it!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP