Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

அச்சுருத்தல் இல்லாத குடியரசு தினம்! தினமலர் திருந்தி விட்டதா?

Thursday, January 26, 2012

சுதந்திர தினம்,குடியரசுதினம் மட்டுமின்றி தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற மத பண்டிகை தினங்களிலும் "தீவிரவாத அச்சுருத்தல்", குடியரசு/சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பாகிஸ்தான்/லஷ்கர் தீவிரவாதிகள் சதி/ ஊடுறுவல்" என்றெல்லாம் பீதிகிளப்புவதோடு, ஓரிரு மாதங்கள் முன்னதாவே சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக முஸ்லிம்களை அதிலும் தாடி வைத்திருந்தால் கூடுதல் அடைமொழியுடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு கைது செய்து, மேற்கண்ட தேசிய கொண்டாட்ட தினங்களில் முஸ்லிம்களை தனிமைபடுத்தி சுகம்கண்ட ஊடகங்களில் 'தினமலம்' மற்றவர்களைவிட சற்று கூடுதலாகவே சுகம் கண்டது.


நேற்று 26-01-2012 இந்தியாவில் 56 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த செய்தியில் இடம்பெற்றிருந்த தினமலர் செய்தியின் வாசகங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படியே பதிகிறோம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும், மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.

நமது கேள்வி என்னவென்றால்,

  • "இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? நாட்டில் இதுவரை குழப்பம் செய்த தீவிரவாதிகள் எல்லோரும் திருந்தி விட்டார்களா?
  • நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராடி வருபவர்களின் கோரிக்கைகளை எல்லாம் அரசு ஏற்று நிறைவேற்றி வைத்து விட்டதா?
  • லஷ்கர் தீவிரவாதிகள், எல்லை தாண்டுவதை நிறுத்திக் கொண்டார்களா?
  • இதுவரை இத்தகைய பீதியைக் கிளப்பி,பரபரப்பு ஏற்படுத்தியது நம்நாட்டு உளவுத்துறையிலுள்ள சில மதவெறியர்களா?
  • அல்லது தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் திருந்தி விட்டனவா?
ஒரு சேஞ்சுக்கு குடியரசு தினத்தன்று மதக்கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி என்று கோவை பள்ளிவாசலில் நேற்று நடந்த தாக்குதலைச் செய்தியாக போட்டிருக்கலாம். பரவாயில்லை! சட்டம் தன் கடமையைச்செய்து நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் உண்மையான தீவிரவாதிகளை அடையாளம் காட்டும் என்று குடியரசு இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

அமைதியாக நேற்றைய 63 ஆவது குடியரசு கொண்டாட்டங்களில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை குடியரசு தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

இதேநிலை நாட்டின் அனைத்து கொண்டாட்டங்களிலும் நீடிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.வாருங்கள் வளமான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்வோம்!

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

Read more...

டீவிரவாதி தெரியுமா?

Tuesday, July 26, 2011

தினமலர் தீவிரவாதிகள் விசயத்தில் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சம் காட்டும் என்பதற்கு இன்றைய செய்தி இன்னொரு சாம்பிள்! தினமலர் செய்தியை அப்படியே படித்துவிட்டு தலைப்பை மீண்டும் ஒருமுறை சத்தம்போட்டு சொல்லுங்க.

திருச்சி: திருச்சியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவரின் பின்னணியில் விடுதலைப்புலிகள் அல்லது தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற படையப்பா (44). இவர், கே.கே.,நகரில் உள்ள டீக்கடையில், டீமாஸ்டராக வேலை பார்கிறார். இவரது வீட்டில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து வருவதாக, கே.கே.,நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கே.கே.,நகர் இன்ஸ்பெக்டர் நிக்ஷன், எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ஷீலா மற்றும் போலீசார் நேற்று இரவு ஏழு மணிக்கு உடையான்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டனர்.அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதை கண்டு போலீஸர் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.





வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு சம்பவ இடத்துககு வந்து வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தார். தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்ரஸ் குண்டுகள், வயர் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றம் ஒன்னரை கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர்.இதுகுறித்து கே.கே.,நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணைகமிஷனர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமகிருஷ்ணனுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றிப்பட்ட வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த குண்டு வெடித்தால் பெரிய பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கே.கே.,நகர் பகுதியில் பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, இச்செயலில் விடுதலைப்புலிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.தினமலர்

எனக்கு என்ன வருத்தம் என்றால் பெரும் பொருட்சேதமும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை ஒரு இடத்தில்கூட தீவிரவாதி என்றோ அல்லது அவரது மதத்தையும் சேர்த்து __ தீவிரவாதி என்றோ செய்தி வெளியிடவில்லை.

தீவிரவாதம், தீவிரவாதி என்பதற்கெல்லாம் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் என்ன அளவீடு வைத்துள்ளன? டீவிரவாதி என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே!

Read more...

தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் - தினமலரின் இருட்டடிப்பு

Wednesday, June 23, 2010

தினமலர்.காமில் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேக இணையபக்கம் திறந்து, அதில் கோவை-உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறார்கள். நேற்று வெளியான "கம்யூட்டரும் தமிழும்" என்ற கட்டுரையில் தமிழை கணிமைப்படுத்துவதற்குப் பாடுபட்டத் தமிழர்கள் குறித்த தகவல்களில் அதிரை உமர் தம்பி பற்றிய ஒரு குறிப்புகூட இல்லை!

இதுகுறித்து தினமலர் ஆசிரியருக்கு coordinator@dinamalar.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை. கட்டுரையாக வெளியிடாவிட்டாலும் சம்பந்தப்பட்ட கட்டுரையில் பின்னூட்டமாக அல்லது ஆசிரியர் பின்குறிப்பாக உமர்தம்பி குறித்த தகவலை இணைத்திருக்கலாம். தினமலரிடம் ஊடக தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. அதுவும் முஸ்லிம்கள் குறித்த விசயத்தில் தினமலரின் நேர்மை உலகறிந்தது என்பதால் இனியும் எதிர்பார்க்க முடியாது.

ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தலாம் என்ற நிலைமாறி கணிப்பொறி,கணினி என தமிழாக்கப்பட்டு உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் இணையத் தமிழ் மாநாட்டு அரங்கிற்கு "உமர்தம்பி" அரங்கு என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் கணிமைக்குப் பங்களித்தவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பெயரால் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாதங்களாக வலைப்பூ முதல் இணையம், சஞ்சிகை, வானொலி என அனைத்து தரப்பிலும் உலகத் தமிழர்களின் கோரிக்கைக்குரல் ஒலிப்பது தினமலரு மட்டும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

உமர்தம்பி அவர்களின் தமிழ்சேவையை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமின்றி, தமிழ்கணிமை வளர்ச்சியில் தினமலர் நிறுனரையும் சந்தடிச்சாக்கில் குறிப்பிட்டு உள்ளது நகைப்பிற்குறியது. தினமலர் ஒருங்குறிக்குமாறி ஓரிரு வருடங்களே ஆகின்றன. மேலும், அது பயன் படுத்திவரும் "லதா" ஒருங்குறி எழுத்துரு சிலவருடங்களுக்கு முன்புதான் செம்மை படுத்தப்பட்டது. ஆனால் உமர்தம்பி அவர்களின் தேனீ வகை இயங்கு எழுத்துருக்கள் 2003 முதலே இணையத்தில் உலா வருகின்றன!

தமிழுக்கு தானமளித்த உமர்தம்பிக்கு தினமலரின் அங்கீகாரம் தேவையில்லை என்றாலும் உண்மையிலேயே தமிழர்கள்மீதும் தமிழ்மீதும் பற்று இருந்தால், தமிழை கணினியில் புகுத்துவதில் முன்னோட்டியாயிருந்த தமிழ் முஸ்லிம்கள் குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கலாம்.

தினமலர் வகையறாக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நீசமொழியாக இருந்துவந்த தமிழை வைத்து பிழைப்பு நடக்கும் என்றால் மட்டுமே 'தமிழ்பற்று' தலைதூக்கும். தமிழ் கணிமை வரலாற்றைச் சொல்லும் கட்டுரையின் தலைப்புக்கு "கம்யூட்டரும் தமிழும்"! என்று பெயரிட்டிருப்பதிலிருந்தே தினமலரின் செம்மொழித் தமிழ்பற்று பல்லிளிக்கிறது!

(பி.கு:தினமலருக்கு அனுப்பிய மடல் இன்று மாலைக்குள் வெளியிடப்படாத பட்சத்தில் எமது வலைப்பூவில் வெளியிடப்படும்)

அன்புடன்,
அதிரைக்காரன்

Read more...

தினமலருக்கு முதல் ஆப்பு!

Wednesday, September 10, 2008

சமீபத்தில் தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக டென்மார்க் பத்திரிக்கையில் வெளியான முஹம்மது நபி[ஸல்] அவர்களை இழிவு செய்யும் விதமாக வெளியான கேலிப்படத்தை வெளியிட்டது. ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய முஸ்லிம்கள வீதிக்கு வரவழைத்து காவல்துறையினரின் தடியடியைப் பெற வைத்த தினமலர் ஒப்புக்கு "வருந்துகிறோம்" என்று வெளியிட்டது.

தினமலரின் இந்த விஷமத்தனத்தால் கொதிந்தெழுந்த தமிழக முஸ்லிம்கள் தினமலரை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் தினமலருக்கு ஆப்படித்துள்ளது.காகித வடிவப் பதிப்புக்கும் ஆப்படிக்கும் முயற்சிகளை பலவேறு அமைப்பினரும் துரிதப்படுத்தி வருவதாக பெயர் சொல்ல விரும்பாத உளவுத்துறை அதிகாரி (தினமலர் பாணி;-) தெரிவித்தார்.

இனி, தினமலர் பெருநாள், ரமலான் மலர் வெளியிட்டு முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த நினைத்தாலும் தினமலரின் சூழ்ச்சியை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். தினமலரின் சரிவு தொடங்கி விட்டதால் என் பங்குக்கு தினமலர் ஸ்டைலில் சொல்லிக் கொள்ள விரும்புவது!

வருந்துகிறோம்!

Read more...

குரங்குகளுக்குப் பாலம் கட்டத் தெரியாது - தினமலர்

Wednesday, August 06, 2008

தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் வளம் சேர்க்கும் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு சங்பரிவாரங்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதற்குக் காரணம். ராமர் இலங்கைக்குச் செல்வதற்காக குரங்குகளால் கட்டப்பட்ட பாலம்??? இடிபடும் என்றும், இது கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்று சொல்லிவரும் சூழலில், சங்பரிவாரங்களின் ஊதுகுழல் தினமலர்/ம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், குரங்குகளுக்காக மனிதர்கள் பாலம் அமைத்துக் கொடுத்ததாகச் சொல்லிப் பரவசப் பட்டுள்ளது!

ராமருக்குப் பாலம் கட்ட உதவிய குரங்குகளுக்கு, தங்கள் சொந்தத்தேவைக்குப் பாலம் கட்டத் தெரியாதா?

அல்லது




கர்னாடகக் குரங்களுக்குப் பாலம் கட்டத் தெரியாதா?

ஒன்றுமே புரியவில்லை. புரிந்தவர்கள் பின்னூட்டலாம்!

Read more...

பாபி ஜிண்டால் ஜெயித்தால் நமக்கென்ன?

Monday, October 22, 2007

அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுனராக இந்திய வம்சாவழியைச் சார்ந்த பாபி ஜிண்டால் வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் பிறந்த ஒருவரை அமெரிக்கர்கள் மாகாண ஆளுநராகத் தேர்ந்தெடுத்துள்ளதை பலரும் பெருமிதப்பட்டு எழுதியுள்ளார்கள். தேசத்துரோகிகள்!!!

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என இந்தியாவிலிருந்து அமெரிக்க டாலருக்குச் சேவை செய்யச் சென்ற இந்தியர்களைப் பற்றியும் பெரிதாக விளம்பரம் செய்து தேசபக்தியை அவமதிக்கிறார்கள்!கல்பனா சாவ்லா அமெரிக்க விண்கலத்தில் வெடித்துச் சிதறிய விபத்தில் இறந்தார். சகமனுஷி என்பதற்காக இரங்கல் தெரிவிக்கலாம். அவர் பெயரால் விருது வழங்கும் அளவுக்கு அமெரிக்க மோகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விட்டு வைக்கவில்லை!

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லோகநாதனின் இறுதிச்சடங்கில் அவரின் குடும்பத்தினர் கலந்து கொள்ளச் செல்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி சிறப்பு கவனம் எடுத்ததை சிலமாதங்களுக்குமுன் செய்திகளில் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.

சமீபத்தில் சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வந்தபோது எல்லா பத்திரிக்கைகளும் ஏதோ விண்ணுல தேவதையே வந்திறங்கியதைபோல செய்தி வெளியிட்டனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஒருபடி மேலே போய் சுனிதா வில்லியம்ஸ் இந்தியப் பெண்களின் முன்மாதிரி என்றார்.

சுனிதா வில்லியம்ஸ் அல்லது கல்பனா சாவ்லா போன்றவர்களால் இந்தியாவுக்கோ அல்லது இந்தியர்களுக்கோ எந்த நன்மையும் கிடையாது! சொல்லப்போனால் தீங்குதான்! இவர்களைப் போல் அமெரிக்கச் சேவகம் செய்தால்,பிரபலம் அடையலாம் என்ற எண்ணம்தான் வளரும்.

2020 இல் அமெரிக்காவுக்கு ஆப்படிக்க இருக்கும் இந்தியாவின் வல்லரசுக் கனவை இத்தகைய அமெரிக்க மோகம் தடுக்கும் என்பதை இந்தியாவை நேசிப்பவர்கள் உணர வேண்டும்.

என்னைப் பொருத்தவரை இந்தியாவில் படித்து, குறைந்த சம்பளமாக இருந்தாலும் இந்தியாவுக்காகவே உழைக்கும் உள்நாட்டு ஊழியர்கள்தான் பெருமிதப்படத்தகுதியானவர்கள். இதை அமெரிக்காவில் இந்தியன் ஒருவன் கக்கூஸ் கழுவினாலும் பெருமையாகத் தம்பமடிக்கும் தினமலர் போன்ற அமெரிக்க அடிவருடி பத்திரிக்கைகள் உணர வேண்டும்.

என்னதான் அமெரிக்காவுக்கு லாவனி பாடினாலும், தினமலரை டாய்லெட் டிஸ்யூவாகக் கூட வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதை தினமலர் உணர்ந்து அடக்கிவாசிக்க வேண்டும்.

Read more...

ஈரான் பல் டாக்டரின் பல்லை உடைப்பேன்! - ஜார்ஜ் புஷ்

Tuesday, April 03, 2007

டோனி ப்ளேரும் ஜார்ஜ் புஷ்ஷும் வெள்ளை மாளிகையில் அவசர சந்திப்புக்குப் பிறகு சர்வதேச செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள்.தன்னுடைய கோட் பட்டனை மூடிக்கொண்டே மேலுதட்டைக் கடித்துக் கொண்டு புஷ் ஆவேசமாக வருகிறார்.டோனி ப்ளேரும் புஷ்ஷுடன் கைகுலுக்கி விட்டு வாய்பொத்தி ஒரு ஓரமாக நின்று புஷ்ஷின் அறிக்கைக்காக ஆயத்தமாகிறார்.

புஷ்: நமது உடன்பிறவா சகோதரர் டோனியின் அன்புக் கட்டளையை மதிக்காமல் ஆணவமாக இங்கிலாந்து கடற்படையினரை பிடித்து வைத்திருக்கும் ஈரானுக்கு சரியான பாடம் கற்பிக்கப் போகிறோம்!சரியாகச் சொல்வதென்றால் மினி உலகக்கோப்பை....ஸாரி மினி உலகப்போர் -3 என்று சொல்லலாம்!

(ஒட்டு மொத்த நிருபர்களும் பரபரப்பாகிறார்கள்.ஃபாக்ஸ் நியூஸ் நிருபரின் பேனாவில் மை இல்லாததால் பேனாவை டென்சனுடன் உதறுகிறார்.டோனி ப்ளேர் ஓடிவந்து தன்னுடைய பேனாவைக் கொடுக்கிறார்.)

பி.பி.சி: மிஸ்டர் ப்ரெசிடெண்ட்! ஈரான் மீது அணுகுண்டு வீசுவீர்களா?

புஷ்: (புன்முறுவலுடன்) அவசரப்பட்டு அணுகுண்டு வீசிவிட மாட்டோம். ஐக்கிய நாடுகள் சபையில் இதற்கான சிறப்புத் தீர்மானம் போட்டு பான் கீ மூன் அவர்களின் அனுமதியுடன் குண்டு வீசவே அமெரிக்கா விரும்புகிறது.

சி.என்.என்: பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் ஈராக் மீது படையெடுத்தீர்கள். கடைசியில் அப்படியொன்றும் இல்லை என்பதால் உலக மக்களின் வெறுப்பை சம்பாதித்தீர்கள். அதேபோன்ற தவறை ஈரான் விசயத்திலும் அமெரிக்கா செய்யுமா?

புஷ்: ஈராக் விசயத்தில் FBI தந்த ரிப்போர்ட்டில் டைப்பிங் மிஸ்டேக் இருந்ததை நேற்றுதான் கோண்டி சுட்டிக் காட்டினார்.IRAN என்பதற்குப் பதிலாக IRAQ என்று டைப் செய்யப்பட்டிருந்தது. நானும் அப்படியே நம்பி படித்துத் தொலைத்து விட்டேன்.இத்தகைய டைப்பிங் மிஸ்டேக் ஈரான் விசயத்தில் நடக்காமல் கவனமாக இருப்போம்.

பாக்ஸ்: மிஸ்டர் பிரசிடெண்ட்! ஈராக் போரில் ஏழு இலட்சம் ஈராக்கியர்களைக் கொன்று சாதனை படைத்திருக்கிறீர்கள்.இந்த சாதனையை ஈரானுடனான போர் முறியடிக்குமா?

புஷ்: ஈரானுடனான போரில் பல யுக்திகளைக் கையாள்வோம்! 2007க்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர குறைந்தது ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கொன்றாவது ஈரானில் அமைதியை ஏற்படுத்துவோம். முக்கியமாக, அஹமது நிஜாஸின் பல் டாக்டரின் பல்லை உடைப்போம்!

தினமலர்: பல் டாக்டரின் பல்லை உடைப்பீர்களா!!! சற்று விபரமாகச் சொல்ல முடியுமா? அந்த பல் டாக்டர், அல் காயிதாவுக்கு பல் சப்ளை செய்பவரா?

புஷ்: ஆப்கானில் சில இலட்சம் முஸ்லிம்களைக் கொன்றோம்! யாரும் கேட்கவில்லை! ஈராக்கில் ஏழு இலட்சம் முஸ்லிம்களைக் கொன்றோம்!!அதையும் யாரும் கேட்கவில்லை!ஈரானில் ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கொன்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!!!அஹமது நிஜாஸின் பல் டாக்டரின் பல்லை உடைப்பேன் என்றதை மட்டுமே எல்லோரும் கவனிப்பார்கள்!!!

மேலும்,துரதிஷ்டவசமாக அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எனக்கு எதிராக போர்க் குற்றங்களை விசாரித்தால் சாதாரண பல் டாக்டரின் பல்லை உடைப்பேன் என்றதற்காக மட்டுமே விசாரிக்கப் படுவேன்! தீவிரவாதத்திற்கு எதிரான போர்களில் எதிரியின் பல்லை உடைக்கும் உரிமை (Special Right for Tooth-Breaking 2007) என்ற சிறப்புச் சட்டத்தை அதிபருக்குள்ள வீட்டோ பவர்கொண்டு எப்படியும் நிறைவேற்றுவேன்.

பேட்டியை நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டே சி.என்.என்னில் லார்ரி கிங் President's special rights for Tooth-Breaking 2007 பற்றிய காரசாரமான விவாதம் நடக்கிறது! செய்திகளை முந்தித்தரும் தினமலரில் "ஈரான் பல் டாக்டரின் பல் தப்புமா?" என்ற தலைப்புச்
செய்தியுடன் பரபரப்பாக விற்பனையாகிறது!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP