Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

சுடச்சுட 'உள்குத்துச்' செய்திகள்

Wednesday, March 07, 2007

பதிவின் சாரத்தை தலைப்பே சொல்கிறது. இனி அனானிகளுக்குக் கொண்டாட்டம்தான் போங்க!

1) நேபாளி கூர்க்காவாகலாம்! இந்திய எம்.பி ஆக முடியுமா?

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மோனி குமார் சுப்பா. இவர் தேஸ்பூர் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஆனால் இவர் நேபாளம் நாட்டை சேர்ந்தவர் என்றும், அங்கு ஒரு குற்றத்துக்காக, 1971-ம் ஆண்டு, ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. (நம் நாட்டில் தண்டணை விதிகப்பட்டவர்கள் நேபாளத்தில் தேர்தலில் நிற்கலாம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்!) அவர் நேபாளத்தில் இருந்து, அசாம் மாநிலத்துக்குள், சட்டவிரோதமாக வந்து, அங்கு லாட்டரி வியாபாரம் செய்து பெரிய தொழில் அதிபர் ஆனார் என்றும் கூறப்படுகிறது. அவர் முதலில் சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டு இருக்கிறது. (இதைத்தான் அரசியலில் படிப்படியாக முன்னேறுவது என்பார்கள்!)
இந்த பிரச்சினையை, டெல்லி மேல்-சபையில், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, சமாஜ்வாடி, மற்றும் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அவர்கள் பேசியதாவது:-

பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சுப்பா, இந்தியாவை சேர்ந்தவரா? அல்லது வெளிநாட்டை சேர்ந்தவரா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்பதை டி.வி. சேனல் ஒன்று தெளிவு படுத்தி இருக்கிறது.

அயல் நாட்டை சேர்ந்த ஒரு குற்றவாளி, இந்தியாவில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகி இருக்கிறார். அவர் இந்திய அதிகாரிகளை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றி இருக்கிறார். அவர் நேபாள நாட்டின் குடி உரிமை பெற்றவர்.

அவர் தனது வயது, பிறந்த இடம், கல்வித்தகுதி ஆகியவற்றை மறைத்து, வேட்பாளர் பத்திரத்தில் தவறான தகவல்களை கொடுத்து இருக்கிறார். இதுபற்றி இந்த சபையில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதற்கு சபைத்தலைவர் பொறுப்பில் இருந்த உதவி தலைவர் ரெஹ்மான்கான் அனுமதி மறுத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த பொருள் பற்றி, (காங்கிரஸ் எம்பியைச் சொல்லவில்லை! விவாதப் பொருள் என்று படிக்கவும்) இந்த சபையில் விவாதிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர், இந்த சபையின் உறுப்பினர் அல்ல.அவர், பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். மேல்சபை உறுப்பினராக இருந்தால், இங்கு விவாதிக்கலாம். என்றாலும், இதுபோன்ற பிரச்சினையை விவாதத்துக்கு கோரும் முன், இதுபற்றிய நோட்டீசை சபைத்தலைவருக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி. இவ்வாறு துணைத்தலைவர் கூறினார்.

இந்த பிரச்சினை பற்றி, டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசுவது என்றும், இந்த பொருளை, உரிமைக் குழுவுக்கு அனுப்ப கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. (எதிர்கட்சித் தலைவர் அத்வானி, இந்த விசயத்தில் அடக்கிவாசித்தால் நல்லது! அய்யாவுக்கு சொந்த ஊர் கராச்சி!!)

காங்கிரஸ் எம்.பி. எம்.கே. சுப்பா இந்தியரா? நேபாளியா? என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றும் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் ``சுப்பா, தனது குடியுரிமையை நிரூபிக்கும் தஸ்தாவேஜுவை ஏப்ரல் 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. (நல்லதாப் போச்சு ஏப்ரல்-1 ஆம் தேதியன்று என்று சொல்லாமல் விட்டார்களே!)
http://www.dailythanthi.com/article.asp?NewsID=320540&disdate=3/8/2007

2) காங்கிரஸ் கட்சியை கல்லரையிலும் வளர்க்கத் திட்டம்!

3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கட்சிப் பதவி தொண்டர்கள் அதிர்ச்சி!(மேலோகப் பதவி அடைந்தவருக்கு தவறாகப் புரிந்து கொண்டு கட்சிப் பதவி கொடுத்திருக்கிறார்களோ?) இறந்துபோன எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதை அறிந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெல்காம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், பெல்காம் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவருமான என்.எஸ். ரத்னபிரபா புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்தநிலையில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள மால்மருதி வட்டத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.கே.தாக்கத் பெயரும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டதும் பற்றுள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சி அடைந்தனர். ஆகா கட்சியை இனி ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்று மாவட்ட தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

இதற்கு காரணம் அந்த பொறுப்பாளர் மீது தொண்டர்களுக்கு இருந்த வெறுப்பு கிடையாது. ஆனால் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. இறந்து 3 ஆண்டுகள் ஆனபிறகு அவருக்கு காங்கிரஸ் கட்சியில் அவரை தேடிப்போய் பதவி கொடுத்து இருக்கிறார்களே என்று தொண்டர்களுக்கு ஆதங்கம்.

பெல்காம் மாவட்டத்தில் 'சவுத்தி' என்ற சட்டமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக முன்பு தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான் ஜி.கே.தாக்கத். அவர் இறந்து 3 ஆண்டுகள் ஆனபிறகு கட்சியில் பதவி கொடுத்து இருப்பதுதான் வேடிக்கை.

அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் ஒரு பதவி மாற்று கட்சியிலும் ஒரு பதவி வழங்கப்பட்டுள்ள அரசியல் வேடிக்கை நிகழ்ச்சியும் இதே பெல்காம் மாவட்டத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மதசார்பற்ற கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட உமாதேவி தோப்பன்னவர் என்பருக்கும் காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப் பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோபா என்பவருக்கு கட்சிக்குள்ளே இருவேறு இடங்களில் இரட்டை பதவி கொடுத்து தொண்டர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே மாவட்டத்தில் ஆஷாகோரே, பி.எஸ்.ஷில்பா மற்றும் சுனிதாசர்வான் ஆகியோருக்கும் இருவேறு இடங்களில் இரட்டை பதவிகள் வழங்கப் பட்டுள்ளன. மாவட்ட தலைவரின் இந்த அரசியல் குழப்படியை பார்த்து தொண்டர்கள் ஆச்சரியமும், ஆவேசமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=320753&disdate=3/8/2007

ஊழல் பேர்வழிகளை பொதுமக்கள் முன்னிலையில் மின்கம்பத்தில் தூக்கில் போட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி கூறினார். நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் உள்ளது. ஊழலில் இருந்து எதுவுமே தப்பவில்லை.ஒவ்வொருவரும் இந்த நாட்டை கொள்ளையடிக்க விரும்புகின்றனர். (இதைத்தானே ஜனநாயகம் என்கிறோம்!) இந்த ஆபத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஒரே வழி, ஊழல் பேர்வழிகளில் சிலரை, பொதுமக்கள் முன்னிலையில் மின்கம்பத்தில் தூக்கில் போட வேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.

எனினும் இதை செய்ய சட்டம் எங்களை அனுமதிக்கவில்லை. இல்லாவிட்டால் ஊழல் பேர்வழிகளை மின்கம்பத்தில் தூக்கில் போட உத்தரவு போட்டு விடுவோம்.

ஊழல்வாதிகளை மின்கம்பத்தில் தூக்கில் போட வேண்டும் என்று கூறிய நீதிபதி ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் நியமிக்கப்பட்டவர் அல்ல! முன்பு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=320763&disdate=3/8/2007

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP