Showing posts with label கலைமாமணி. Show all posts
Showing posts with label கலைமாமணி. Show all posts

கொலைமாமணி விருதுகள் அறிவிப்பு

Wednesday, February 25, 2009

கலைச்சேவை புரிந்ததற்காக ஒவ்வொருவருடமும் தமிழக அரசு சிலரைத் தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. அவுத்துப் போட்டு ஆடியும் வருமான வரிஏய்ப்பிலும் முதலிடத்தில் வரும் சினிமா நடிகர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் விருது வழங்குவது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

திரைப்படத்துறையில் இருக்கும் எவரும் தாங்கள் கலைச்சேவை செய்யவே வந்ததாகச்சொல்லாதபோது இத்தகைய விருதுகள் வழங்கப்பட வேண்டுமா? ஆளுங்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த திரைப்பட நடிக-நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை என்பதிலிருந்து ஆளும்கட்சி அடிவருடிகளுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாகவே கலைமாமணி விருதுகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

சினிமா பின்னணி கொண்டவர்கள் அரசியலில் இருக்கும்வரை இதுபோன்ற விழாக்களையும் விருதுகளையும் ஒழிக்க முடியாது. அதனால் இதுபோன்ற வெட்டிப்பேச்சுக்களால் பயனில்லை என்பதால் கொலைச்சேவைகளுக்காக கொலைமாமணி விருதுகளுக்கு கீழ்கண்டவர்களைப் பரிந்துரைக்கிறேன்.

ஜார்ஜ் புஷ் (அமெரிக்கா) - நாடுபிடிக்கும் கலை

ஏரியல் ஷரோன் (இஸ்ரேல்) - அகதி முகாம்களைத் தாக்கும்கலை

யஹூத் ஓல்மர்ட் (இஸ்ரேல்) - பாஸ்பரஸ் குண்டுவீசும்கலை

நரேந்திர மோடி (இந்தியா) - இனச்சுத்திகரிப்புக் கலை

L.K.அத்வானி (இந்தியா) - கட்டிட இடிப்புக் கலை

மஹிந்த ராஜபக்சே (இலங்கை) - இனச்சுத்திகரிப்புக் கலை


விடுபட்ட கொலைமாமணிகள் பெயர்களை வலைமாமணிகள் பின்னூட்டம் வாயிலாகவும் பரிந்துரைக்கலாம் ;-)

Read more...

கலைகள் வளர்த்த விரல்மாமணி சிலம்பரசன்

Sunday, September 02, 2007

நடிகர் விஜய்க்கும் இயக்குனர் ஷங்கருக்கும் டாக்டர் பட்டம் வழங்கிய சூடு அடங்கும் முன்னர் நேற்று கலைமாMoney பட்டங்களை தமிழ் சினிமா நடிகர்/நடிகைகளுக்கு வழங்கியுள்ளார் நமது 'கலைஞர் மாமணி'. சினிமாத் துறையின் மூலமே கலைகள் வளர்க்கின்றன என்ற ஆரிய மாயையில் இருந்து இன்னும் கலைஞர் அவர்கள் விடுபடவில்லை போலும்!

இந்த ஆண்டின் கலைமாMoneyகளில் விரல் மன்னன் 'சிம்பு' வளர்த்த ஆயகலைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மொபைல் காவியம்:
நயந்தாரா என்ற சேரநாட்டு இளவரசியை விரட்டி விரட்டிக் காதலித்து, பின்னர் இளவரசி நயந்தாரா தெலுங்கு தேசத்திற்குச் சென்று சிற்றரசன் நாகார்ஜுனருடன் கலைச்சேவை செய்தார்.

இதனால் விரல்மன்னனுடன் ஊடல் எழுந்தது. இதன் உச்சக்கட்டமாக விரல்மன்னன் சிம்பு தனது கைப்பேசியில் பதிவு செய்திருந்த சேரநாட்டு இளவரசி நயந்தாராவுடன் நடத்திய அந்தப்புற கலைச்சேவையை மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதழ்கடி வித்தை:
இதே சேரநாட்டு இளவரசியின் இதழ்களைக் கடித்தபடி சென்னை சென்ரல் இரயில் ஸ்டேசனில் கட்-அவுட்டாக நின்று இந்தியா முழுவதும் தமிழகப் பண்பாட்டைப் பரப்பினார்.

கெட்டதமிழ்:
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவித்தாலும் அறிவித்தார்கள் விரல் மன்னன் சிம்புவின் லேட்டஸ்ட் படத்திற்கு அழகான தமிழில் 'கெட்டவன்' என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

இப்படியாக பல்வேறு வழிகளில் தமிழ், பண்பாடு, கலைகளை வளர்த்துவரும் விரல்மன்னன் சிம்புவுக்கு கலைமாMoney பட்டம் கொடுத்தது சரியா? உண்மையான கலைச்சேவை செய்த தகுதியுள்ள கலைமாமணிகளை அவமதிப்பதாகவே இருக்கிறது இந்த ஆண்டின் கலைமாMoney களின் தேர்வு!

எது எப்படியோ இம்மாதம் ஒளிபரப்பாகவிருக்கும் கலைஞர் டிவிக்கு சில மணி நேரங்களுக்கு ஒரு புரோகிராம் கிடைத்து விட்டது ;-)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP