பகுத்தறிவு - கிலோ என்ன விலை?
Sunday, March 22, 2009
மதவாதி: ஐயா! வெயில் காலத்துல கருப்புச் சட்டை போட்டிருக்கிறீர்களே?
பகுத்தறிவுவாதி: ஆமாங்கய்யா! நான் ஒரு பகுத்தறிவுவாதி!
மதவாதி: BLACKBODY RADIATION தெரியும்தானே?கருப்பு நிறம் வெப்பத்தைத் தக்கவைக்கும் பண்புடையது. வெயில்காலத்தில் கருப்புச்சட்டை உடம்புக்கு நல்லதல்ல என்று உங்கள் பகுத்தறிவிற்குத் தெரியாதா?
************
மதவாதி:ஐயா நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா?
பகுத்தறிவுவாதி: ஆமா! பகுத்தறிவுவாதிகள் சிலை வணங்கமாட்டோம்!
மதவாதி: அப்ப ஏனுங்கய்யா பெரியார் சிலைக்கும் மாலைபோட்டு பிறந்த/இறந்த தினத்தன்று கும்பிடுறீங்க?
*************
மதவாதி: ஐயா! கடவுளை ஏன் நம்பமாட்டீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுளை யாருமே கண்டதில்லையே ஐயா!
மதவாதி: பகுத்தறிவைக்கூடத்தான் யாரும் கண்டதில்லை! அதுக்காக உங்களுக்கு அறிவில்லை என்று சொல்ல முடியுமா?
பகுத்தறிவுவாதி: ?!
**************
மதவாதி: ஐயா நீங்கள் எப்படி உங்களைப் பகுத்தறிவுவாதி என்று சொல்கிறீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பகுத்தறிந்துள்ளோம் என்பதால் நான் பகுத்தறிவுவாதிதான்!
மதவாதி: ஓஹோ! கடைசியாக என்ன பகுத்தறிந்து முடிவுக்கு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி:கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்!
மதவாதி: ஏன் அப்படி ஒரு முடிவுகு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி: ஏனென்றால் அவரை யாருமே கண்டதில்லை!
மதவாதி: எவரை யாருமே கண்டதில்லை?
பகுத்தறிவுவாதி: அதான் சொன்னேனே. கடவுளை யாருமே கண்டதில்லை என்று!
மதவாதி: இல்லாத ஒன்றை எப்படிக் காணமுடியும்?
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் கடவுள் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
மதவாதி: இல்லை என்று 100% நிரூபனமாகும்வரை அப்படி ஒத்துக் கொள்ள மாட்டேன்!
பகுத்தறிவுவாதி: ஏன்?
மதவாதி: 100% நிரூபனமாகததை நம்புவதற்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை!
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் பகுத்தறிவுவாதியா?
மதவாதி: ஆமாம்! என் பகுத்தறிவுக்கு எட்டாததையும் நம்புகிறேன்.
பகுத்தறிவுவாதி: அப்படியென்றால் நாங்கள்?
மதவாதி: உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதை மட்டும் நம்புவதால் அரைகுறை பகுத்தறிவுவாதி என்று சொல்லலாம்!
பகுத்தறிவுவாதி: அப்ப முழு பகுத்தறிவுவாதியாக மாற என்ன செய்ய வேண்டும்?
மதவாதி: பகுத்து அறிந்து சரியானக் கடவுளை நம்புங்கள்