15 கோடி தலையில்லா வாக்களர் அடையாள அட்டைகள்!
Saturday, March 21, 2009
பாஜக வேட்பாளாக பிலிபித் தொகுதியில் போட்டியிடும் தருண் S/o மேனகா காந்தேயின் மதவெறிப் பேச்சைத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
1) தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறியைத் தூண்டும்விதமாகப் பேசியதால் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தேர்தல் ஆணையம் தடை விதிக்கலாம்.
2) தருண் பாஜகவின் ஆங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரோ அல்லது உயர்மட்டத் தலைவரோ அல்ல என்று சொல்லி பாஜகவிலிருந்து கழட்டி விடப்படலாம்.
3) கருத்துரிமை,கற்பழிக்கும் உரிமை, தலைவெட்டும் உரிமை என்று ஏதாவது ஒரு உரிமையாகச் சொல்லப்பட்டு,குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அரைடவுசர்களால் சரிகாணப்பட்டு, தருண்தான் உண்மையான தேசபக்தன் என்றும் அவரின் வெற்றிக்குப் பாடுபடுவதே உண்மையான தேசபக்தர்களின் கடமை என்று மென்மேலும் மதவெறி ஊக்குவிக்கப்படலாம்.ஏற்கனவே, நான் அவ்வாறு பேசவில்லை; பத்திரிக்கையாளார்கள் திரித்து விட்டார்கள் என்றார். வீடியோ ஆதாரத்தைக் காட்டியபிறகு தனது பேச்சு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்று அத்வானி,வாஜ்பாய் பாணியில் விளக்கம் அளித்துள்ளார்.இந்நிலையில் தருண்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கா விட்டாலோ அல்லது தேர்தலில் போட்டியிட தடைவிதிக்காவிட்டாலோ பாஜகவின் (கூட்டணி) வேட்பாளர்களும் இவ்விதம் பிரச்சாரம் செய்யக்கூடும் என்பதோடு தருண் வெற்றி பெற்றால் முஸ்லிம்களின் தலையை வெட்டுவார்!
பாஜக-தருணை தட்டிக்கொடுத்து ஆதரித்தாலோ உட்கட்சி பூசலால் மூழ்கிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்பும் பறிபோகும் என்பதோடு,மோடிக்குப் போட்டியாக பாஜகவில் இன்னொருவர் உருவாவதை தடுக்க முடியாது.
மொத்தத்தில் தருணை விட்டு வைத்தால் அ) முஸ்லிம்களின் தலைகள் வெட்டப்படும் ஆ) மோடிக்குப் போட்டியாக வந்து 2014 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளருக்கு மேலும் ஒருவர் வரக்கூடும்!
தருண் வெற்றிபெற்றால் முஸ்லிம்கள் தலையை இழக்கும் அபாயம் ஒருபக்கம் இருக்க சுமார் 15 கோடி புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் தலையின்றி இருக்கும்!
முஸ்லிம்களின் தலையை தேர்தல் கமிஷன் காப்பாற்றுமா?