ஒரே நாளில் 500 ரவுடிகள் கைது - மாமூல் வாழ்க்கை பாதிப்பு?
Sunday, June 10, 2007
எனது சென்றமாதப் பதிவில் மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தலைப்பிட்டதால் மதுரைக்காரர்களின் கண்டனத்திற்கு ஆளானேன். ஆகவே இந்த முறை சென்னைக்காரர்களின் கண்டனத்திலிருந்து தப்ப செய்தியை அப்படியே வைக்கிறேன். ஆனால் ஒரு கண்டிசன்! கடைசியில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
சென்னை நகரில் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையி்ல் ஒரே நாளில் 500 ரவுடிகள் சிக்கினர். சென்னை நகரில் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.இதையடுத்து சென்னை நகரில் ரவுடிகள் நடமாட்டத்தை ஒழிக்கவும், பழைய குற்றவாளிகளைப் பிடிக்கவும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த வேட்டையில், 386 ரவுடிகள், 67 பழைய குற்றவாளிகள்,12 நீண்ட கால கிரிமினல்கள் சிக்கினர். கைது வாரண்ட் நிலுவையில் உள்ள 38 பேரும் இந்த வேட்டையின்போது சிக்கினர். ரவுடிகள் வேட்டை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2007/06/10/arrest.html
1) ரவுடி (Rowdy) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "An uncultured, aggressive, rude, noisy troublemaker" என்று விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமா இதற்கு பொருத்தமானவர்கள்?
2) சென்னையில் மட்டும் சிலரைக் கைது செய்துவிட்டால் போதுமா? இதனால் உஷாராகி வேறு இடங்களுக்கு இடம் பெயரும் ரவுடிகளை எப்படி பிடிப்பதாக உத்தேசம்?
3) இப்படி திடுதிப்பென்று கைது வேட்டையைத் தொடங்கினால் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படாதா?
மற்றபடி, வலைப்பதியும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த ரவுடிகளைப் பற்றி பின்னூட்டம் மூலம் தகவல் கொடுத்து உதவலாமே!
(நல்லதாப் போச்சு நான் முந்திக்கிட்டேன் :-)))