710 ஐப் பற்றித் தெரியுமா?
Monday, October 15, 2007
காரோட்டும் பெண்களெல்லாம் முட்டாள்(ச்சி?)களாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. நேற்று ஒரு FORD காரின் உதிரிப்பாகங்கள் விற்கும் கடையில் நின்று கொண்டிருந்தபோது, அவசரமாக வந்த ஒரு பெண்மணி, 710 வேண்டும் என்றார்.
கடைக்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை? "710 என்றால் என்ன?" என்றார்.
பெண்மணி: "எஞ்சினின் நடுவில் இருக்கும். என்னுடைய காரின் "710 " தொலைந்து விட்டது; அதனால் புதிதாக ஒன்று வேண்டும்" என்றார்.
கடைக்காரர் மீண்டும் குழப்பத்துடன் ஒரு பேப்பரையும் பேனாவையும் அப்பெண்மணியிடம் நீட்டி "நீங்கள் கேட்கும் 710 எப்படி இருக்கும்?" என்று வரைந்து காட்டச் சொன்னார். அப்பெண்மணியும் ஒரு வட்டம் போட்டு, நடுவில் 710 என்று வரைந்து காட்டினார்.
ம்ஹூம்! கடைக்காரர் தலையைச் சொரிந்தவாறே, அம்மனி, நீங்கள் வரைந்துள்ள பாகம் என்னவென்று விளங்கவில்லை. என்னுடன் வாருங்கள். நான் காட்டும் காரில் அதைக் காட்டுங்கள் என்று ஒர்க்-ஷாப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு நின்ற இன்னொரு காரின் பானெட்டைத் திறந்து, 710 ஐக் காட்டச் சொன்னார்.அட! அந்தக் காரிலும் 710 இருந்தது. முகம் மலர்ந்த அப்பெண்மணி 710 ஐத் தொட்டுக் காட்டினார். அப்பாடா! ஒருவழியாகக் கடைக்காரர் பெருமூச்சு விட்டார்!
கார் வைத்திருப்பவர்கள் கட்டாயம் 710 ஐ அறிந்து கொள்ள வேண்டும். 710 ஐப் பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடலாம். யாரும் சரியான பின்னூட்டம் போடாத பட்சத்தில் பெண்மணி வரைந்து காட்டிய அசல் 710 இன் படத்திற்கான சுட்டி கொடுக்கப்படும்.
முதல் பத்து பின்னூட்டத்திற்குள் (சரியான விடையெழுதுவருக்கு ஒரு ஒரிஜினல் 710 அவரின் (சொந்தச் செலவில்) கொரியரில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
ஹும்!எப்படியெல்லாம் பின்னூட்டம் எழுதத் தூண்ட வேண்டியுள்ளது! நேரம்டா!