ஜார்ஜ் புஷ் கொடுத்த பத்வா!!!
Tuesday, August 14, 2007
தஸ்லீமா நஸ்ரின் என்ற பங்களாதேஷி பெண்மணியின் (ஒரு பெண் தனது கருப்பையில் யாருடைய கருவைச் சுமப்பது என்ற சுதந்திரம் உள்ளிட்ட) பல்வேறு சுதந்திரங்களுக்கு எதிராகச் சில முல்லாக்கள் பயங்கர பத்வா (Fatwa) கொடுத்துதைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் படிக்கும் போது எனக்கு எழுந்த சந்தேகங்களை யாராச்சும் தெளிவு படுத்தவும்.
1) 'தஸ்லீமாவைக் கொன்றால் கணக்கற்ற பணம் வழங்கப்படும்' என்று ஹிந்துஸ்டான் டைம்ஸ் செய்தி சொல்கிறது. அப்படி வழங்கப்படும் பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்களா? அல்லது காசோலையாகக் கொடுப்பார்களா? மிகமிக முக்கியமாக, அதற்கு வரிவிலக்கு உண்டா?
2) பின்லாடனை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் ஜார்ஜ் புஷ் அரசினால் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பத்வா கொடுத்தார். அதற்கும் தற்போது தஸ்லீமாவுக்கு எதிராகச் சொல்லப்பட்ட பத்வாவிற்கும் என்ன வித்தியாசம்? ஜார்ஜ் புஷ்ஷின் பத்வாவைக் பெரிது படுத்தாத ஊடகங்கள், தஸ்லீமாவுக்கு எதிரான பத்வாவை மட்டும் ஊதிப் பெரிதாகுவது ஏன்?
3) எத்தனையோ இலக்கியங்களிலும் புராணங்களிலும் முனிவர்கள் பத்வா கொடுத்திருப்பதைப் படித்திருக்கிறோம்.சாதாரன விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு மனிதர்களை தவளை, பாம்பு, பல்லியாகவெல்லாம் உருமாற்றி பத்வா கொடுத்துள்ளார்கள். முனிவர்களின் பத்வாவுக்கு எதிராக யாருக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லையே, ஏன்?
4) இந்தியப் பெண்களில் பலர், திருமணத்திற்கு முன்பு தவறான முறையில் உடலுறவு கொண்டவர்கள் என்று தன் அனுபவத்தைச் சொன்ன குஷ்புவுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.அதேபோன்றக் கருத்தைச் சொன்ன தஸ்லீமாவுக்கு எதிராக எந்த மகளிர் அமைப்பும் போராடவில்லை. ஏன்?
5) மதநம்பிக்கைகளைப் புண்படுத்துவது தண்டனைக்குறிய குற்றம் என்று நமது நாட்டுச் சட்டங்கள் சொல்கின்றன. இஸ்லாமிய நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதமாக புத்தகம் எழுதியதை மேடைபோட்டு விளம்பரப் படுத்தி விழா எடுப்பதை சட்டம் அனுமதிக்கிறதா?