ஒபாமாவின் ஓரவஞ்சனை
Wednesday, November 12, 2008
அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக நாட்டுத் தலைவர்களுடன் போனில் பேசிய ஒபாமா, இந்தியாவைத் தவிர்த்திருந்தார். இஸ்ரேல், பாகிஸ்தானை எல்லாம் மதித்துப் பேசிவிட்டு, இந்தியா புறக்கணிக்கப் பட்டதற்கு கத்தார், ஓமன் சுற்றுப்பயணத்தில் இருந்ததே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சப்பைக் கட்டியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லையா? அல்லது ரோமிங் வசதி இல்லையா? அல்லது ஒபாமா லேண்ட் லைனில் மட்டும்தான் பேசுவாரா? மன்மோகன் சிங்குதான் ஊரிலில்லை. அட நம்ம வைகோ ஊர்ல தானய்யா இருந்தார்! அட நான்கூட.................சரிசரி...அடுத்து வரும் வெட்டிச் செய்திகளைப் படித்துவிட்டு, முந்திய பதிவுக்கு பின்னூட்டமிட மறந்தவர்கள் இந்தப் பதிவில் நாலுவரி வேணாம் ஒருவரி பின்னூட்டமாச்சும் போடுங்க.
பின்குறிப்பு: பின்னூட்டமிட விரும்பாவிட்டால் அதையும் சொல்லிடுங்க. அனாணி பெயரில் நானே 4-5 போட்டுக் கொள்கிறேன் (நன்றி: டோண்டு)
=====================================
சந்திராயன் -1 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் அனுப்பப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த விண்கலத்திற்கு ஆதித்யா என பெயரிடப்பட்டுள்ளது
ஐயா விஞ்ஞானிகளே! மதசார்பற்ற நாட்டில் சந்திராயன், ஆதித்யான்னு சமஸ்க்ருதப் பெயர்கள்தான் கிடைத்ததா? அதைவிட முன்னணி நட்சத்திரம் சூர்யா பெயரை விட்டுட்டு 1-2 படங்களில் நடித்த ஆதித்யா பெயரை வைத்தால் சூர்யா ரசிகர்கள் கோபப்பட மாட்டார்களா?
++++++++++++++++++
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன
சோனால் சிங் சாமியாரினியாக இருந்திருக்கிறாரா? என்றும் விசாரித்தால் நல்லது.
+++++++++++++++++++
பாஜக தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
வரவர கொலை மிரட்டலுக்கு மரியாதையே இல்லாமப் போச்சு!
++++++++++++++++++++
மாலத்தீவு கடற்பகுதியில் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால்,அருகாமை நாடு ஒன்றில் நிலம் வாங்கி அங்கு மக்களை இடம் பெயரச் செய்ய மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நிலம் வாங்கும் திட்டம் அந்த நாட்டு அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவே கடனில் மூழ்கும் அபாயம் இருக்கிறது! அடப்போங்க சார் நீங்க!
+++++++++++++++++++++
பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல, அதன் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லாட்டரிச்சீட்டு விற்க மட்டும் இந்தியா தேவையா? எல்லாவற்றிலும் Made in China என்று போடுவதுபோல் அருணாச்சல பிரதேசிலும் போடலாம்னு நெனைக்காதீங்கப்பூ!
++++++++++++++++++++++
திருவாரூர் மாவட்டம் சீரங்குளம் என்ற இடத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊர் திருக்குவளை திருவாரூரில்தான் இருக்கிறது. அனேகமாக கலைஞர்தான் தூண்டி விட்டிருப்பாரென்று ஜெயா ப்ளஸ் செய்திகளில் 2-3நாட்களுக்கு FLASH NEWS ஆக ஓடவிடலாமே!
++++++++++++++++++++++++
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒபாமா, அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா என்று என்று கூறினார்.
மன்மோகன் ஜி! உஷாரா இருங்க! அமெரிக்கப் பொருளாதாரம் சரிவடைந்து வரும் இச்சூழலில் ஒபாமா இப்படிச் சொல்லி நஷ்டத்தையும் நம் தலையில் கட்டிவிட்டுடப்போகிறார்!
+++++++++++++++++++++++++