லட்ச ரூபாயில் அம்பானியை ஆண்டியாக்கலாம்!
Thursday, November 01, 2007
சிலநாட்களாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 20,000 புள்ளிகளைத் தாண்டியதால் இந்திய பங்குகளின் மதிப்பு எகிறியது.இந்த சைக்கில்கேப்பில் நம்பர் ஒன் பில்லியனராக இருந்த பில்கேட்ஸையும் அதற்கடுத்தடுத்த பில்லியனர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அனில் அம்பானி உலகின் நம்பர் ஒன் பில்லியனராகி விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. மகிழ்ச்சி!
அம்பானி உலகின் முதல்நிலை பில்லியனர் ஆனதாலோ அல்லது இந்தியப் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததாலோ இந்தியர்களாகிய நமக்குப் பெருமையே தவிர ஏதேனும் பலன்கள் உண்டா என்று தெரியவில்லை. ப.சிதம்பரம் அவர்களின் பட்ஜெட்டினால் ஏழைகள் பரம ஏழைகளாகவும் பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகும் வாய்புண்டு என்று சொல்லப்பட்டது ஓரளவு உண்மைதான் போலும்?
தற்போதைய உலகின் நம்பர்ஒன் பில்லியனராக இருக்கும் அம்பானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நாற்பத்தைந்தே நாட்களில் உலகின் நம்பர் ஒன் பில்லியனராக நீங்கள் இருக்க ஆசையா? அம்பானியுடன் கீழ்கண்டவாறு ஒப்பந்தம் மட்டும் செய்தால் போதும்,நாற்பத்தி மூன்றாவதுநாள் அம்பானி, உலகிலேயே நம்பர் ஒன் ஒட்டாண்டி ஆகிவிடுவார்!
1) ஒப்பந்தப்படி அம்பானியின் வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் ரூபாயை டெபாசிட் செய்யவும்.
2) அதை அம்பானி உங்களிடம் 45 நாட்களில் கீழ்கண்டவாறு திருப்பித் தர வேண்டும்.
3) நாளொன்றுக்கு ஒரு ரூபாயின் மடங்குகளில் அடுத்த நாற்பத்தைந்து நாட்களுக்கு அம்பானியின் கணக்கிலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆட்டோமாடிக் டிரான்ஸ்பர் ஆகும்படி STANDBY INSTRUCTION கொடுக்கச் சொல்லவும்.(முதல் நாள் ரூ1.00 ,இரண்டாம் நாள் ரூ.2.00, மூன்றாம் நாள் ரூ.4.00, நான்காம் நாள் ரூ8.00 .......என்ற வீதத்தில்)
4)அம்பானியின் தற்போதைய சொத்துமதிப்பு 64 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,560,000,000,000.00 (ஒரு அமெரிக்க டாலரின் தோரய மாற்றுமதிப்பு [Exchange Rate] ரூபாய்.40.00)
6) நாற்பத்தி இரண்டாவதுநாள் அம்பானியின் வங்கி இருப்பைவிட உங்களின் வங்கி இருப்பு அதிகரித்திருக்கும்.
7) நாற்பத்தி மூன்றாவது நாள் அம்பானி அம்பேல் ஆகி இருப்பார்!
8) இன்னும் குறைந்த நாட்களில் அம்பேல் ஆக ஆசைப்பட்டால், திருப்பித்தர வேண்டிய ரூபாய் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.
9) வாழ்த்துக்கள் உலகின் வருங்கால நம்பர் ஒன் (பிராடு) பில்லியனரே!
பின்குறிப்பு: இந்த கணக்கை Ms-Excel லில் செய்து பார்த்தேன். கணக்குப்படி அம்பானி அம்பேல் 43 ஆம் நாளில் ஆகிறார். நீங்களும் செய்து பார்த்து பின்னூட்டமிட்டு பல பில்லியனர்களை உருவாக்க உதவலாமே!