சானியா மிர்சாவின் தேசப்பற்று!
Monday, April 19, 2010
டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுஹைப் மாலிக்கைத் திருமணம் செய்து தனது இந்தியாவின் மீதான தேசப்பற்றை நிரூபித்துள்ளார்! இதை உணராமல் சங்பரிவார சில்லறைகள் சானியாவை நாடுகடத்த வேண்டும், அவருக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதைத் திரும்பப் பெறவேண்டும் என்றெல்லாம் கூக்குரலிலிட்டார்கள். இந்து மாக்கள் கட்சியினர் கோவையில் சானியாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.
சென்ற மாதம்வரை சானியா மிர்சாவை இந்தியப் பெண்களுக்கு முன்மாதிரி, பின்மாதிரி என்றெல்லாம் ஒப்பிட்டும், அவரை முஸ்லிமாகப் பார்க்கவில்லை இந்தியராகவே பார்க்கிறோம் என்றெல்லாம் பேசியவர்கள்தான் தற்போது அவரின் திருமணத்தை எல்லை தாண்டிய தீவிரவாதமாகப் பிரச்சாரம் செய்து கல்யாணவீட்டில் ஒப்பாரி வைத்தனர்.
அதெல்லாஞ்சரி! தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தலையைச் சொரிபவர்களுக்காக சட்டுபுட்டுன்னு விசயத்துக்கு வந்துடுறேன்.
இந்தியர்கள் அனைவரும் உடன்பிறந்தோர்" என்பது நம்நாட்டு குடிமக்கள் மனதார உறுதிமொழி ஏற்க வேண்டும். பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை இதையே முழங்குகின்றோம். ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்து இந்தியர்கள் அனைவரும் அவருக்குச் சகோதரர்கள் என்பதை நிரூபித்துள்ளார். இதை தேசபக்திக்கு சம்பந்தமில்லாத சங்பரிவாரங்களுக்கு யாராச்சும் எடுத்துச் சொன்னால் நல்லது! Read more...