Showing posts with label சார்லஸ். Show all posts
Showing posts with label சார்லஸ். Show all posts

கல்லானாலும் காதலன் புல்லானாலும் புருஷன்

Sunday, March 02, 2008


தலைப்பைக் பார்த்ததும் ஆஹா! உருப்படியான ஒரு பலான பதிவு என்று நாக்கைச் சப்புக் கொட்டி சபலத்துடன் இங்கு வந்திருந்தால் ஏமாறுவீர்கள். ஏறத்தாழ இது ஒரு சபலப் பதிவா இல்லையா என்று முழுதும் படித்து விட்டு நீங்களே சொல்லுங்களேன்.

பதிவுக்குச் செல்லும் முன் சில முன்குறிப்புகள்:
சார்லஸ் = மறைந்த இளவரசி டயானாவின் கணவர்;
காமில்லா= சார்லஸின் தற்போதைய மனைவி;
பார்க்கர்=காமில்லாவின் முன்னாள் கணவன்;
ரோஸ்மேரி=பார்க்கரின் தற்போதைய மனைவி.

காமில்லாவுக்கும் பார்க்கருக்கும் என்ன சம்பந்தம்? சார்லஸுக்கு வெட்கம்-மானம்-சூடு-சொரனை உள்ளதா? இவர்களிடம் காணப்படுவது நட்பா? காதலா? காமமா? அல்லது அதையும் தாண்டி புனிதமான வேறு ஏதாவது கருமாந்திரமா என்பதை அறிந்து கொள்ளவே இப்பதிவு.

சில வருடங்களுக்கு முன் பிரிட்டிஸ் இளவரசர் சார்லஸும் காமில்லாவும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்தக் காமில்லா தனது முன்னாள் கணவருடன் ஒருவாரம் இன்பச் சுற்றுலா சென்றுவர சார்லஸ் தனது மனைவியை அனுப்பி வைக்கப்போகிறாராம்.

இதைப் படித்து விட்டு கற்பனையாக மனதில் எழுந்தது. உண்மையாகவும் இருக்க வாய்ப்புள்ளதால் உருப்படதா விசயங்களின் ஒப்பற்ற ஆவணமான வெட்டிப்பக்கங்களில் ஏற்றி வைப்போமே.

காட்சி # 1:
காமில்லா: அத்தான்!

சார்லஸ்: எஸ் டியர்!

காமில்லா: கணவனுடன் சந்தோசமாக ஒருவாரம் இன்பச்சுற்றுலா செல்லாலாம் என்று இருக்கிறேன்.

சார்லஸ்: அதற்கென்ன காரியதரிசியிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டால் போச்சு! ஒரே ஒரு வருத்தம் என்னால் உடனடியாக சுற்றுளா வர முடியாது.

காமில்லா: நான் உங்களை என்னுடன் வரும்படி கேட்கவே இல்லையே!

சார்லஸ் : நீந்தானே டியர், "கணவனுடன் சந்தோசமாக ஒருவாரம் இன்பச் சுற்றுளா செல்லாலாம் என்று இருக்கிறேன்" என்று சொன்னாய்!

காமில்லா: உண்மைதான்! நான் சொன்னது என்னுடைய Ex.கணவனுடன் மிஸ்டர் சார்லஸ்!

சார்லஸ்: ஓஹோ! வெரிகுட். அதுக்கும் ஏற்பாடு செய்து விட்டால் போச்சு!

காமில்லா: யு ஆர் மை ஸ்வீட்டி சார்லஸ்!

சார்லஸ்: (எனக்கு சர்க்கரைவியாதி இருப்பதைக் குத்திக் காட்டுகிறாளோ?)

காட்சி # 2:
பார்க்கர்: ரோஸ்மேரி. நீ கேன்சரிலிருந்து குணமடைந்த சந்தோசத்தை நான் வித்தியாசமாகக் கொண்டாடப்போகிறேன்!

ரோஸ்மேரி: எனக்கு அறுபத்தாறு வயதானாலும் என் மீதான உன் அன்பு இன்னும் இளமையுடனே இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் பார்க்கர். எப்படிக் கொண்டாடலாம்?

பார்க்கர்: என் மனைவிமீது நான் வைத்திருக்கும் மறக்க முடியாதக் காதலை மீண்டும் நிரூபிக்க ஒருவாரம் இன்பச் சுற்றுளா செல்லப் போகிறேன்.

ரோஸ்மேரி: காதலுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் பார்க்கர். தற்போது மருந்து சாப்பிட்டு வருவதால் என்னால் தற்போது உடன்வர முடியாதே!

பார்க்கர்: அது தெரிந்துதான் காமில்லாவை அழைத்துச் செல்லப்போகிறேன்.
ரோஸ்மேரி: (அடப்பாவி மனுஷா! இதுக்கு கேன்சரே பரவாயில்லையே!)

காட்சி # 3:

பார்க்கர்: Welcome Back காமில்லா ! இன்னும் என்னை மறக்காமல் தொடர்ந்து அன்பு வைத்திருக்கிறாயே!

காமில்லா: நம்மிருவரின் காதல் வாழ்க்கை அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா?

பார்க்கர்:(அடிக்கள்ளி! பின்னே ஏண்டி என்னை விட்டுட்டு சார்லஸுடன் ஓடினே?)

நிற்க,

"உன் குழந்தையும் என் குழந்தையும் நம் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்பது போன்ற உரையாடல்கள் மேலை நாடுகளில் சகஜமான ஒன்று. தற்போது சார்ல்ஸ் புண்ணியத்தால் "என் மனைவி அவள் கணவனுடன் விளையாடச் செல்கிறாள்" என்ற கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மில்லியனராக ஆசைப்பட்டு அன்பான மனைவியை பில்லியனருடன் ஓரிரவு படுக்கையைப் பகிர்ந்துகொள்ள அனுப்பி வைக்கும் கணவன் பற்றி Indecent Proposal என்ற ஆங்கிலப்படத்தில் காட்டுவார்கள்.சினிமாக்களில் எந்தச் சனியனையும் கலைக்கண்ணோட்டத்தில் படமெடுத்துக் விற்பார்கள். நாமும் அதைக்காசு கொடுத்து பார்த்துத்தொலைப்போம்.ஆனால், நிஜத்திலும் இப்படி நடக்கிறது. அதைக் கண்டு கொள்ளாமல் செல்லலாமா?

கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன் என்பதை ஆணாதிக்கச் சிந்தனை என்று சில மேதாவிகள் சொல்வார்கள்; கல்லானாலும் காதலன் புல்லானாலும் புருஷன் என்று தொடரும் கேடுகெட்ட இவ்வுறவை, என்ன சிந்தனை என்று சொல்லப்போகிறார்களோ!

— Evening Standard—http://www.pressdisplay.com/pressdisplay/viewer.aspx

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP