கலாம் சொன்ன சலாம் - அதிர்ச்சித் தகவல்!!!

Tuesday, February 05, 2008

பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவுக்கே கிடைத்த மணிமகுடம். நாட்டுப்பற்று மிக்க இலட்சியவாதி, சாதி மதங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு
இந்தியா, இந்தியர் என்பதே தன் முகவரியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.இதுதான் அவருக்கு நாடும் உலகமும் வைத்திருக்கும் அளவுகோல்.

ஆனால் அவருடைய சமீபத்திய நடவடிக்கை மேற்சொன்ன பெருமைகளை எல்லாம் கொஞ்சம்
கேள்விக்குரியாக்கியிருக்கிறது. அந்தச் சம்பவம் வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதாக் பொறியியல் கல்லூரியின் புதிய ஷிப்-இன்-ப்ளாக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறப்புரையாற்றத் தொடங்கியதுமே அவர் மத அடையாளத்துடன் "அஸ்லாமு அலைக்கும்" என ஆரம்பித்தார்.

இவருடைய சிறப்புரையைக் கேட்க கூடியிருந்த கூட்டம் கொஞ்சம்
அதிர்ச்சிக்குள்ளாகியது. விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களும்,சிறப்புரையைக் கேட்கக் கூடியிருந்த பொதுமக்களும் வெறும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பல்வேறு சமூகத்தினரும் கூடியிருந்த விழாவில் இந்தியாவே தரிசிக்கும் ஏ.பி.ஜே-யின் பேச்சு அனைவரையும் கொஞ்சம் உறையச்செய்ததை யாரும் மறுக்க முடியாது.அவருக்குள்ளும் மதத்தின் வேர்கள் துளிர் விட்டிருக்கிறதா? என கவலையுடன் கூட்டம் கலையத்தொடங்கியது.


அந்தச் சர்ச்சைக்குரிய உரை இதோ ஒளி வடிவில்.... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogsection&id=10&Itemid=154

மனுநீதி (மநுநீதி?) என்ற வலைப்பூவில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு நெற்றிக் கண் திறந்திருந்தார் ஒருவர்! (எனக்கென்னமோ அது நெற்றிக்கண் மாதிரி தெரியவில்லை. காவிக்கண்ணாடி அணிந்து எழுதியது போலுள்ளன அவரின் கேள்விகள்!!!)


முன்னாள் ஜனாதிபதி "உண்மையான"பாரத ரத்னா அப்துல்கலாம் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்பதும், இதுவரையிலும் ஒரு முஸ்லிமாகவே இருந்து வருவதும் நாடறிந்த செய்தி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த விழாவில் "அஸ்ஸலாமு அலைக்கும்" உங்கள்மீது (சாந்தி உண்டாகுக) என்று வாழ்த்தி உரையைத் தொடங்கினார்.இதற்கு ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்?

மதசார்பற்ற நாட்டில் உயர்பதவியில் இருந்து கொண்டு சங்கராச்சாரியின் காலடியில் விழுந்து கிடந்த பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் கொண்ட நாட்டில், சலாம் சொன்னதால் அப்துல் கலாம் மீது மத அடையாளம் விழுந்து விட்டதா? அப்துல் கலாம் என்ற பெயர்கூட அவரின் மத அடையாளம்தான் என்பது மநுநீதிக்காவலர்களுக்குத் தெரியாதா?

கும்பாபிசேகங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசு செலவில் அனுப்பி வைக்கப்படும் காவல்துறையினரும்கூட அருள்வந்து தேர் இழுபத்தும்,பக்திவயப்பட்டு அரோகரா கோஷம்போட்டு நிற்பதும் மநுவின் கண்களுக்கு தெரியவே இல்லையா?

அனைவருக்கும் பொதுவான தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு அருள் வாக்குடந்தானே நிகழ்ச்சிகளைத் துவங்குகிறது.தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தூர்தர்ஷன் என்றைக்காவது பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி என்று நாள் ஒதுக்கி இருக்கிறார்களா? அட! குறைந்தபட்சம் நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதங்களையாவது ஒலி/ஒளிபரப்பி மதசார்ப்பற்ற நிலையை நிரூபித்திருக்கலாமே!

மாண்புமிகு பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்களாவது தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்னரும் பல்கலைக்கழகங்களில் பாடம் நடத்தி நாட்டிற்குச் சேவையாற்றுகிறார்.ஏனைய இந்திய முன்னாள் ஜனாதிபதிகள் மடங்களுக்கு அல்லவா சேவையாற்றினார்கள். காஞ்சி மடத்திற்கு அலையாய் அலைந்த எங்களூர்காரர் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் பற்றி மநுவுக்குத் எதுவுமே தெரியாதா?

தயவு செய்து காவிக்கண்ணாடியை அணிந்து நெற்றிக்கண்ணால் பார்த்து எதையும் அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாமே!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP