டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்?
Sunday, April 26, 2009
வெள்ளிக்கிழமையன்று கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தார்.
இதற்காக சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார்.பிளாட்பாரத்தில் நடந்து போன போது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் சரமாரியாக ராஜேந்தரைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேந்தர் சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
--------------------------------------------------------------------------------
என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தப் பின்னூட்டம்
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: கோபக்காரபயபுள்ளபதிவு செய்தது: 26 Apr 2009 3:58 pm
மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று விஞ்ஞானிகள் நினைத்துக் கொண்டிருந்த போது, இல்லை இல்லை மனிதன் கரடியிலிருந்தும் பிறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி ஒரு புதிய ஆராய்ச்சிக்கு வித்திட்டவர்.
---------------------------------------------------------------------------------
http://thatstamil.oneindia.in/news/2009/04/26/tn-6-persons-arrested-for-threatening-vijaya-tr.html