கிரிக்கெட் ம(ட்)டையர்கள்
Saturday, April 09, 2005
ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி. கிரிக்கெட் போட்டி என்ற பெயரால் மக்களை முட்டாளுக்கும் திருவிழா நடந்து வருகிறது. 11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11000 முட்டாள்கள் ரசிக்கிறார்கள் என்று பெர்னாட்ஷா சொன்னார்.
கிரிக்கெட்டின் பெயரால் இந்திய மக்களின் உழைக்கும் நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும்தான் வீணடிக்கப் படுகிறது. இதை விட கேவலம் கிரிக்கெட்டின் மீதான அபிமானத்தை வைத்து தேசபக்தி அளவிடப் பட்ட காலமும் உண்டு.
பண்டைய ரோம மன்னர்கள் இளைஞர்களால் மகுடத்திற்கு பாதகம் வந்து விடக் கூடாது என்ற சூழ்ச்சியில் ஒலிம்பிக் விளையாட்டிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் இளைஞர்களை கவனம் செலுத்த வைத்தார்கள். அதேமாதிரி? சூழ்ச்சிதான் கிரிக்கெட் மீதான பைத்தியமாக்கும் போட்டிகளும் என்பதை அறிந்தவர்கள் எத்தனை பேர்?
கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்கும் பைத்தியங்களிடம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் வேண்டாம், தற்போது நடந்த கார்கில் யுத்த தியாகிகள் சிலர் பெயராவது கேட்டால், டக் அவுட் ஆன கங்குளி முழி முழிப்பார்கள்.
சாதாரண குளிர்பானம் கூட நல்லது என்று சொல்ல டெண்டுல்கர் தேவை படுகிறார். அவர் ஸ்பான்சர் அல்லாத மற்ற குளிர்பாணத்தை அவ்வாறு சொல்லி விடுவாரா? அதற்காக அவருக்கு ஸ்பான்சர் கொடுக்கும் தொகையை நுகர்வோர் தலையில் கட்டுவதை அறியாமலா இருக்கிறோம்?
சாதாரண பொருளை பிரபலமானவர்களால் விளம்பரப் படுத்துவதன் மூலம் அதற்க்கு கிரிக்கெட் ரசிகனல்லாத சாமானியனும் அதிக விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறான்.
இத்தகைய கிரிக்கெட் விளையாட்டால் என்ன பயன்? கேட்டால் நாடுகளுக்கிடையே நட்புறவு வளரும் என்று ஒன்றுக்கும் உதவாத சப்பை கட்டு கட்டுவார்கள். அப்படி என்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் நல்ல நட்பு நாடுகளாக அல்லவா இருக்க வேண்டும்? ஆறு மாதத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லி படைகளை எல்லையில் குவிக்கும். அடுத்த ஆறு மாததிற்க்கு பிறகு அவற்றை குறைத்துக் கொண்டு இரு நாட்டிற்க்குமிடையே பஸ் விடுகிறோம் ரயில் விடுகிறோம் மற்றும் ஒண்டே மேட்ச் வைக்கிறோம் என்று முட்டாளாக்குவார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் கிரிக்கெட் பைத்தியங்கள் இருக்கும். அவர்களுக்கு கொஞ்சம் உற்சாகப் படுத்த இந்த முறை சென்னையில் நடக்க இருந்த ஒருநாள் போட்டியை "ஜக்மோகன் டால்மியா" ரத்து செய்துவிட்டு வேறு மாநிலத்திற்கு அந்த வாய்ப்பை கொடுத்து விட்டாராம். காரணம் அவர்மீது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கு.
என்ன விளையாடுறீங்களா?
1 comments:
KALAKKAL ... WHY NOT WRITE A SERIES WITH MORE DETAIL. THINK ABOUT IT.
-Friend
Post a Comment