சிம்புவின் கன்னம் சிவந்தது
Saturday, January 28, 2006
குடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.நடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில், குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.
சிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக் லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவா போன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடி விட்டனர்.
இருட்டில் சிம்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டே அத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.
அடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்து வந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
ரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக் கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்கு வந்துள்ளார்.
எவன்டா என் மகனை அடிச்சது என்று 'செயின் ஜெயபால்' ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார். இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன் அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர் டாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.
இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சக நடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமை என்றால்....?
http://thatstamil.oneindia.com/specials/cinema/heroes/simbu12.html
செயின் ஜெயபால் ஸ்டைல்ல பின்னூட்டம் போடுங்கடா...சாரி போடுங்க!
9 comments:
அடக்கம் அமரருள் உய்க்கும்னு யாராச்சும் சொல்லுங்கப்பா சிம்புவுக்கு. எதோ படம் சுமாரா ஓடும் போதே இப்படின்னா நாலு படம் நல்லா பிச்சிக்கிட்டு ஓடுச்சுனா தலைவருக்கு கால் தரையில நிக்காது இல்ல போலிருக்கு.
ஆஹா, இதுவல்லவா நியூஸ்! சூப்பர்
யோவ் அதிரை
இங்கே ஒரு பிளாக்கில சிம்புவோட என்னத்தையோ என்னமோ பண்ணனும்னு ஒருத்தர் சொன்னாரே, அத செயின் ஜெயபால் படிச்சாரா?
டி. ஆர் இங்கே பின்னூட்டினால்,
எம்மவன் பேரு சிம்பு
போவமாட்டான் தும்பு
தண்ணி எறைக்கிது பம்பு
குடிக்க வேணும் சொம்பு
வச்சிக்காதே வம்பு, அப்பால
எடுத்திடுவான் கம்பு
சும்மா சீவிடுவான் கொம்பு
:)
paathu ezuthungapa. edhirkala mudhalvara irukapogudhu.
இனி நான் இருக்க மாட்டேன் சும்மா, எனக்கு பின்னால இருக்காங்க அம்மா; என் கூட மோதினா தெப்பு, சிம்பு கூட மோதினா வம்பு; நான் இறங்கினா தாங்க மாட்டீங்க, சிம்பு இறங்கினா தூங்க மாட்டீங்க; நான் தாடி வச்ச சிங்கம், என்கிட்ட மோதினா ஆகிடுவீங்க அசிங்கம்''(விஜய டி.ராஜேந்தர்)
அடேங்கொப்........பா.ஆ..
மேலே உள்ளது மெய்யாலுமே டி.ராஜேந்தர் சொன்னதுங்க.
அடேங்கொப்....பா...ஆ மட்டும் ஹி.ஹி..
சிம்புவிற்கு இது தேவைதான்.
சிம்புவின் கன்னம் சிவந்த செய்திக்கு கருத்துச் சொல்லிய கைப்புள்ள, (உயிருள்ளவரை:))) உஷா,சர்தார்(ஜி!)ராகவன்,ஆதிரை, அனானிமஸ் மற்றும் டி.விஜய ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி.
Post a Comment