ஆதலினால் காதல் கொ'ல்'வீர்

Tuesday, February 14, 2006

காதலர் தினத்தை முன்னிட்டு நானும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்து எழுதிய ஒரு கவிதை. காதலர் தினத்தில் பிரிந்து சென்ற அந்த ஜீவன்களுக்காக இந்தக் கவிதை சமர்ப்பிக்கின்றேன்.

  • சாதி மத பேதமில்லை நமக்குள் - இருந்தும்
    நம் காதல் தோற்றது கண்ணே!

  • தாவித்திரிந்த என்னைக் காதல் மொழியால்
    கூவியழைத்தவளே!

  • என்னைக் கொள்ளென்று அழைத்தபோது"லொள்"ளென்று குரைத்தவளே!

  • நாயே! என்று அன்பாகத்தானடி சொன்னேன் - அதற்கு
    போடா குரங்கு என்று பிரிந்து சென்றாயே!


கவிஞர்.அதிரைக்காரன்


  • 'காதல் வந்தால் சொல்லியனுப்பு

  • உயிரோடிருந்தால் வருகிறேன்

  • கண்ணீர் வழிய உயிரும் வழியக்

  • கரையில் கரைந்து கிடக்கிறேன்

  • சுட்ட மண்ணிலே மீனாக - மனம்

  • வெட்ட வெளியிலே வாடுதடி

  • கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

  • கடல் நீர் மட்டம் கூடுதடி'

கவிஞர்.மதுரைக்காரன்

Read more...

புகை பிடித்தால் நாய் கடிக்காது

Tuesday, February 07, 2006

மதுரையிலேர்ந்து ஒருத்தர் குதிரை வண்டி நெறய சிகரெட்டுகளை ஏத்திக்கிட்டு வந்து அதிரையில் பெட்டிக்கடை வச்சார். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால் ஒரு தீப்பெட்டி இலவசங்கற ஆஃபரோட கடை நடத்தினார். பெரும்பாலான கடைகளில் அமுல் டப்பாக்குள்ள சிம்னி விளக்கும் பற்றவைக்க கட் பண்ணிய சிகரெட் அட்டைகளுமோ அல்லது நீண்ட கயிற்றின் நுனியில் கொள்ளி வைத்தோ இருந்ததால், அந்த ஆஃபர் யாரையும் கவரவில்லை.

மதுரைக்காரர் என்னென்னமோ செஞ்சு பார்த்தார் அதிரைக்காரர்கள் யாரும் சிகரெட் வாங்குவதா இல்லை. தன் வியாபார யுக்தியை மாற்றி மறுநாள் விளம்பரம் செய்தார். கூட்டம் அலை மோதியது. (அந்த கூட்டத்தில் என் ஃபிரண்டோட அழகான வார் செருப்பு (விலை ரூ39.95) அறுந்து விட்டது என்றால் பாருங்கள்!) விளம்பர வாசகம் இதுதான்:

1) இந்த சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காது.
2) இந்த சிகரெட் பிடிப்பவர் இருக்கும் வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.
3) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு பெண் குழந்தையே பிறக்காது.
4) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு முதுமையே வராது.

அவ்வளவுதான் போங்க. வியாபாரம் வெளுத்து வாங்கியது. மதுரைக்காரருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கல்லா பெட்டி நிரம்பி வழிந்தது. இவ்வாறாக மதுரைக்காரரின் சிகரெட் வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.

இதை பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்த, கொஞ்சம் விபரம் அறிந்த (என்னை மாதிரி) ஒருத்தர் மெதுவாக மதுரைக்காரரின் வாயைக் கிளறினார்.

அதிரைக்காரர்: என்ன மதுரைக்காரரே. இப்படி பொய் சொல்லி எங்க ஊரு மக்களை ஏமாற்றலாமா?

மதுரைக்காரர்: என்ன தம்பீ இப்டி சொல்லிப்புட்டிய. நான் உண்மையத்தானே சொல்லி விக்கிறேன்.

அதிரைக்காரர்: உங்க சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காதுங்கறீங்களே/

மதுரைக்காரர்: ஆமா. நெசந்தேன். சிகரெட் பிடிச்சா உடல் இளைச்சுடும். நடக்க கஷ்டமா இருக்கும். அதனால கைத்தடி துணையோடுதான் நடக்கனும். கையில கம்பு வச்சிருந்தா நாயி கடிக்காதுதானே?

அதிரைக்காரர்: ஓஹோ. அப்ப திருடன் வரமாட்டாங்கறது பீலாதானே?

மதுரைக்காரர்: நெசமாத்தேன் தம்பி. சிகரெட் அடிச்சா இருமல் வரும். இரவில் தூங்க முடியாது. ஒரே லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பாங்க. திருடன் வரும்போது இருமல் சத்தம் கேட்டா, வீட்டுக்காரங்க விழிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு வேற தெருவுக்கு போயிடுவாந்தானே?

அதிரைக்காரர்: (மனதுக்குள்: எமகாதகங்கப்பா இந்த மதுரைக்காரங்க!) ஆமா, பெண் பிள்ளை பிறக்காதுங்கிரீங்களே. அது எப்படி?

மதுரைக்காரர்: என்னா தம்பி ஒன்னும் வெளங்காதப் புள்ளையா இருக்கீங்க. சிகரெட் பிடிச்சா சரியா குடும்பம் நடத்த முடியாது. இவங்களுக்கு இல்லறத்தில் ஈடுபாடு இருக்காது. அதனால பெண் குழந்தை இல்லே, எந்தக் குழந்தையுமே பிறக்காது.

அதிரைக்காரர்: ச்சே உங்களைப் போயி தப்பா நெனெச்சுட்டேன். முதுமை வராதுன்னியலே....

மதுரைக்காரர்: ஆமா தம்பி. சிகரெட் பிடிச்சா இளவயதிலேயே கான்சர் வந்து செத்துடுவாங்க. அப்ப எப்ப்டி முதுமை வரும்?

ஆகவே, மக்களே மதுரையிலிருந்து மட்டுமில்லை எந்த ஊரிலிருந்து வந்து சிகரெட் விற்றாலும் தயவு செய்து புகை பிடிக்காதீர்கள்.

சிகரெட் ஜோக்ஸ் இருந்தால் பின்னூட்டுங்க. சிறந்த ஜோக்குக்கு ஒரு கட்டு செய்யதுபீடி

Read more...

முடிஞ்சா சிரிச்சிட்டு போங்க!

Thursday, February 02, 2006

மனைவியிடம் கோபித்துக் கொண்டு ஒரு சர்தார்ஜி (அல்லது அதிரைக்காரர்) வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்வதற்காக சென்றார்.ஆழமான குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்று முடிவாகி விட்டது. நேராக குளம் நோக்கி சென்றார். சுற்றும் முற்றும் பார்த்தார்.மெதுவாக குளக்கரையில் இறங்கியவர், வேகமாக வெளியேறினார். பயந்து நடுங்கிய படியே வீட்டிற்கு வந்தார். அவரை ஏளனமாகப் பார்த்த மணைவி "என்னாச்சு? குளத்தில் விழுந்து தற்கொலை செய்யப் போறேன்னீங்க? இப்ப திரும்பி வந்துட்டீங்க" என்றாள். அதற்கு சர்தார்ஜி "சொன்னது நிஜம்தான். ஆனால் அந்த குளத்தில் ஏகப்பட்ட பாம்பு கிடக்குது" என்றார்.

*****

பேச்சு மூச்சற்றநிலையில் உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தாவை சந்திக்கச் சென்றார் ஒரு சர்தார்ஜி. பேரனைப்பார்த்ததும் தாத்தாவுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. பரிவுடன் பேரனும் அருகில் சென்றார். பேரனின் பாக்கெட்டிலிருந்த பேனாவை உருவிய தாத்தா, ஏதோ கஷ்டப்பட்டு எழுதி விட்டு உயிரை விட்டார்.

பதறியபடியே அந்த பேப்பரை வாங்கிய பேரன் தனது சட்டை பாக்கெடில் வைத்து விட்டு தாத்தாவின் பிணத்தின் மேல் விழுந்து அழுதான். ஈமக்கிரியையும் முடிந்தது. சில நாள் கழித்து தாத்தா கடைசியாக எழுதிய பேப்பர் நினவில் வந்தது. அவசரமாக அழுக்குக் கூடையிலிருந்த சட்டைப் பாக்கேட்டிலிருந்து எடுத்து படித்து விட்டு மீண்டும் கதறி அழுதான். அந்த பேப்பரில் தாத்தா எழுதி இருந்தது "டேய் கஸ்மாலம். எனக்கு ஆக்ஜிஜன் வரும் டியுப்பின் மீது நிற்காதேடா!"

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP