முடிஞ்சா சிரிச்சிட்டு போங்க!
Thursday, February 02, 2006
மனைவியிடம் கோபித்துக் கொண்டு ஒரு சர்தார்ஜி (அல்லது அதிரைக்காரர்) வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்வதற்காக சென்றார்.ஆழமான குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்று முடிவாகி விட்டது. நேராக குளம் நோக்கி சென்றார். சுற்றும் முற்றும் பார்த்தார்.மெதுவாக குளக்கரையில் இறங்கியவர், வேகமாக வெளியேறினார். பயந்து நடுங்கிய படியே வீட்டிற்கு வந்தார். அவரை ஏளனமாகப் பார்த்த மணைவி "என்னாச்சு? குளத்தில் விழுந்து தற்கொலை செய்யப் போறேன்னீங்க? இப்ப திரும்பி வந்துட்டீங்க" என்றாள். அதற்கு சர்தார்ஜி "சொன்னது நிஜம்தான். ஆனால் அந்த குளத்தில் ஏகப்பட்ட பாம்பு கிடக்குது" என்றார்.
*****
பேச்சு மூச்சற்றநிலையில் உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தாவை சந்திக்கச் சென்றார் ஒரு சர்தார்ஜி. பேரனைப்பார்த்ததும் தாத்தாவுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. பரிவுடன் பேரனும் அருகில் சென்றார். பேரனின் பாக்கெட்டிலிருந்த பேனாவை உருவிய தாத்தா, ஏதோ கஷ்டப்பட்டு எழுதி விட்டு உயிரை விட்டார்.
பதறியபடியே அந்த பேப்பரை வாங்கிய பேரன் தனது சட்டை பாக்கெடில் வைத்து விட்டு தாத்தாவின் பிணத்தின் மேல் விழுந்து அழுதான். ஈமக்கிரியையும் முடிந்தது. சில நாள் கழித்து தாத்தா கடைசியாக எழுதிய பேப்பர் நினவில் வந்தது. அவசரமாக அழுக்குக் கூடையிலிருந்த சட்டைப் பாக்கேட்டிலிருந்து எடுத்து படித்து விட்டு மீண்டும் கதறி அழுதான். அந்த பேப்பரில் தாத்தா எழுதி இருந்தது "டேய் கஸ்மாலம். எனக்கு ஆக்ஜிஜன் வரும் டியுப்பின் மீது நிற்காதேடா!"
6 comments:
2ஆம் ஜோக் :))
//சர்தார்ஜி (அல்லது அதிரைக்காரர்) //
ஒங்களுக்கெல்லாம் கேக்க ஆளுல்லேன்ற தெகிரியம்யா... அதிரைக்காரங்க அளவுக்கா நாங்க ".....ங்க?
என்னா லுக்கு?
ஹி ஹி...
சிரித்ததற்கு நன்றி "சிரி"ல் அலெக்ஸ்
நன்றி பொட் "ஹி..ஹி" கடை!
//அதிரைக்காரங்க அளவுக்கா நாங்க ".....ங்க?//
சர்தார்ஜீ,
ஐந்து தொடர்புள்ளிகள் வைத்திருக்கீங்க. புள்ளியிட்ட இடத்தில் கீழுள்ள எதையாச்சும் போட்டுக்குங்க.
1) புத்திசாலி
2) பேரறிஞர்
3) கேணப்பச
4) மொள்ளமாறி
ஆட்டையே கழுதையாக்குனவங்களுக்கு சர்தார்ஜியை ...யாக்குவது கஷ்டமில்லை.
Post a Comment