கட்டணமில்லாக் ‘கழிப்பிடம்’ வேண்டும்!
Sunday, June 11, 2006
ஒருமுறை ஜப்பான் பிரதமர் இந்தியா வந்திருந்த போது சென்னை மின்சார இரயிலில் பயணம் செய்ய விரும்பினாராம். அதன்படியே அதிகாரிகளும் பயண ஏற்பாட்டைச் செய்து விட்டு அருகில் இந்தியப் பிரதமரும் உட்கார்ந்து கொண்டாராம்.
ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜப்பான் பிரதமர், செல்லும் வழியெங்கும் சிறிது இடைவெளியில் நம் மக்கள் “காலைக் கடன்” கழித்துக் கொண்டிருந்தார்களாம்! (அடப்பாவிகளா! எவன்யா இவர்களிடம் கடன் கேட்டது?) முகம் சுழித்தவாறு அருகிலிருந்த இந்தியப் பிரதமரிடம் “ஏன் உங்கள் நாட்டில் இந்த அவலம் இருந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டதற்கு, இந்தியப் பிரதமர் பதில் சொல்ல முடியாமல் தவித்தாராம்.
பிறகு ஒரு சமயம் இந்தியப் பிரதமர் ஜப்பான் சென்றிருந்த போது, ஜப்பானின் கிராமங்களை விமானம் மூலம் தாழ்வாகப் பறந்து பார்க்க விரும்பினாராம். அவ்வாறு விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது சில இடங்களில் நம் சென்னையில் நடந்தது போல், அங்கும் சிலர் “காலைக்கடன்” கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆஹா! நம்மைக் கேவலப்படுத்திய ஜப்பான் பிரதமரை நன்றாக வாரி விடலாம் என்ற எண்ணத்தில் ஜப்பான் பிரதமரிடம், “எங்கள் நாட்டிற்கு நீங்கள் வந்திருந்த போது இது போன்று பொதுவில் காலைக் கடன் கொடுத்துக் கொண்டிருப்பவர்களை கிண்டலடித்தீர்களே! உங்கள் நாட்டில் மட்டும் என்ன வாழுதாம்?” என்று கிண்டலாகக் கேட்டபோது, விமானத்தை தரை இறக்கச் சொல்லி இந்தியப் பிரதமரையும் உடன் அழைத்துச் சென்று அவர்களிடமே விசாரிப்போம் என்று அருகில் சென்ற போது, இந்தியப் பிரதமரைக் கண்ட “கடனாளிகள்” மரியாதையாக எழுந்து “பாரதப் பிரதமர் வாழ்க!” என்று கோஷமிட்டனராம்! (அதாவது ஜப்பானில் கடன் கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் நம்மவர்களே!)
இது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டாலும் நம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை துடைதெறிய (?!!) எந்த அரசியல்வாதியும் கண்டு கொள்வதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் (?) பஞ்சாயத்து போர்டுகள் ஆங்காங்கே கழிப்பிடங்களைக் கட்டி இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். இந்த இலட்சனத்தில் கட்டணம் வேறு வசூலிப்பதுதான் கொடுமை!
அடுத்தவர் விசயத்தில் தேவையின்றி மூக்கை நுழைப்பது சட்டப்படி குற்றம். அதேசமயம் அடுத்தவர் மூக்கில் இது போன்ற துர்நாற்றங்களை நுழைப்பதை தடுப்பதற்கும் யாராவது சட்டம் போட்டால் நன்றாக இருக்கும்!
5 comments:
i also written similar article in my blog
http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114724131268402201.html
அதிரை, இதைப்பற்றி இன்னொமொறு பதிவு கூட எழுதியிருந்தேன், திடீரென்று பதிவிலிருந்து காணாமல் போய்விட்டது,
அது இது தான்.
**********
இரட்டை விரல் ...
இரட்டை விரல் என்றதும் ஏதோ தேர்தல் பதிவு என்று நினைத்து விடாதீர்கள். நம்மவர்களுக்கு எவ்வளவு சமையல் கட்டு முக்கியமோ அதைவிட முக்கியம் வெளிநாட்டினருக்கு ரெஸ்ட் ரூம் எனப்படுகின்ற கழிப்பறை. கழிப்பறை என்ற சொல்லை கேட்கும் போது வாந்தி வருவது போல் நமக்கு உணர்வு ஏற்படுவது ஏன் ? நம் கண்முன்னோ மூக்கு முன்போ உடனே உணரவைக்கும் பொதுகழிவறைகள் தான். நல்ல தமிழ் சொல் பஞ்சமோ தெரியவில்லை. கழிப்பறை என்ற சொல்லே குமட்ட வைக்கிறது. இலங்கை ஏற்போட்டில் இறங்கிய போது கவனித்தேன், டாய்லெட் என்பதை மல சலக்கூடம் என்று தமிழ் படுத்தியிருந்தார்கள், படித்தவுடனே உள்ளே செல்லவே யோசிக்க வேண்டி ஆகிப்போனது. பாத்ரூம் - டாய்லட் - ரெஸ்ட் ரூம் என ஆங்கிலத்தில் பரிணாமம் அடைந்திருக்கும் அந்த அறை நம் தமிழ் மொழியில் மட்டும் கழிவறை, கழிப்பறை என்றே இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் நல்ல முறையில் தமிழ்படுத்த முன்வரவேண்டும்.
இந்தியா என்று சொல்லும் பொழுது வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கு முதலில் நாட்டை பற்றி அக்கறை கொள்ளும் முதன்மை விசயமாக பொதுக் கழிவறைகளே முதலில் நினைவு வருகிறது. ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்களாம் என்று உள்ளே சென்றால் வாந்தியும் எடுத்துவிட்டு வயிறுகாலியாகி அப்பாட என்று மூச்சு முட்டவைத்த நினைவுதான் ஞாபகம் வருகிறது.
கம்யூட்டரில் வேலை செய்பவனை விட கழிவறை சுத்தம் செய்பவனுக்கு ஊதியம் அதிகம் கொடுத்தால் ஒருவர் கூட வெளிநாட்டிற்கு அந்த வேலைக்காக செல்ல மாட்டார்கள். நாம் காசு கொடுத்தால் கழிவறை சுத்தம் செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்பதை வெளிநாட்டு ஊழியர்கள் செய்து காட்டியும், அதைப் பற்றி அக்கறை செலுத்ததாமலே இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு 75% வருமான வரியை செலவு செய்யும் இந்திய அரசு ஒரு அரை சதவிகிதம் கூட பொதுக் கழிப்பறைகளின் சுத்தங்களுக்காகவோ, சுகாதார விழிப்புணர்வுகளுக்கோ செலவிடுவதில்லை என்பது வேதனையான விசயம். தேர்தல் காலங்களில் கிராமங்கள் தோறும் இலவச கழிப்பிடம் கட்டித் தருவோம் என்று சொல்லுவதுடன் அரசியல் வாதிகளின் அக்கறை முடிந்து விடுகிறது. அப்படி கட்டித்தந்த பொது கழிப்பிடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுவதில்லை. எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு சென்ற பொழுது புதிதாக நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தது, ஆனால் உபோயகப் படுத்தவில்லை. ஏன் என்று கேட்ட போது சொன்னார்கள், உள்ளே தண்ணீர் இல்லை தம்பி, வீட்டிலேர்ந்து தண்ணீர் எடுத்துவரவேண்டும், நாம அங்கே செல்வது ஊருக்கே தெரிந்துவிடும், அதுமட்டுமல்ல உள்ள போனாலே முக்கு அடைப்பு வந்திடும், வேற வழியில்லாம வாய்க்கால் வரப்பிற்கு போகிறோம் என்றார்கள்.
இதில் முகம் சுளிக்க வைக்கும் மற்றொரு விசயம் அத்தகைய சுகாதாரமில்லாத நகர்புற கழிவறைகளில் பாலியல் தொழில் நடப்பது தான். இந்திய கழிவறைகள் சுத்தமாகும் போது இந்தியா நிஜமாகவே ஒளிரும்.
****************
வேட்டுப் போட்டு,அவங்களை "டாய்லட்" போகவிட்டுவிட்டு;நாம கழிவறையிலே, நாறுறோம். அவங்க ஒரு நாளாவது இங்க போகவேண்டும்.இதுக்குக் கட்டணம் வேறு!!!
யோகன் பாரிஸ்
டாய்லெட்டை 'ஒப்பனை அறை' என்று சென்னை விமான நிலையத்தில் பார்த்த நினைவு...
ஜார்ஜ் புஷ் இராக்குக்குப் போயிருக்காராமே!
பேட்டி எடுக்க அங்கேப் போகலியா?
- ஷார்ஜாவாசி
Post a Comment