வீரம் பொங்கட்டும்!!!
Monday, January 15, 2007
போர்க்களத்தில் புறமுதுகிட்டு வந்த மகனைக் கண்டு வெட்கப்பட்ட தாயொருத்தி, அவனுக்குப் பால்கொடுத்த மார்பகத்தை வெட்டியெறிந்ததாக புறநானூற்றில் உள்ளது. காதலும் வீரமும் இருகண்களெனப் போற்றிய மரபுக்குச் சொந்தக்காரன் 'தமிழன்'.
(நேற்றைய ஜல்லிக்கட்டில் வீரம் காட்ட (குவாட்டருன்?) புறப்பட்ட தமிழர்கள் சிலரை (குடிகாரக்?) காளைகள் கொம்பால் முட்டி அடிவயிற்றை பதம் பார்த்து விட்டதாகவும் சுமார் 30 பேர் நிலைமை சீரியஸாக இருப்பதாவும் 'SUN" செய்தியில் சொன்னார்கள்). இதற்கு மாறான தினமலர் செய்தி (கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டவில்லை!!!)
நேற்றைய பெரும்பாலான பதிவுகள் பொங்கல் ஸ்பெஷலாக இருந்தன. பலர் ஜல்லிக்கட்டை வீரவிளையாட்டு என்றும் சொல்லி இருந்தார்கள். ஜல்லிக்கட்டில் துள்ளி வரும் காளையை (வூடு கட்டி) அட(டி)க்க களத்தில் 'ஆண்கள்' மட்டுமே இருந்தார்கள். என்ன ஒரு ஆணாதிக்கம்? ஆணும்-பெண்ணும் சமம் (என்பது வாயளவில் மட்டுமா?) ஏன் பெண்களுக்கு வீரமில்லையா?
இஸ்லாமியர்கள் (பெருநாளன்று சந்தோசமாக இருக்க) ஒட்டகங்களைக் கொண்டு வந்தால் 'நீதிமன்றம்' பிராணிவதை என்கிறது. ஜல்லிக்கட்டில் காளைகளை அ/(ம)டக்கி பாரம்பரிய வீரத்தை (மெயிண்டைன்) பண்ண (ஒரு சில கட்டுப்பாடுடன்) அனுமதிக்கிறது. (வாழ்க ஜனநாயகம்!)
சென்னை இன்ஸ்டிட்யூட்டில் குதிரைகளை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி மனிதர்களின் உயிர் காக்கும் மருந்து செய்யப் பயன்படுத்துவதை மாண்புமிகு மேனகா காந்தி அம்மையார் தடை செய்தார். (சமீபத்தில் பள்ளிச் சிறுவனை சுமார் 40-50 வெறிநாய்கள் கடித்துக் குதறியதாகப் படித்தது தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது) (வாழ்க ஜீவகாருண்யம்!).
பின்குறிப்பு: ப்ராக்கெட்டில் உள்ளவை உள்குத்து என்று கருதினால் நான் பொறுப்பல்ல!
(பொங்கலோ பொங்கல்)
3 comments:
/ப்ராக்கெட்டில் உள்ளவை உள்குத்து என்று கருதினால் நான் பொறுப்பல்ல!/
அப்ப யாருங்க பொறுப்பு????
சகோதரரே, பதிவு அருமை. இதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி. சமுதாயம் குழம்பி கிடக்கிறது. எது வீரம் எது மனிதாபிமானம் என்றே தெரியவில்லை. அதிகமான பேர் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக தான் இருக்கிறார்களே ஒழிய அறிவு பூர்வமாக சிந்திக்க மறுத்து அடம் பிடிக்கிறார்கள்.
//அப்ப யாருங்க பொறுப்பு???? //
ம்................ப்ராக்கெட்டைக் கண்டு பிடிச்சவன்.
Post a Comment