வெட்டி ஜோதிடம்!
Sunday, December 16, 2007
நாளொன்றுக்கு எத்தனை மணிநேரம் நீங்கள் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள் (அல்லது வெட்டிப்பேச்சு வலைப்பதிவுக்கு வருகிறீகள்:) என்று சொன்னால் உங்கள் வயதைச் சொல்ல முடியும்! கீழ்கண்ட கணக்கைச் செய்து விடையைப் பின்னூட்டினால் உங்கள் வயதைச் சொல்ல முடியும்! (ஹூம்..எப்படியெல்லாம் பின்னூட்டம் வாங்க வேண்டியுள்ளது!)
1) இன்றைய வெட்டிப்பொழுதுகள் _____ மணிநேரம். (உ..ம் “2”)
2) வெட்டிப்பொழுதை இரண்டால் பெருக்கிக் கொள்ளவும்.(2X2=4)
3) வரும் விடையுடன் ஐந்தைக் கூட்டவும்.(4+5=9)
4) வரும் விடையை ஐம்பதால் பெருக்கவும். (9x50=450)
5) உங்கள் பிறந்த நாள் இந்தவருடத்தில் கடந்திருந்தால் 1757 ஐ வரும் விடையுடன் கூட்டவும்; இன்னும் கடந்திருக்க வில்லை என்றால் 1756 ஐக் கூட்டவும்.(450+1757=2207)
6) வரும் விடையுடன் பிறந்த வருடத்தைக் கழிக்கவும்.(2207-1980=227)
7) தற்போது மூன்றிலக்க எண் (227) விடையாகக் கிடைக்கும்.
8) உங்களின் உண்மையான சொந்த வெட்டிப்பொழுதை (1) இல் இட்டு மூன்றிலக்க எண்ணைப் பின்னூட்டினால் உங்கள் வெட்டிப்பொழுதும், வயதும் சொல்லப்படும்.
அனேகமாக விடை தெரிந்திருக்கும். தெரியாத வெட்டியாளர்கள் மட்டும் பின்னூட்டவும். பெண்களின் பின்னூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.!
2 comments:
ஏங்க சார், உங்க வயதை 2007 ல் கழிக்கிறத உட்டுட்டு 2207 ல கழிக்கிறீங்களா?
//ஏங்க சார், உங்க வயதை 2007 ல் கழிக்கிறத உட்டுட்டு 2207 ல கழிக்கிறீங்களா?//
2007 இல் வயதைக் கழித்தால் பிறந்த வருடம்தானே வரும்! வேறு யாராச்சும் வெட்டியாளர்கள் இருக்கிறீர்களா? :-)
Post a Comment