மாண்புமிகு தீவிரவாதிகள்

Thursday, December 04, 2008



மும்பை தாக்குதல்களைப் புலணாய்வு செய்யும் அமைப்பைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை தாவூத் இப்றாஹிமுக்கும், மெளலான மசூத் அஸாருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கினால் என்ன சொல்வீர்கள்?

L.K.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, உமா பாரதி, மாண்புமிகு விநாய் கட்டியார் மற்றும் பலரும் மும்பை தாக்குதலை விடக்கொடிய தாக்குதலை நடத்தியதோடு ஆயிரக்கணக்கான மனித உயிர்களும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான உடமைகளும் இழக்கக் காரணமான பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இன்றி உறங்கி வருகிறது.


இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்குத் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், கேபினட் அமைச்சர் போன்ற உயரிய பதவிகளும் சலுகைகளும் வழங்கி கவுரவித்தோடு வழக்கைப் புலணாய்வு செய்யும் துறையை (CBI) கட்டுப்படுத்தும் அமைச்சகப் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட அநியாயம் உலகில் வேறெந்த நாட்டிலும் நடக்கவில்லை!



நூறாண்டுகால மும்பை தாஜ் நட்சத்திர விடுதியை பாரம்பர்யச் சின்னம் என்றும், அதன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியப் பாரம்பர்யத்தின்மீதே தாக்குதல் நடத்தியதற்குச் சமமென்று குடித்துவிட்டு,குடும்பத்தோடு ஆட்டம் போட்டு மகிழ்ந்தக் கோடீஸ்வரக் கணவான்கள் தாஜ் விடுதியின் நினைவு கூர்கிறார்கள்! நானூறாண்டுப் பழமையான பாபர் மசூதியும் அதைவிடப் பெருமை மிக்கது மட்டுமின்றி இறைவனைச் சிரம் வணங்கப் பயன்பட்ட பாரம்பர்யச் சின்னம் என்பதையும் ஏன் மறந்தீர்கள்?

மும்பை தாக்குதல் நடத்தியவர்களில் இருபதுபேர் பட்டியலைக் கொடுத்து, ஒப்படைக்கச் சொல்லும் நமது அரசு, நம் கண்ணதிரே ரதயாத்திரை வந்து கொண்டிருக்கும் மாண்புமிகு தீவிரவாதிகள்மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கோர் நீதி, அயோத்தியில் தாக்குதல் நடத்தியவர்களுகோர் நீதியா?

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளும் சரி, இந்தியாவில் ரத யாத்திரை வந்து கொண்டிருக்கும் வருங்கால தீவிரவாதப் பிரதமரும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்!

இந்தியாவில் ராமருக்குக் கோவில் கட்டமுடியாவிட்டால் பாகிஸ்தானிலா சென்றுகட்ட முடியும்? என்று ஜெயலலிதாகூட வக்காலத்து வாங்கினார். போயஸ் தோட்டத்தை அல்லது சிறுதாவூர் அரண்மனையை இடித்துவிட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டலாமே! எம்ஜியாருக்குத் தமிழகத்தில் நினைவுச் சின்னம் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும்?

பெண்களை 'இடித்தால்' ஈவ் டீசிங்கில் கைது செய்து ஏழு வருடம் உள்ளே தள்ள முடியும் போது மசூதியை 'இடித்த'தற்காகவும் உள்ளே தள்ளலாமே! மாண்புமிகு தீவிரவாதிகளுக்கு உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் எல்லாமே ஒன்றுதான் என்கிறீர்களா! அதுவும் சரிதான்!

2 comments:

Anonymous 12/04/2008 1:25 AM  

//போயஸ் தோட்டத்தை அல்லது சிறுதாவூர் அரண்மனையை இடித்துவிட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டலாமே! எம்ஜியாருக்குத் தமிழகத்தில் நினைவுச் சின்னம் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும்? //

SUPER KANNAA SUPER

Anonymous 12/06/2008 4:24 AM  

//இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்குத் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், கேபினட் அமைச்சர் போன்ற உயரிய பதவிகளும் சலுகைகளும் வழங்கி கவுரவித்தோடு வழக்கைப் புலணாய்வு செய்யும் துறையை (CBI) கட்டுப்படுத்தும் அமைச்சகப் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட அநியாயம் உலகில் வேறெந்த நாட்டிலும் நடக்கவில்லை!//
புலிகள் 16 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்பாணத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு செய்தனர். அந்த புலிகள் தமிழ்நாட்டில் வீரர்கள். இப்படி கவுரவிக்கப்பட்ட அநியாயம் உலகில் வேறெந்த நாட்டிலும் நடக்குமா?

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP