பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Sunday, March 22, 2009


மதவாதி: ஐயா! வெயில் காலத்துல கருப்புச் சட்டை போட்டிருக்கிறீர்களே?

பகுத்தறிவுவாதி: ஆமாங்கய்யா! நான் ஒரு பகுத்தறிவுவாதி!

மதவாதி: BLACKBODY RADIATION தெரியும்தானே?கருப்பு நிறம் வெப்பத்தைத் தக்கவைக்கும் பண்புடையது. வெயில்காலத்தில் கருப்புச்சட்டை உடம்புக்கு நல்லதல்ல என்று உங்கள் பகுத்தறிவிற்குத் தெரியாதா?
************
மதவாதி:ஐயா நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா?
பகுத்தறிவுவாதி: ஆமா! பகுத்தறிவுவாதிகள் சிலை வணங்கமாட்டோம்!
மதவாதி: அப்ப ஏனுங்கய்யா பெரியார் சிலைக்கும் மாலைபோட்டு பிறந்த/இறந்த தினத்தன்று கும்பிடுறீங்க?
*************
மதவாதி: ஐயா! கடவுளை ஏன் நம்பமாட்டீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுளை யாருமே கண்டதில்லையே ஐயா!
மதவாதி: பகுத்தறிவைக்கூடத்தான் யாரும் கண்டதில்லை! அதுக்காக உங்களுக்கு அறிவில்லை என்று சொல்ல முடியுமா?
பகுத்தறிவுவாதி: ?!
**************
மதவாதி: ஐயா நீங்கள் எப்படி உங்களைப் பகுத்தறிவுவாதி என்று சொல்கிறீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பகுத்தறிந்துள்ளோம் என்பதால் நான் பகுத்தறிவுவாதிதான்!
மதவாதி: ஓஹோ! கடைசியாக என்ன பகுத்தறிந்து முடிவுக்கு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி:கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்!
மதவாதி: ஏன் அப்படி ஒரு முடிவுகு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி: ஏனென்றால் அவரை யாருமே கண்டதில்லை!
மதவாதி: எவரை யாருமே கண்டதில்லை?
பகுத்தறிவுவாதி: அதான் சொன்னேனே. கடவுளை யாருமே கண்டதில்லை என்று!
மதவாதி: இல்லாத ஒன்றை எப்படிக் காணமுடியும்?
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் கடவுள் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
மதவாதி: இல்லை என்று 100% நிரூபனமாகும்வரை அப்படி ஒத்துக் கொள்ள மாட்டேன்!
பகுத்தறிவுவாதி: ஏன்?
மதவாதி: 100% நிரூபனமாகததை நம்புவதற்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை!
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் பகுத்தறிவுவாதியா?
மதவாதி: ஆமாம்! என் பகுத்தறிவுக்கு எட்டாததையும் நம்புகிறேன்.
பகுத்தறிவுவாதி: அப்படியென்றால் நாங்கள்?
மதவாதி: உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதை மட்டும் நம்புவதால் அரைகுறை பகுத்தறிவுவாதி என்று சொல்லலாம்!
பகுத்தறிவுவாதி: அப்ப முழு பகுத்தறிவுவாதியாக மாற என்ன செய்ய வேண்டும்?
மதவாதி: பகுத்து அறிந்து சரியானக் கடவுளை நம்புங்கள்

Read more...

15 கோடி தலையில்லா வாக்களர் அடையாள அட்டைகள்!

Saturday, March 21, 2009

பாஜக வேட்பாளாக பிலிபித் தொகுதியில் போட்டியிடும் தருண் S/o மேனகா காந்தேயின் மதவெறிப் பேச்சைத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

1) தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறியைத் தூண்டும்விதமாகப் பேசியதால் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தேர்தல் ஆணையம் தடை விதிக்கலாம்.

2) தருண் பாஜகவின் ஆங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரோ அல்லது உயர்மட்டத் தலைவரோ அல்ல என்று சொல்லி பாஜகவிலிருந்து கழட்டி விடப்படலாம்.

3) கருத்துரிமை,கற்பழிக்கும் உரிமை, தலைவெட்டும் உரிமை என்று ஏதாவது ஒரு உரிமையாகச் சொல்லப்பட்டு,குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அரைடவுசர்களால் சரிகாணப்பட்டு, தருண்தான் உண்மையான தேசபக்தன் என்றும் அவரின் வெற்றிக்குப் பாடுபடுவதே உண்மையான தேசபக்தர்களின் கடமை என்று மென்மேலும் மதவெறி ஊக்குவிக்கப்படலாம்.

ஏற்கனவே, நான் அவ்வாறு பேசவில்லை; பத்திரிக்கையாளார்கள் திரித்து விட்டார்கள் என்றார். வீடியோ ஆதாரத்தைக் காட்டியபிறகு தனது பேச்சு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்று அத்வானி,வாஜ்பாய் பாணியில் விளக்கம் அளித்துள்ளார்.இந்நிலையில் தருண்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கா விட்டாலோ அல்லது தேர்தலில் போட்டியிட தடைவிதிக்காவிட்டாலோ பாஜகவின் (கூட்டணி) வேட்பாளர்களும் இவ்விதம் பிரச்சாரம் செய்யக்கூடும் என்பதோடு தருண் வெற்றி பெற்றால் முஸ்லிம்களின் தலையை வெட்டுவார்!

பாஜக-தருணை தட்டிக்கொடுத்து ஆதரித்தாலோ உட்கட்சி பூசலால் மூழ்கிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்பும் பறிபோகும் என்பதோடு,மோடிக்குப் போட்டியாக பாஜகவில் இன்னொருவர் உருவாவதை தடுக்க முடியாது.

மொத்தத்தில் தருணை விட்டு வைத்தால் அ) முஸ்லிம்களின் தலைகள் வெட்டப்படும் ஆ) மோடிக்குப் போட்டியாக வந்து 2014 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளருக்கு மேலும் ஒருவர் வரக்கூடும்!

தருண் வெற்றிபெற்றால் முஸ்லிம்கள் தலையை இழக்கும் அபாயம் ஒருபக்கம் இருக்க சுமார் 15 கோடி புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் தலையின்றி இருக்கும்!

முஸ்லிம்களின் தலையை தேர்தல் கமிஷன் காப்பாற்றுமா?

Read more...

ராமர் கோவிலுக்குப் பதிலாக மொபைல் போன்!

Sunday, March 15, 2009

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மொபைல்போன் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஒருவகையில் நாட்டுக்கும் இதனால் நல்லது! தப்பித்தவறி வெற்றிபெற்றால் ராமர்கோவில் வேண்டுமா மொபைல்போன் வேண்டுமா என்றால் சமயச்சார்பின்றி மொபைல்போனே வேண்டுமென்பர்!

பெட்டிப்பாம்பு

தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு இலவசப்பொருட்கள் கொடுப்பதை விதிகளை மீறிவிட்டதாகச் சொல்லித் தண்டிக்கும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குப்பின் இதைத் தருவோம் அதைத்தருவோமென வாக்காளர்களை ஆசைகாட்டி ஓட்டு வாங்கும் வாக்குறுதிகளையும் தடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யா விட்டால் நாட்டிலேயே உச்சஅதிகாரம் கொண்டதாகச் சொல்லப்படும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்குப் பின் அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்குட்பட்டு அடங்கி நடப்பதாகிவிடுகிறது! விதிமுறைகள் என்ற பெயரில் அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்த ஆணையம்,தேர்தலுக்குப்பின் பெட்டிப்பாம்மாக அடங்கிப்போகக் கூடாது!

திருவிழா பரிசு!

தேர்தல்களை ஜனநாயகத் திருவிழா என்று பெருமையாகச் சொல்கிறோம். உண்மையானத் திருவிழா என்றால் பரிசுகளும் இருக்க வேண்டும்! கடந்த ஐந்தாண்டுகளாக மக்களைச் சுரண்டிய அரசியல்வாதிகளிடமிருந்தும் அடுத்த ஐந்தாண்டுகள் சுரண்டப்போகும் அரசியல்வாதிகளிடமிருந்தும் மக்கள் பயன் அடைவது தேர்தல் காலங்களில் மட்டுமே!.

தேர்தலுக்குமுன் வழங்கப்படும் இலவசங்களால் மக்களுக்கு உடனடிப்பயன் விளைகிறது. தொகுதிப்பக்கம் திரும்பிப் பார்க்காத வேட்பாளர்கள் தண்டமாக தொகுதி மக்களுக்கு வழங்குவதாகக்கருதி இலவச பரிசுப்பொருட்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்!

நாட்டாமை தீர்ப்பை மாத்து!

இதை வெளிப்படையாகக் கொடுத்தால்தான் வேட்பாளருக்குப் பிரச்சினை. ஊர்ப்பஞ்சாயத்துகளில் சிறப்புக் கூட்டம் போட்டு குறிப்பிட்ட தொகையைப் பஞ்சாயத்துக்கு கொடுத்து விட்டால் போதும்! ஊர்மக்கள் அதைப் பிரித்துக் கொண்டு ஊர்த்தலைவர் சொல்லும் கட்சிக்கு வாக்களித்து விடுவார்கள்.

இதனால் அரசியல்வாதிகளுக்கும் ஒருவகையில் நன்மையே. தனித்தனியாக கொடுத்தும் வாக்குகள் விழாமல் போயிருந்தால் தனிப்பட்ட முறையில் காரணம் கேட்கமுடியாது. பஞ்சாயத்துகள் மூலம் கொடுத்தால் எதிர்பார்த்த வாக்குகள் பெறாதபட்சத்தில் தலைவரின் துண்டைப் பிடித்து உரிமையுடன் கேட்க முடியும்!

என்னா நாஞ்சொல்றது!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP