ராமர் கோவிலுக்குப் பதிலாக மொபைல் போன்!
Sunday, March 15, 2009
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மொபைல்போன் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஒருவகையில் நாட்டுக்கும் இதனால் நல்லது! தப்பித்தவறி வெற்றிபெற்றால் ராமர்கோவில் வேண்டுமா மொபைல்போன் வேண்டுமா என்றால் சமயச்சார்பின்றி மொபைல்போனே வேண்டுமென்பர்!
பெட்டிப்பாம்பு
தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு இலவசப்பொருட்கள் கொடுப்பதை விதிகளை மீறிவிட்டதாகச் சொல்லித் தண்டிக்கும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குப்பின் இதைத் தருவோம் அதைத்தருவோமென வாக்காளர்களை ஆசைகாட்டி ஓட்டு வாங்கும் வாக்குறுதிகளையும் தடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யா விட்டால் நாட்டிலேயே உச்சஅதிகாரம் கொண்டதாகச் சொல்லப்படும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்குப் பின் அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்குட்பட்டு அடங்கி நடப்பதாகிவிடுகிறது! விதிமுறைகள் என்ற பெயரில் அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்த ஆணையம்,தேர்தலுக்குப்பின் பெட்டிப்பாம்மாக அடங்கிப்போகக் கூடாது!
திருவிழா பரிசு!
தேர்தல்களை ஜனநாயகத் திருவிழா என்று பெருமையாகச் சொல்கிறோம். உண்மையானத் திருவிழா என்றால் பரிசுகளும் இருக்க வேண்டும்! கடந்த ஐந்தாண்டுகளாக மக்களைச் சுரண்டிய அரசியல்வாதிகளிடமிருந்தும் அடுத்த ஐந்தாண்டுகள் சுரண்டப்போகும் அரசியல்வாதிகளிடமிருந்தும் மக்கள் பயன் அடைவது தேர்தல் காலங்களில் மட்டுமே!.
தேர்தலுக்குமுன் வழங்கப்படும் இலவசங்களால் மக்களுக்கு உடனடிப்பயன் விளைகிறது. தொகுதிப்பக்கம் திரும்பிப் பார்க்காத வேட்பாளர்கள் தண்டமாக தொகுதி மக்களுக்கு வழங்குவதாகக்கருதி இலவச பரிசுப்பொருட்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்!
நாட்டாமை தீர்ப்பை மாத்து!
இதை வெளிப்படையாகக் கொடுத்தால்தான் வேட்பாளருக்குப் பிரச்சினை. ஊர்ப்பஞ்சாயத்துகளில் சிறப்புக் கூட்டம் போட்டு குறிப்பிட்ட தொகையைப் பஞ்சாயத்துக்கு கொடுத்து விட்டால் போதும்! ஊர்மக்கள் அதைப் பிரித்துக் கொண்டு ஊர்த்தலைவர் சொல்லும் கட்சிக்கு வாக்களித்து விடுவார்கள்.
இதனால் அரசியல்வாதிகளுக்கும் ஒருவகையில் நன்மையே. தனித்தனியாக கொடுத்தும் வாக்குகள் விழாமல் போயிருந்தால் தனிப்பட்ட முறையில் காரணம் கேட்கமுடியாது. பஞ்சாயத்துகள் மூலம் கொடுத்தால் எதிர்பார்த்த வாக்குகள் பெறாதபட்சத்தில் தலைவரின் துண்டைப் பிடித்து உரிமையுடன் கேட்க முடியும்!
என்னா நாஞ்சொல்றது!
2 comments:
எலே என்னைய மனசுல வெச்சிதானே பொட்டிப்பாம்புன்னு சொல்றே?
பஞ்சாயத்து தலைவரு எல்லாத்தையும் சுருட்டாம இருக்கவும் வழி சொல்லுங்க காக்கா...................
Post a Comment