கத்தரிக்காய் தினம்
Saturday, February 13, 2010
"காதலுமில்லை கத்தரிக்காயுமில்லை"என்று காதலையும் கத்தரிக்காயையும் சேர்த்து சொல்வது ஏனென்று பலருக்கும் தெரியாது.எனக்கும்கூட தெரியாது என்பதுதான் ஹைலைட்!
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-14 ஐ காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்ற போர்வையில் ஆண்-பெண் சிலர் எல்லை மீறுவதும், அவ்வாறு எல்லை மீறுபவர்கள்மீது சிலர் அத்துமீறுவதும் சமீப வருடங்களாக நடந்து வருகிறது.
காதல் மனசு சார்ந்த விசயம் என்று காதலுக்கு மரியாதை செலுத்துபவர்கள் மனசை எதற்கு ஐந்து நட்சத்திர விடுதியில் குடித்துவிட்டு ஆட்டம் போட வேண்டும்? வாய் நாற்றத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே ஸ்ட்ராபோட்டு எப்படித்தான் கூல்ட்ரிங்ஸ் சாப்பிடுகிறார்களோ! (அதான் சார் காதல் என்று எவனோ முனுமுனுப்பது கேட்கிறது)
தலைப்பை விட்டு எங்கோ போய்விட்டேன்! காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்? கத்தரிக்காய்க்கு ஒரு நியாயம் காதலுக்கு ஒரு நியாயமா? மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் உடல்நலத்துக்கும் நிலத்துக்கும் எப்படி நல்லதல்லவோ அதேபோல் மரபு மீறிய காதலும் நல்லதல்ல.
ஆகவே, பிப்ரவரி-14 ஐ கத்தரிக்காய் தினமாக அனுஷ்டிப்போம்! ஒருவழியா தலைப்புக்கு வந்துவிட்டேன். (எவண்டா அழுகிய கத்தரிக்காயை வீசினவன்?)
4 comments:
அட நீங்கவேற காதலும் கத்திரிக்காயும் என்று சொல்லாமல் இனி காதலும் ஜெய்ராம் ரமேஷீம் என்று சொல்லலாம்.
நவம்பர் 23, 2009க்கு அப்புறம் இப்போ தான் பதிவு எழுதுறீங்க... மீண்டும் வலைப்பூவின் ஓட்டத்தோடு சேர்வத்ர்க்கு வாழ்த்துக்கள் அதிரை அவர்களே...
எப்படி உங்களால முடியுது
எப்படி உங்களால முடியுது ...
Post a Comment