உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?
Monday, April 05, 2010
தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.
விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.
கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.
தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.
மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!
தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.
இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://www.pudhucherry.com/
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot
குழுமங்கள்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:
http://valai.blogspirit.com/archive/2006/07/14/à®à®£à®¿à®¤à¯à®¤à®®à®¿à®´à®°à¯-à®à®®à®°à¯à®¤à®®à¯à®ªà®¿.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html
நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip
ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.


14 comments:
சகோதரரே, தங்களுக்கே உரித்தான பாணியில் மிக அருமையாக உமர்தம்பி மாமா அவர்களை பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் அனுமதித்தால் என்னுடைய வலைப் பூவிலும் தங்கள் கட்டுரையை பதிவு செய்கிறேன். பதிலாளிக்கவும்.
நிறைய தமிழ் ஆர்வ நண்பர்களுக்கு யூனிகோட் உமர் தம்பி அவர்களை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
மர்ஹும் உமர்தம்பி அவர்களுடன் மடலில் மட்டுமே உரையாடியுள்ளேன். அவ்வப்போது மொய்னுதீன் மூலம் அவர்களின் இணைய திட்டங்களைத் தெரிந்து கொள்வதுண்டு. இறுதியாக நான் அனுப்பியிருந்த மடலுக்கு பதில் வருவதற்குள் மவ்தாகி விட்டார்கள். அவர்கள் உருவாக்கிய எழுத்துறுக்கள் பெயரை அதிரை அல்லது உமர் என்று பெயர்மாற்றம் செய்யச் சொல்லியும் தன்னடக்கம் கருதியோ என்னவோ தவிர்த்து விட்டார்கள்.பிறகு இணைய தளங்களை எழுத்துறு நிறுவாமலேயே வாசிக்கும்படியான நிரழியை உருவாக்கி அதற்கு அதிரை என்று பெயரிட்டிருந்ததாக ஞாபகம்.
என்னுடைய வெட்டிப்பேச்சு வலைப்பூ குறித்து கருத்துக்கேட்டபோது, பிறரை பாதிக்காதவை நிச்சயம் வெற்றிபேச்சு என்று ஊக்கமளித்தார்கள்.
அற்புதமான மனிதரை கடைசிவரை சந்திக்க முடியாமல்போனது துரதிஷ்டம்.
அவர்களின் சேவைகளால் தமிழ்கூறும் நல்லுலகில் பல இலக்கியவாதிகளுக்கு பயன் கிடைத்துள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கவுரவிக்கப்பட வேண்டியவர்களில் தவிர்க்க முடியாத நபர். வலைப்பதிவர்கள் முயன்றால் இம்முயற்சி சாத்தியப்படும்.
(வெட்டியாக எழுதிய பதிவுகளுக்கு எல்லாம் பதிவிட்டு தமிழ்மணத்தில் திரும்ப திரும்ப முதல்பக்கத்தில் தெரியவிட்டவர்கள். இப்பதிவைக் கண்டுகொள்ளாதது சற்று ஏமாற்றம் தந்தது.
இப்பதிவை மீள்பதிவு செய்வதற்கு முழு சம்மதம். உடனே செய்து தமிழ் மணத்திலும் இணைப்பதுடன், வலைப் பதிவர்களுக்கும் கோரிக்கை வைக்கலாம். சிறுதுளி பெருவெள்ளம்!
தங்கள் அனுமதிக்கு மிக்க நன்றி,
என் வலைத்தளத்தில் பதிவாகிவிட்டது.
தமிழ்மணம் ஏனோ தெரியவில்லை என் வலைப்பூ செய்திகளை வெளியிடுவதில்லை. காரணம் கேட்டு இருக்கிறேன்.
என் கல்லூரி நண்பர் சகோதரர் சதக்கத்துல்லாஹ், சிங்கப்பூர் வானோலியில் தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார்,நிறைய தமிழ் ஆர்வளர்களுடன் தொடர்பு வைத்துள்ளார், அவருடன் உறையாடினேன், அவரால் முடிந்த முயற்சிகள் செய்வதாக வாக்களித்துள்ளார். இந்த செய்தியை தமிழ் நெசர்களிடம் கொண்டு செல்வோம், முயற்சி செய்வோம், பலன் கிடைக்கும்.
நிச்சயம் முயற்சி செய்வோம்
அந்த முயற்சியில் பங்குகொள்ள நானும் கடமைப்பட்டவன் உங்களுடைய பதிவு என் மன கிடக்கைக்கு உரமிட்டுள்ளது, இது என் பலநாள் வேட்கையும் கூட , நீங்கள் அனுமதி தந்தால் இந்தபதிவையும் மற்ற சில முயற்சிகளையும் ஒருங்கிணைத்து., பலவழிகளில் முயற்சி செய்யலாம், எதிர்பார்கின்றேன்.
உங்களின் கடந்தகால பதிவுகளுக்கும் மேலும் வரப்போகும் ஆக்கங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//நீங்கள் அனுமதி தந்தால் இந்த பதிவையும் மற்ற சில முயற்சிகளையும் ஒருங்கிணைத்து., பலவழிகளில் முயற்சி செய்யலாம், //
நண்பர் மு.அ.ஹாலித்,
கண்டிப்பாக இதற்கான முயற்சியை பல்வேறு தரப்பிலிருந்தும் துரிதப்படுத்த வேண்டும். நம்மாலான முயற்சிகளைச் செய்வதோடு இது குறித்த சக வலைப்பதிவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
சகோதரர் அதிரைக்காரன்,
நானும் இக்கட்டுரையை என் வலைத்தளத்தில் பதிவு செய்ய உங்களின் அனுமதியை எதிர்பார்க்கிறேன்...
நண்பர்களே! இப்பதிவிலுள்ள எதுவும் காப்புரிமை செய்யப்பட்டதல்ல. நல்ல நோக்கத்திற்காகவேண்டி என் பதிவிலுள்ள எந்தக் கட்டுரையையும் மீள்பிரசுரம் செய்யலாம்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் மர்ஹும். உமர்தம்பி அவர்களின் தமிழ்சேவையைக் கருத்தில்கொண்டு நாம் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற்றால் உங்களோடு மகிழ்பவர்களில் நானும் ஒருவன்.
நன்றி
தங்கள் அனுமதிக்கு மிக்க நன்றி,
என் வலைத்தளத்தில் பதிவாகிவிட்டது
Thanks..
www.adirai-info.blogspot.com
உமர் தம்பி காக்கா அவர்கள் பற்றிய கட்டுரை கீழ்கண்ட தளங்களில் நன்றியுடன் பதியப்பட்டுள்ளது,அதிரைக்காரனுக்கு நன்றி
http://peacetrain1.blogspot.com/
http://penaamunai.blogspot.com/
http://manithaneyaexpress.blogspot.com/
உமர் தம்பி காக்கா அவர்கள் பற்றிய கட்டுரை கீழ்கண்ட தளங்களில் நன்றியுடன் பதியப்பட்டுள்ளது,அதிரைக்காரனுக்கு நன்றி
http://peacetrain1.blogspot.com/
http://penaamunai.blogspot.com/
http://manithaneyaexpress.blogspot.com/
இலண்டன் தமிழ்சங்க மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பற்றி ஒரு கோரிக்கை சொற்பொழிவு!
http://adiraipost.blogspot.com/2010/04/blog-post_2508.html
தமிழெழுதியை ஒருங்கினைத்த
அதிரை யுனிகோட் உமர்தம்பி அவர்களின்
அனைத்து தகவல்கலும் சேகரித்து
அதற்கான ஒரு குழு அமைத்து
( அக்குழுவில் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜாமுஹைதீன், தமிழ் பேராசிரியர் அப்துல் காதர்,
மாஹிர், அதிரை அஹ்மத், அன்வர்)
இன்னும் சில, பல நல விரும்பிகளைஅனுகி., மேலும்
உள்லூர் வெளியூர் களில் இருக்கும்
அமைப்புகளை தொடர்புக்கொண்டு கல்விதுரைக்கு பரிந்துரை
செய்யலாமா?
கல்விதுரை முகவரி...
முதன்மைச் செயலர்,
உயர் கல்வித் துறை,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600 009'
Please more comment and Suggestion
பணம் பணம் என்று அலையும் இந்த உலகில் தனது கண்டு பிடுப்பை இலவசமாக இந்த உலகிற்கு அர்பணித்த அற்புத மனிதர் ஜனாப் உமர் தம்பி அவர்களின் பெயருக்கு முன்னால் அதிரை சீதக்காதி என்று போட்டு அன்போடு அழைக்கலாமே
Post a Comment