ஈரான் பல் டாக்டரின் பல்லை உடைப்பேன்! - ஜார்ஜ் புஷ்
Tuesday, April 03, 2007
டோனி ப்ளேரும் ஜார்ஜ் புஷ்ஷும் வெள்ளை மாளிகையில் அவசர சந்திப்புக்குப் பிறகு சர்வதேச செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள்.தன்னுடைய கோட் பட்டனை மூடிக்கொண்டே மேலுதட்டைக் கடித்துக் கொண்டு புஷ் ஆவேசமாக வருகிறார்.டோனி ப்ளேரும் புஷ்ஷுடன் கைகுலுக்கி விட்டு வாய்பொத்தி ஒரு ஓரமாக நின்று புஷ்ஷின் அறிக்கைக்காக ஆயத்தமாகிறார்.
புஷ்: நமது உடன்பிறவா சகோதரர் டோனியின் அன்புக் கட்டளையை மதிக்காமல் ஆணவமாக இங்கிலாந்து கடற்படையினரை பிடித்து வைத்திருக்கும் ஈரானுக்கு சரியான பாடம் கற்பிக்கப் போகிறோம்!சரியாகச் சொல்வதென்றால் மினி உலகக்கோப்பை....ஸாரி மினி உலகப்போர் -3 என்று சொல்லலாம்!
(ஒட்டு மொத்த நிருபர்களும் பரபரப்பாகிறார்கள்.ஃபாக்ஸ் நியூஸ் நிருபரின் பேனாவில் மை இல்லாததால் பேனாவை டென்சனுடன் உதறுகிறார்.டோனி ப்ளேர் ஓடிவந்து தன்னுடைய பேனாவைக் கொடுக்கிறார்.)
பி.பி.சி: மிஸ்டர் ப்ரெசிடெண்ட்! ஈரான் மீது அணுகுண்டு வீசுவீர்களா?
புஷ்: (புன்முறுவலுடன்) அவசரப்பட்டு அணுகுண்டு வீசிவிட மாட்டோம். ஐக்கிய நாடுகள் சபையில் இதற்கான சிறப்புத் தீர்மானம் போட்டு பான் கீ மூன் அவர்களின் அனுமதியுடன் குண்டு வீசவே அமெரிக்கா விரும்புகிறது.
சி.என்.என்: பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் ஈராக் மீது படையெடுத்தீர்கள். கடைசியில் அப்படியொன்றும் இல்லை என்பதால் உலக மக்களின் வெறுப்பை சம்பாதித்தீர்கள். அதேபோன்ற தவறை ஈரான் விசயத்திலும் அமெரிக்கா செய்யுமா?
புஷ்: ஈராக் விசயத்தில் FBI தந்த ரிப்போர்ட்டில் டைப்பிங் மிஸ்டேக் இருந்ததை நேற்றுதான் கோண்டி சுட்டிக் காட்டினார்.IRAN என்பதற்குப் பதிலாக IRAQ என்று டைப் செய்யப்பட்டிருந்தது. நானும் அப்படியே நம்பி படித்துத் தொலைத்து விட்டேன்.இத்தகைய டைப்பிங் மிஸ்டேக் ஈரான் விசயத்தில் நடக்காமல் கவனமாக இருப்போம்.
பாக்ஸ்: மிஸ்டர் பிரசிடெண்ட்! ஈராக் போரில் ஏழு இலட்சம் ஈராக்கியர்களைக் கொன்று சாதனை படைத்திருக்கிறீர்கள்.இந்த சாதனையை ஈரானுடனான போர் முறியடிக்குமா?
புஷ்: ஈரானுடனான போரில் பல யுக்திகளைக் கையாள்வோம்! 2007க்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர குறைந்தது ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கொன்றாவது ஈரானில் அமைதியை ஏற்படுத்துவோம். முக்கியமாக, அஹமது நிஜாஸின் பல் டாக்டரின் பல்லை உடைப்போம்!
தினமலர்: பல் டாக்டரின் பல்லை உடைப்பீர்களா!!! சற்று விபரமாகச் சொல்ல முடியுமா? அந்த பல் டாக்டர், அல் காயிதாவுக்கு பல் சப்ளை செய்பவரா?
புஷ்: ஆப்கானில் சில இலட்சம் முஸ்லிம்களைக் கொன்றோம்! யாரும் கேட்கவில்லை! ஈராக்கில் ஏழு இலட்சம் முஸ்லிம்களைக் கொன்றோம்!!அதையும் யாரும் கேட்கவில்லை!ஈரானில் ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கொன்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!!!அஹமது நிஜாஸின் பல் டாக்டரின் பல்லை உடைப்பேன் என்றதை மட்டுமே எல்லோரும் கவனிப்பார்கள்!!!
மேலும்,துரதிஷ்டவசமாக அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எனக்கு எதிராக போர்க் குற்றங்களை விசாரித்தால் சாதாரண பல் டாக்டரின் பல்லை உடைப்பேன் என்றதற்காக மட்டுமே விசாரிக்கப் படுவேன்! தீவிரவாதத்திற்கு எதிரான போர்களில் எதிரியின் பல்லை உடைக்கும் உரிமை (Special Right for Tooth-Breaking 2007) என்ற சிறப்புச் சட்டத்தை அதிபருக்குள்ள வீட்டோ பவர்கொண்டு எப்படியும் நிறைவேற்றுவேன்.
பேட்டியை நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டே சி.என்.என்னில் லார்ரி கிங் President's special rights for Tooth-Breaking 2007 பற்றிய காரசாரமான விவாதம் நடக்கிறது! செய்திகளை முந்தித்தரும் தினமலரில் "ஈரான் பல் டாக்டரின் பல் தப்புமா?" என்ற தலைப்புச்
செய்தியுடன் பரபரப்பாக விற்பனையாகிறது!
2 comments:
நல்ல கற்பனை...
//நல்ல கற்பனை...//
ஹி..ஹி..நன்றி ரவியண்ணா!
(மெய்யாலுமே ஜார்ஜ் புஷ் செஞ்சாலும் செய்வார்)
Post a Comment