மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள்!!! - தினமலர்

Sunday, April 08, 2007

மதுரை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை கேட்பவர்கள் நாளை (ஏப்.9) முதல் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மதுரை நகர் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜவஹர், போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன், சமூக நல அலுவலர் ஜெயலட்சுமி, டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிச்சைக்காரர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு அரைமணிநேரத்தில் மத்திய பஸ் ஸ்டாண்ட், மேலவெளிவீதியில் பிச்சை எடுத்த 25 பேர் போலீசாரால் "பிடித்து' கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு பிஸ்கட், பன் மற்றும் காபி வழங்கப்பட்டது.

பிச்சைக்காரர்களிடம் விசாரணை: பிச்சை எடுத்த ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்த கண் தெரியாத லீலா(65), சகோதரர் நாராயணன்(70) ஆகியோர் தங்களை பள்ளிவாசலில் சேர்த்து விட்டால் "பிழைத்துக்' கொள்வோம் என்றனர். மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாரி(21) பிச்சை எடுத்தே வளர்ந்துள்ளார். திருமணம் ஆகாமல் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ள அவர், அக்குழந்தையை வைத்து பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு வேலை கொடுத்தால் செய்வேன் என்றார்.

கணேசன் என்ற ஊனமுற்ற நபர், வயதான பெற்றோரை காப்பாற்ற தினமும் நத்தத்திலிருந்து வந்து பிச்சை எடுத்துச் செல்கிறார். இவருக்கு பசுமாடுகள் வழங்கி வேலை வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் 10க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். தங்களுக்கு தினமும் ரூ.50 முதல் ரூ.100 வரை வருவாய் கிடைப்பதாக அவர்கள் கூறினர். மறுவாழ்வு கவுன்சிலிங்: பிச்சைக்காரர்களுக்காக பெருங்குடி அருகே தனது ஐந்தரை சென்ட்டில் இல்லம் அமைக்க தயார் என்று மாதா பிதா உலக அமைதி சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ஜெயசந்திரன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர் ஜவஹர் கூறுகையில்,"பிச்சைகாரர்கள் குறித்து சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி மறுவாழ்வுக்கு தேவையான அரசு உதவிகள் செய்து தரப்படும். குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீதும், பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சைக்காரர்களுக்காக மதுரையில் இல்லம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது' என்றார்.

கமிஷனர் சுப்பிரமணியன் கூறுகையில்," கணக்கெடுப்பில் 120 பிச்சைக்காரர்கள் ஆதரவற்ற இல்லத்தில் சேர முன்வந்துள்ளனர். 80 பேர் விரும்பவில்லை. பிச்சைக்காரர்களில் 17 பேர் குருடர்கள், 29 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், 4 பேர் தொழு நோயாளிகள், 6 பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல் (ஏப்.9) பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்படுவர். முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும். இவர்கள் குறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றார்.

12 comments:

புகழேந்தி 4/08/2007 4:55 AM  

யோவ் அதிர,

என்னா ரொம்ப குளிர்விட்டுப் போச்சா? மதுரைக்காரய்ங்கன்னா இவ்ளோ எளக்காரமா?

மதுரைக்காரய்ங்க சீவிடுவோம் ஆமா!!

:)))

அதிரைக்காரன் 4/08/2007 5:15 AM  

கோவிச்சுக்காதீங்க புகழேந்தி,

தினமலர் ஸ்டைல்ல செய்தி கொடுத்துப் பார்த்தேன். எதுக்கும் நாளைக்கு வெளில வராம இருக்குறது நல்லதுன்னு நெனைக்கிறேன்.:-))) (சும்மா தமாசுக்குத்தான்)

குமரன் (Kumaran) 4/08/2007 5:49 AM  

அப்பூ. என்னப்பூ இப்புடி எழுதிப்புட்டீக? பிச்சைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் அப்படிங்கற செய்திக்கு மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள்ன்னு தலைப்பு போட்டிருக்கீங்க? அப்ப மதுரைக்காரவுங்க எல்லாம் பிச்சைக்காரங்கன்னா சொல்றீங்க? மதுரைக்காரங்கறதை ஒரு எழுத்து மாத்திப் போட்டா அதிரைக்காரன்னு ஆகிப்போகும். பாத்துக்கோங்கப்பூ.

Anonymous 4/08/2007 11:02 PM  

நல்லா மாட்னீங்க...சொ.செ.சூ....(ஆனால் தினமலர் இப்படித்தான் எழுதி வருகிறது என்பதுக்கு இது சரியான உதாரணம்)

அதிரைக்காரன் 4/08/2007 11:14 PM  

//மதுரைக்காரங்கறதை ஒரு எழுத்து மாத்திப் போட்டா அதிரைக்காரன்னு ஆகிப்போகும். பாத்துக்கோங்கப்பூ//

தினமலர் என்பதில் கடைசி ஒரு எழுத்தை மாற்றிப்போட்டா மூக்கைப் பொத்திக் கொள்ளும்படி ஆகிவிடும். தலைப்பு மட்டும்தான் தினமலர் ஸ்டைல்.மற்றபடி செய்தி என்னவோ உண்மைதானுங்களே குமரன் சார்.

அதிரைக்காரன் 4/08/2007 11:19 PM  

//நல்லா மாட்னீங்க... சொ.செ.சூ.... ஆனால் தினமலர் இப்படித்தான் எழுதி வருகிறது என்பதுக்கு இது சரியான உதாரணம்//

சொ.செ.சூ வைத்துக் கொண்டது தினமலர்தான்! ஆமா!! இனிமேல் பிச்சைக்காரர்கள் தினமலர் வாங்க மாட்டாங்களாம்!!! :-)))

Unknown 4/08/2007 11:26 PM  

//"மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள்!!! - தினமலர்

நல்லா எழுதியிருக்கிங்கய்யா. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். வாழ்த்துக்கள்.

நல்லடியார் 4/08/2007 11:34 PM  

//பிச்சைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் அப்படிங்கற செய்திக்கு மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள்ன்னு தலைப்பு போட்டிருக்கீங்க? அப்ப மதுரைக்காரவுங்க எல்லாம் பிச்சைக்காரங்கன்னா சொல்றீங்க? //

குமரன்,

எல்லா மதுரைக்காரர்களும் பிச்சைக்காரர்கள் அல்ல! ஆனால் எல்லா பிச்சைக்காரர்களும் மதுரைக்காரர்கள்! :-) இதை எதுக்கு சொல்றேன்னா "எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்ல! ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்" என்று சில வலைப்பதிவு மேதாவிகள் எழுதி இருந்தார்கள்.

அந்தவகையில் அதிரையார் சொன்னதில் உள்குத்து வச்சதாகத் தெரியவில்லை :-(

//மதுரைக்காரங்கறதை ஒரு எழுத்து மாத்திப் போட்டா அதிரைக்காரன்னு ஆகிப்போகும். பாத்துக்கோங்கப்பூ.//

ஆட்டைக் கழுதையாக்கியவரை இப்படியா கிடிக்கிப்பிடிப்பது?

அதிரையாரே,

என்ன இப்போதெல்லாம் ஆடு கிடைப்பதில்லையாக்கும்? ஹும்.. மதுரைக்கு வந்த சோதனை! :-)

அதிரைக்காரன் 4/08/2007 11:38 PM  

//நல்லா எழுதியிருக்கிங்கய்யா. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். வாழ்த்துக்கள்.//

tamil,

நான் எங்கே எழுதி இருக்கிறேன். எல்லாம் தினமலர் போட்ட பிச்சை!:-)

அதிரைக்காரன் 4/08/2007 11:43 PM  

//எல்லா மதுரைக்காரர்களும் பிச்சைக்காரர்கள் அல்ல! ஆனால் எல்லா பிச்சைக்காரர்களும் மதுரைக்காரர்கள்! :-) //

செம உள்குத்தா இருக்கே!

(மதுரை வெறிச்சுன்னு கிடைக்குதாம். யாராச்சும் 'சற்றுமுன்' காரங்க கன்பார்ம் பண்ணுவீங்களா?)

குமரன் (Kumaran) 4/10/2007 3:48 AM  

அப்பூ, போன பின்னூட்டத்துல சிரிப்பான் போட மறந்துட்டேன் போல இருக்கு. சேத்துக்கோங்க.

தினமலர் படிக்கிறதில்லை; வேற எந்த செய்தித்தாளும் தொடர்ந்து படிச்சதில்லை. எப்பவாவது சிவபாலன் எடுத்துப் போடற தினகரன் செய்திகளை படிச்சிருக்கேன். அதனால தினமலர் பாணியில இருக்கிற தலைப்பு இதுன்னு நீங்களும் பின்னூட்டம் போட்ட மத்தவங்களும் சொல்றதைப் பாத்தா ஒன்னும் புரியலை.

உள்குத்துகள் புரியாம இருக்கிறதே எனக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். நீங்களும் மத்தவங்களும் எழுதியிருக்கிறதப் பாத்தா தினமலர் மேல நல்ல கோவத்துல இருக்கீங்கன்னு மட்டும் புரியுது. மதுரைக்காரங்கற முறையில நகைச்சுவையோட இந்த இடுகை இருக்குன்னு நெனைச்சுக்கிட்டு அதே நகைச்சுவையோட எழுதுறதா நினைச்சுக்கிட்டு பின்னூட்டம் போட்டேன். அம்புட்டுத் தான்.

இதுக்கு மேல நீங்க சொன்னதுக்கும் மத்தவங்க சொன்னதுக்கும் பதில் சொல்றேன்னு நெனைச்சுக்கிட்டு ஏதாவது பின்னூட்டம் போட்டா சூழல் புரியாம மட்டிக்கிறதாத் தான் முடியும்ங்கறதால ஒன்னும் சொல்லிக்க விரும்பலை. :-)

அதிரைக்காரன் 4/10/2007 4:02 AM  

//மதுரைக்காரங்கற முறையில நகைச்சுவையோட இந்த இடுகை இருக்குன்னு நெனைச்சுக்கிட்டு அதே நகைச்சுவையோட எழுதுறதா நினைச்சுக்கிட்டு பின்னூட்டம் போட்டேன். அம்புட்டுத் தான். //

குமரன் சார்,

அதிரையின் விரிவாக்கம் அதிராம்பட்டினம்! இதன் விரிவாக்கம் அதிவீரராமபாண்டியன்பட்டினம்!! அதாவது பாண்டியமன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர்!!! எப்படியோ மதுரைக்காரரால் அதிரைக்காரன் பாதிக்கப் பட்டுள்ளார்!:-).

நானும் நகைச்சுவைன்னு நம்பித்தான் வெட்டியா எழுதினேன்! சீரியசா எடுத்துக்காதீங்கப்பூ.:-)

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP