சும்மா...
Monday, June 20, 2005
'சும்மா' என்ற வார்த்தையை பெரும்பாலான தென் இந்தியர்கள் அவரவர் மொழிகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகிக்கிறார்கள். "சும்மா" கெடந்த சங்கை ஊதிக் கெடுத்துப்புட்டான் என யாரும் "சும்மா" என்னை குற்றம் சொல்லாவிட்டால், "சும்மா" இது பற்றி அலசுவோம்.
ஏன் அதை தேவையில்லாமல் செய்தாய்? என்றால், "சும்மா" என்பது அத்தவறை சமாளிக்க உதவுகிறது.
காசு வேணாம்ப்பா. சும்மா வைத்துக் கொள்! என்றால் இலவசம் என பொருள்.
"சும்மா" சொல்லக் கூடாது சார்! இந்த வருஷம் கடுமையான வெப்பம்! என்றால் ஒரு நிகழ்வின் வீரியத்தை குறிக்க உதவுகிறது.
ஏய் கோ......., "சும்மா" கம்-முன்னு இரு - சென்னைத் தமிழில் அமைதியாக இரு என அர்த்தம்!
குறிப்பாக நம் தமிழர்கள், எதற்கெடுத்தாலும் "சும்மா" "சும்மா" (அடுக்குத் தொடர்?) "சும்மா" என்ற வார்த்தைய பிரயோகிக்கிறார்கள். ஏனெனில் பெரும்பாலும் "சும்மா" இருப்பது தமிழரின் பண்பு என ஒரு தமிழ் அறிந்த வட இந்திய நண்பர் சொல்கிறார். ஒருவகையில் இது உண்மை மாதிரி இருக்கு.
வட இந்திய மொழிகளிலோ அல்லது ஏனைய மொழிகளிலோ இது போன்ற "சும்மா" என்று அர்த்தப் படும் வார்த்தைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஏறக்குறைய "Simply", "Just" என்ற வார்த்தைகள் இவ்வர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றன.
"சும்ம"னாங்காட்டியும் மழுப்பாமல் உங்கள் கருத்தையையும் "சும்மா" Comments-ல போட்டு வைத்தால் யாராவது "சும்மா" இருப்பவர்கள் பயன் பெறுவார்கள்!
4 comments:
தாங்கள் பாரதியாரின் 'சும்மா' கட்டுரை படித்திருக்கிறீர்களா? அட்டகாசமாக இருக்கும்.
ச்சும்மா தூள் கெளப்பிட்டீங்க போங்க..!!
சும்மா இருக்கும் பொழுது சும்மா படிக்க்லாமே என்று சும்மா வந்தேனுங்க இப்பதாங்க தெரியுது சும்மா இருப்பவர்கள் சும்மா நிரையபேருன்னு நான் ஒன்றும் சும்ம சொல்லவில்லைங்கோ
Dear A-A,
Link that you given is not readble. What font you used?
Post a Comment