அடடா...(1)
Friday, July 01, 2005
வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஒரு சுற்றுலா பேரூந்து முக்கி முக்கி ஏறிக் கொண்டிருந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடியைத் தவிர! வாகனங்கள் ஒதுங்க அமைக்கப் பட்டிருந்த நிறுத்தம் வந்ததும் அந்த காதல் ஜோடிகள் இறங்கிக் கொண்டார்கள்.
தோளில் கை போட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே அவர்கள் அருகிலுள்ள கடையை நோக்கி
செல்லும்போது, மிகுந்த ஓசையுடன் ஒரு பாறை அவர்கள் வந்த பேரூந்தின் மீது விழுந்து பயணம் செய்த அனைவரும் நசுங்கி, இறந்து விட்டார்கள்.
அதிர்ச்சியுடன் திரும்பிய காதலன், "சே! நாமும் அந்த பேருந்தில் இருந்திருக்க வேண்டும்!" என்றான். அதுவரை ஆசையுடன் அவனுடன் வந்த காதலி, முதல் முறையாக அவனை வியப்புடன் நோக்கினாள்.
மேற்கண்ட சம்பவம் ஒரு கற்பனையே. எனினும், இதில் சில விஷயங்கள் இருக்கின்றன. அனேகமாக இதை இணையத்திலோ அல்லது ஈமெயிலிலோ படித்திருப்பீர்கள்.
நீங்கள், இதை ஏற்கனவே படித்திராவிட்டால், கீழ்கண்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:பாறை விழுந்து கண் முன்னே நொருங்கும் பேருந்தைப் பார்த்து, சே! நாமும் அந்த
பேருந்தில் இருந்திருக்க வேண்டும் என "ஏன்" காதலன் சொன்னான்?
விடை: யாரும் சொல்லாத பட்சத்தில் பின்னூட்டமிடப் படும்!


3 comments:
அவதாரம், சரியாக சொல்லிவிட்டீர்கள்!உங்கள் விடைக்கு எதிர்மாறாக அந்த காதலர்கள் தற்கொலை செய்ய நினத்திருந்திருக்கலாம் என்றால் அதற்கு எதிர்மறை சிந்தனை என்று சொல்லலாம்.இதையே பெரும்பலோர் சொல்வர்.
ஒரு கண்ணாடி கிளாஸில் பாதி தண்ணீர் இருப்பதாகக் கொள்வோம். இதிலிருந்து என்ன தெரிகிறது? என ஒருவர் உங்களிடம் கேட்கும்போது, அரை கிளாஸ் தண்ணீர் இருக்கிறது என்றால் நீங்கள் நேர்மறை சிந்தனை (Positive Thoughts)யாளர், பாதி கிளாஸ் வெற்றிடமாக இருக்கிறது என்றால் எதிர்மறை சிந்தனை(Negative Thoughts)யாளர். அதாவது எதிலும் குற்றம் குறை காண்பவர்.
வாழ்த்துக்கள் நீங்கள் நேர்மறை சிந்தனையாளர்!
// அதில் இருந்த அனைத்து பயணிகளும் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடியைத் தவிர! //
இது அரை கிளாஸ் தண்ணீரா அல்லது அரை கிளாஸ் வெற்றிடமா ? :-((
லதா கலக்கிட்டீங்க....!
Post a Comment