கோவ்ன் பனேகா அடுத்த ஜனாதிபதி?
Wednesday, February 14, 2007
இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு. அப்துல்கலாம் அவர்களின் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. இதுவரை ரப்பர் ஸ்டாம்பாகச் செயல்பட்ட முந்தைய ஜனாதிபதிகளை விட அப்துல் கலாம் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. .
தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் மீண்டும் ஒருமுறை இந்திய ஜனாதிபதியாக இருப்பதை மாணவர்களும் இளைஞர்களும் விரும்புவதாகத் தெரிகிறது. வழக்கம் போல் அரசியல் கட்சிகளும் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க தகுதியான 'பெரிசு'களை பரிசீலித்து வருகிறார்கள். முதல் கட்ட பரிசீலனையில் காங்கிரஸ் சார்பில் கரண் சிங்கும், கம்யூனிஸ்டுகள் சார்பில் ஜோதிபாசுவும் இருக்கிறார்கள்.
அதிமுக,தெலுங்குதேசம்,சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் சார்பில் இந்திப்பட நடிகர் அமிதாப் பச்சனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் திட்டம் உள்ளதாக சன் செய்தியில் நேற்று முன்தினம் சொன்னார்கள்.
அமிதாப்ப, சில மாதங்களுக்கு முன் வயிற்றுப் போக்கால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டதை தலைப்புச் செய்தியாக இருந்தது போக, பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளோடு நடிகர்களுக்குக் கிடைக்கும் பெரும்பாலான விருதுகள் அமிதாப் பச்சனுக்குக் கிடைத்து உள்ளன. மேலும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயின் மாமனார் என்ற விருதும் (?) கிடைத்திருக்கிறது.
2020க்குள் வல்லரசாகப் போகும் நம்நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நடிகர் அமிதாப் பச்சன் பொருத்தமான கேரக்டரா என்று தெரியாது. அதற்குமுன் ஜனாதிபதி கேரக்டரில் எப்படி இருப்பார் என்று கொஞ்சம் வெட்டல்-ஒட்டல் செய்து அரசியல்வாதிகளின் சிரமத்தைக் குறைத்துள்ளேன்.
பி.கு: இப்பதிவில் கண்டிப்பாக :-) மாதிரியான Smily Only பின்னூட்டங்கள் அனுமதிக்கப் படாது என்பதால் அடுத்த ஜனாதிபதிக்குத் தோதான ஆட்களைப்பற்றி பின்னூட்டமாகவோ அல்லது சொந்த ஒட்டல்-வெட்டல் மூலமோ சொல்லலாம். :-)
0 comments:
Post a Comment