வயிற்றில் மோதிரம், பூட்டு, சாவி

Thursday, March 01, 2007

மதுரை தையல்காரர் ஜம்முகான் வயிற்றிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் அரசு டாக்டர்கள் வெளியே எடுத்த மோதிரம், பூட்டு, சாவி உள்ளிட்ட ஒன்றரை கிலோ எடை கொண்ட 236 வகையான பொருள்கள் அகற்றப்பட்டன. இப் பொருள்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



இது தொடர்பாக அரசு பொது மருத்துவமனை இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் ஸ்ரீகுமாரி தாமோதரன் கூறியதாவது:

"மதுரையைச் சேர்ந்த தையல்காரர் ஜம்முகான் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மீண்டும் அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டு வயிற்றுப் பகுதியில் வலி அதிகமானது. உடனே அவருக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட சோதனைகளை மதுரை மருத்துவர்கள் செய்தனர்.

அவரது வயிற்றில் மோதிரம், பூட்டு, சாவி உள்பட இரும்புப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜம்முகானை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவரது உறவினர்கள் கடந்த பிப். 4-ம் தேதி சேர்த்தனர். இரைப்பை-குடல் மருத்துவக் குழுவினர் அவரைச் சோதித்தனர். ஸ்கேன் செய்து பார்த்ததில் 6 நாணயங்கள், 6 மோதிரங்கள், 3 கத்திரிக்கோல், 4 சாவி, 2 பூட்டு, 3 கரண்டி, 1 கடிகாரம், 3 குண்டூசி, 10 ஆணி, சிறு சிறு இரும்புத் துண்டுகள், உள்பட 236 வகையான பொருள்கள் இருந்தன.

இதையடுத்து இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கடந்த பிப். 8-ம் தேதி அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து அனைத்துப் பொருள்களையும் அகற்றினர். அறுவைச் சிகிச்சை மேஜையிலேயே மீண்டும் ஒரு முறை எக்ஸ்ரே படம் எடுத்து அனைத்துப் பொருள்களும் அகற்றப்பட்டுவிட்டனவா என ஊர்ஜிதம் செய்யப்பட்டது. தற்போது ஜம்முகானுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

தினமணி

1 comments:

Anonymous 3/01/2007 10:11 AM  

அப்ப இனி அவரு அத வச்சே பொழப்பு நடத்திக்கலாம்?

ஜோக்காக சொன்னாலும், மனது ஏனோ பாவம் எந்த புண்ணியவள் பெற்ற பிள்ளையோ.

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP