+91 9316048121 கொலைகார நம்பரா?

Wednesday, April 25, 2007

வழக்கம்போல ஏதாவது வெட்டியா எழுதலாம்னு ஈமெயில் இன்பாக்ஸைத் திறந்தால் "Deadly Numbers" என்று தலைப்பிட்ட மடல் வந்திருந்தது.

Hi All ,



Its very important news for all of you. Do not pick up calls from the Under given numbers. 9888308001, +91 9316048121, 9876266211, 9888854137, 9876715587 These numbers will come in red color, if the call comes up from these numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency and it causes brain ham range.


It's not a joke rather, its TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7.


Forward this message to all u'r friends and colleagues, and relative


XXXXXX (இதுக்கு வலைப்பூக்களில் வேறு அர்த்தம். ஆனால் இங்கே அனுப்புனர் பெயரை மறைத்துள்ளேன் :-)


சில வருடங்களுக்கு முன் கலர் கலரான நோட்டீஸ்கள் கொத்து கொத்தா கிடக்கும். ஆர்வத்தில் எடுத்துப் படித்தால் குலை நடுங்கும்படியான செய்திகள் இருக்கும். இறுதியாக அந்த நோட்டீஸை 100-200 பிரிண்ட் போட்டு விநியோகிக்கனும். இல்லாவிட்டால் வயிறு வீங்கியோ அல்லது பேதில போயோ சாவு வரும் என்ற "சுபச்செய்தி" சொல்லப்பட்டிருக்கும். அதுமாதிரியான மிரட்டல்கள்தான் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளதால் மேற்கண்டவாறு கட்டுக்கதையாக இணையத்தில் வலம் வருகின்றன.



லேட்டஸ்ட் கேமரா ஃபோன்

இத்தகைய மிரட்டல்கள் மற்றும் பரபரப்பான (தினமலர்?) செய்திகளை உறுதி செய்வதற்கென்றே பல இணையதளங்கள் சேவையாற்றுகின்றன. குறிப்பாக www.sonpes.com இத்தகைய செய்திகளைப் பற்றிய புலணாய்வைப் புட்டு புட்டு வைக்கும். மேலும் கூகிலிலும் கிடைக்கலாம்.



இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், சுட்டியில் இச்செய்தியை வறுத்து எடுத்துள்ளார்கள். ஒட்டுமொத்த பதில்களின் சாராம்சம் "உண்மையல்ல; கட்டுக்கதை" என்றே சொல்கின்றன.


முக்கியமான பதில்களைச் சுருக்கமாக வைக்கிறேன்.


1) The ringing of your cell phone DOES NOT depend on the number where the ring is coming from... and it is not really known that ANY cell phone device thus far can cause any "brain hamarage"... if it can, you would see them regulated worse than guns !!! (அதானே! இதுமட்டும் சாத்தியப்பட்டால், இன்னேரம் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஏகப்பட்ட மொபைல் கால் வந்திருக்குமே!)


2) You need to see a doctor , fast if you actually believe this. (தஞ்சாவூர் கோர்ட் எதிர்புறம் "பேனா வைத்தியர்"னு ஒருத்தர் இருந்தார். இன்னேரம் மொபைல் போன் வைத்தியராகி இருக்கலாம். எதுக்கும் அவரையும் ஒரு நடை பார்த்துடுங்க)


3) Dear Lord, if you really believed this Hell must have frozen over already. (இதைத்தான் செந்தமிழில் "கேக்குறவன் கேணையன்னா...K.R......" என்று சொல்வார்கள்.)
4) Neh...... It's just a man trying to seek atention. First it came from Pakistan, it's about a virus that can spread threw mobilephones. (எல்லை தாண்டிய தீவிரவாதம் எப்படியெல்லாம் செய்றானுங்க பாருங்க!)


5) First of all, wavelength has inverse relationship to frequency, so the higher the frequency, the smaller the wavelength. suppose it's true that your phone produce the high frequency, then I think the radiation from the frequency is not strong enough to damage your brain. Do you know how much power the microwave need just to warm th food? at least 700w, and how come the cell phone battery able to supply such high power. the radiation will be small, and you will not hear anything, since human's ears are only able to respond from 20 - 20,000 hz. we hear nothing outside that range. (இரு மொபைல் போனை வைத்து முட்டை அவிக்கலாம்னு ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்)


6) The first and the most effective organ can be heart and not mind for hi frequency (ரசிகவ் ஞானியார் கவனிப்பாராக!)


7) BUT THIS TRUE!!!! IT REALLY HAPPENED AND IAM THE 3RD GUY WHO DIED BECAUSE OF THIS. RIGHT NOW IAM WRITING FROM HELL!!!! (நியாயமா சொர்க்கத்துல இருந்துதானே எழுதியிருக்கனும். ஒருசமயம் இந்த சுபச்செய்தியை பரப்பியவரே இவர்தானோ?


அப்புறம், இது நமக்கு நூறாவது பதிவு. முந்தைய 99 பதிவுகளில் தொன்னூறுக்கும் மேற்பட்டவை உண்மையிலேயே வெட்டிதான். தமிழ்மணம் நட்சத்திரவாரத்தில் எழுதியவற்றிலும் ஒன்னு ரெண்டு போக மீதி எல்லாமே 100% வெட்டிதான். (நட்சத்திர வாரத்துல அதைத்தானே செய்ய முடியும்?).


வேலை மெனக்கெட்டு வெட்டியாக 100 பதிவுகள் எழுதியதற்கு முழுபக்க விளம்பரம்,வாழ்த்து தந்தியெல்லாம் வேண்டாம். முடிஞ்சா ஒரு பின்னூட்டம் போடுங்க (போட்டுத் தொலைங்க!)

Read more...

நடேசன் பார்க் அருகில் உளவுத்துறை அதிகாரி?

Sunday, April 22, 2007


நடேசன் பார்க் பற்றி கூகில் தேடியபோது இவர் சென்னை நடேசன் பார்க் அருகில் இருந்ததாக ஒரு ப்ளாக்கில் சொல்றாங்க.! உளவுத்துறை அதிகாரியாக இருக்க வாய்ப்புண்டு?

மூன்று வருடங்களுக்கு முன்னால் அந்த ஏரியாவில் இருந்திருக்கிறார். இன்று ப்ளாக்கர் மீட்டிங்கில் கலந்து கொண்டாரா என்று தெரியாது. யாரேனும் சந்தித்திருந்தால் அவரைக் கேட்டதாகச் சொல்லவும். :-)

Read more...

எயிட்ஸ் விழிப்புணர்வு கொழுந்து விட்டு எரிகிறது

Tuesday, April 17, 2007

தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் லாரி டிரைவர்களுக்கான எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் "எயிட்ஸை உலக அளவில் பரப்பிய ஹாலிவுட்" நடிகர் ரிச்சர்ட்ஸ் கேட், "எயிட்ஸை இந்திய அளவில் பரப்பிய கோலிவுட்" நடிகை ஷில்பா செட்டியை பிரச்சார மேடையில் வைத்து முத்தமிட்டதைத் தொடர்ந்து எயிட்ஸ் விழிப்புணர்வு கொழுந்து விட்டு எரிவதை கீழ்கண்ட படங்க உணர்த்துகின்றன.



இதைத்தான் சொந்த செலவுல சூன்யம் வைப்பது என்பார்களோ?

Read more...

மேனகா காந்தியை தெருநாய் கடிக்கட்டும்!

Wednesday, April 11, 2007

நேற்று தினமணியில் சில 'கடி'தங்கள் வந்திருந்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும்!

நாய்க்கடியால் அவதி
தெரு நாயால் "வெறிநோய்' - கு. கணேசன் கட்டுரை (30-3-07) படித்தேன்.
நம்முடைய அலட்சியப் போக்கால் அனுபவிக்கும் துன்பங்களில் தெருநாய்க் கடி மோசமானது. நாள்தோறும் நாய், குரங்கு, பன்றி, கொசு ஆகியவற்றின் பிடியில் மக்கள் சிக்கி அல்லல்படுகின்றனர்.

நாய் வளர்ப்பில் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பிட்ட சில மாதங்களிலேயே அவற்றைக் கண்காணிப்பு செய்யாமல் வெளியே அலைய விடுகின்றனர். இவற்றுடன் எந்த அரவணைப்பும், பாதுகாப்பும் இல்லாத தெருநாய்களும் சேர்ந்து கொள்கின்றன. இந்தக் கூட்டணி முடிந்தவரை மக்களை விரட்டி, மிரட்டி நடுங்கச் செய்து வருகின்றன.

தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் ஒழிப்பில் அந்தந்தத் தெருவைச் சார்ந்தவர்கள் விழிப்புணர்வுடன் ஈடுபட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளோடு தொடர்பு கொண்டு வெறி நாய்களை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும். அரசு சார்ந்த மருத்துவமனைகள் வெறிநாய் தடுப்பூசி மருந்துகளை போதிய அளவுக்கு கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
கோ. தமிழரசன், செஞ்சி.
------------------------------------
தீவிர நடவடிக்கை
வெறிநோயால் இறப்பவர்கள் உலகிலேயே 80 சதவீதம் இந்தியாவில்தான் என்றால் அறிவியல் தொழில் நுட்பத்தில் உலகில் முன்னேறிய ஆறாவது நாடு என்பதில் அர்த்தமில்லை.

உலக அளவில் இந்தியாவில் பல பணக்காரர்கள் இருந்து என்ன பயன்? வெறும் தெருநாயைக் கூட ஒழித்து "வெறிநோய்' போக்காத நாடு ஒரு நாடா என எண்ணத் தோன்றவில்லையா?

உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு பணிகளைக் கண்காணிப்பதுபோல தெரு நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் விலை மதிப்பில்லாத மனித உயிர்களை "வெறிநோயிடமிருந்து' காப்பாற்ற முடியும்.

ஆ. கோவிந்தராசலு, புதுச்சேரி.
----------------------------------------
ஏற்க இயலாது

பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் என்ற பெயரில், நாய்களைத் தெருக்களில் திரிய விடுவது, உயிர்க் கருணையாக ஏற்றுக்கொள்ள இயலாது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான உயிர்கள் மனிதர்களின் வயிற்றுக்குள் உணவாகச் செல்கின்றன. இந்நிலையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் எங்கே உள்ளது? என்ன செய்கிறது?

தெருக்களில் அலைந்து திரியும் நாங்கள், விலைமதிக்க முடியாத மனித உயிர்களைப் பறிக்க இடந்தரலாமா? புதுச்சேரியில் அன்றைய பிரெஞ்சு ஆட்சி, தெருக்களில் அலைந்து திரியும் நாய்களைப் பிடித்துக் கொன்று மனித உயிர்களைக் காப்பாற்றி வந்தது. ஆனால் இன்றோ தெருநாய்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து வருகின்றோம்.

வை. பாவாடை, புதுச்சேரி.
---------------------------------
எது ஜீவகாருண்யம்?
எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாகவோ, தொழில்நுட்ப வல்லுநராகவோ, மருத்துவ மேதையாகவோ வரவேண்டிய இளஞ்சிறார்களை வெறி நாய்களுக்குப் பலி கொடுப்பது மன்னிக்க முடியாத செயல். உடனடியாக வெறி நாய்களை அழிக்கத் தவறிவிட்டால் வெறிநாய்க் கடியால் இறப்போர்களின் எண்ணிக்கை அதிகமாவதைத் தடுக்க முடியாது.

ஜீவகாருண்யம் பற்றி பேசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மீன், நண்டு, கோழி, ஆடு, மாடு போன்ற விலங்குகளைக் கொன்று குவிக்கிறார்களே உண்பதற்காக, அதை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றன? இந்த இனங்களுக்கு மட்டும் உயிர்கள் இல்லையா?

தொண்டு நிறுவனங்கள் இதைப்பற்றியெல்லாம் கருத்தில்கொள்ளாமல் வாளாவிருந்து விடுகிறதே ஏன்? கட்டுரையாளர் குறிப்பிட்டதுபோல் "வெறிநோய் பிடித்த நாய்களைக் கொல்லும் சட்டத்தை' மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வெறிநாய்களுக்குப் பலி கொடுப்பது மடமையின் உச்சகட்டம்.

ஆர். பூமிநாதன், சென்னை.
---------------------------------
யார் காரணம்?

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களால்தான் தெருநாய் உருவாகிறது. தேவையற்ற குட்டிகளைத் தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகின்றனர் வீட்டில் நாய் வளர்ப்போர்.

வீட்டில் நாய் வளர்ப்போருக்கு வரி விதிக்க வேண்டும். தெரு நாய்க் கடியால் பாதிக்கப்படுவோரின் சிகிச்சைக்கு இந்த நிதியைக் கொடுத்து உதவலாம். கடுமையான நோய்களைப் பரப்பும் கொசுக்களைக் கொல்லும்போது, காண்பிக்கப்படாத மனிதாபிமானம், மரணத்தை ஏற்படும் நாய்களின் மீது மட்டும் காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல்.

பிராணிகள் நலச் சங்கத்தினர் ஊர்தோறும் சென்று நாய்களைப் பிடித்துப் பராமரிக்கட்டும். வீட்டில் நாய் வளர்ப்போர், அவற்றுக்காக தங்கள் வீட்டில் தனி கழிப்பறைகளைக் கட்டி வைத்திருக்கிறார்களா!

காலை, மாலை நடைப்பயிற்சி என்ற போர்வையில் தெருவுக்கு கூட்டி வந்து குறிப்பாக, விளக்குக் கம்பங்களின் அடியில் நாய்களை விட்டு அசிங்கப்படுத்தும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
------------------------------------------

ஹைதராபாத், ஏப். 10: கல்லூரிக்குத் தேர்வு எழுதச் சென்ற 10 மாணவிகளை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தேர்வைத் தள்ளிவைத்தது.

ஹைதராபாத் கோதி பெண்கள் கல்லூரி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சந்து வழியாக சென்று கொண்டிருந்தபோது தெருநாய்கள் அவர்களைச் சுற்றி வளைத்து கடித்துக் குதறத் தொடங்கின. தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக நகராட்சி அலுவலகத்திடம் தகவல் தெரிவித்தனர். நக ராட்சி ஊழியர்கள் நாய்களைப் பிடித்துச் சென்றனர்.

நாய்கள் கடித்ததால் காயமடைந்த மாணவிகள் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
------------------------------------
கல்லூரிப் பெண்களை கிண்டல் செய்யும் விடலைப்பசங்களை ஈவ் டீசிங்கில் தண்டிக்கும் அரசே! நாய்களையும் கைது செய்!

பின்குறிப்பு: தலைப்பு நெருடலாக இருக்கிறதே என்று குழம்புபவர்களின் மேலான கவனத்திற்கு! மனிதர்களை விட மிருகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே அமைச்சராக இருந்தவர் அன்னை மேனகா காந்தி! அதனால்தான் இப்படி ஒரு தலைப்பு!!!

இப்படிக்கு,

தெருநாய்களிடம் தொடையைக் கொடுத்தவர்கள் சார்பில்,
:-(தொடை நடுங்கியபடி பயத்துடன்:-)
அதிரைக்காரன்

Read more...

முதலாளியிடம் சம்பள உயர்வு கேட்பது எப்படி?

Tuesday, April 10, 2007

சம்பள உயர்வு கேட்டு அமெரிக்க முதலாளிக்கு எழுதிய கடிதம்:

Dear Bo$$

In thi$ life, we all need $ome thing$ mo$t de$perately. I think you $hould be under $tanding of the need$ of our worker$ who have given $o much $upport including $weat and $ervice to your company .

I am $ure you will gue$$ what I mean and re$pond $oon.

$ incerely Your$,
Money Kandan

==================
முதலாளியிடமிருந்து வந்த பதில்:

Dear Kandan,

I kNOw what you have been working very hard. NOwadays, NOthing much has changed. You must have NOticed that our company is NOt doing NO ticeably well as yet . NO w the newspaper are saying the world`s leading ecoNOmists are NO t sure if the United States may go into aNO ther recession. After the NOvember presidential elections things may turn bad . I have NOthing more to add NOw. You kNOw what I mean .

Yours truly,
MaNOj MeNOn -Manager

Read more...

மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள்!!! - தினமலர்

Sunday, April 08, 2007

மதுரை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை கேட்பவர்கள் நாளை (ஏப்.9) முதல் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மதுரை நகர் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜவஹர், போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன், சமூக நல அலுவலர் ஜெயலட்சுமி, டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிச்சைக்காரர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு அரைமணிநேரத்தில் மத்திய பஸ் ஸ்டாண்ட், மேலவெளிவீதியில் பிச்சை எடுத்த 25 பேர் போலீசாரால் "பிடித்து' கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு பிஸ்கட், பன் மற்றும் காபி வழங்கப்பட்டது.

பிச்சைக்காரர்களிடம் விசாரணை: பிச்சை எடுத்த ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்த கண் தெரியாத லீலா(65), சகோதரர் நாராயணன்(70) ஆகியோர் தங்களை பள்ளிவாசலில் சேர்த்து விட்டால் "பிழைத்துக்' கொள்வோம் என்றனர். மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாரி(21) பிச்சை எடுத்தே வளர்ந்துள்ளார். திருமணம் ஆகாமல் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ள அவர், அக்குழந்தையை வைத்து பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு வேலை கொடுத்தால் செய்வேன் என்றார்.

கணேசன் என்ற ஊனமுற்ற நபர், வயதான பெற்றோரை காப்பாற்ற தினமும் நத்தத்திலிருந்து வந்து பிச்சை எடுத்துச் செல்கிறார். இவருக்கு பசுமாடுகள் வழங்கி வேலை வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் 10க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். தங்களுக்கு தினமும் ரூ.50 முதல் ரூ.100 வரை வருவாய் கிடைப்பதாக அவர்கள் கூறினர். மறுவாழ்வு கவுன்சிலிங்: பிச்சைக்காரர்களுக்காக பெருங்குடி அருகே தனது ஐந்தரை சென்ட்டில் இல்லம் அமைக்க தயார் என்று மாதா பிதா உலக அமைதி சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ஜெயசந்திரன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர் ஜவஹர் கூறுகையில்,"பிச்சைகாரர்கள் குறித்து சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி மறுவாழ்வுக்கு தேவையான அரசு உதவிகள் செய்து தரப்படும். குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீதும், பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சைக்காரர்களுக்காக மதுரையில் இல்லம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது' என்றார்.

கமிஷனர் சுப்பிரமணியன் கூறுகையில்," கணக்கெடுப்பில் 120 பிச்சைக்காரர்கள் ஆதரவற்ற இல்லத்தில் சேர முன்வந்துள்ளனர். 80 பேர் விரும்பவில்லை. பிச்சைக்காரர்களில் 17 பேர் குருடர்கள், 29 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், 4 பேர் தொழு நோயாளிகள், 6 பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல் (ஏப்.9) பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்படுவர். முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும். இவர்கள் குறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றார்.

Read more...

ஈரான் பல் டாக்டரின் பல்லை உடைப்பேன்! - ஜார்ஜ் புஷ்

Tuesday, April 03, 2007

டோனி ப்ளேரும் ஜார்ஜ் புஷ்ஷும் வெள்ளை மாளிகையில் அவசர சந்திப்புக்குப் பிறகு சர்வதேச செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள்.தன்னுடைய கோட் பட்டனை மூடிக்கொண்டே மேலுதட்டைக் கடித்துக் கொண்டு புஷ் ஆவேசமாக வருகிறார்.டோனி ப்ளேரும் புஷ்ஷுடன் கைகுலுக்கி விட்டு வாய்பொத்தி ஒரு ஓரமாக நின்று புஷ்ஷின் அறிக்கைக்காக ஆயத்தமாகிறார்.

புஷ்: நமது உடன்பிறவா சகோதரர் டோனியின் அன்புக் கட்டளையை மதிக்காமல் ஆணவமாக இங்கிலாந்து கடற்படையினரை பிடித்து வைத்திருக்கும் ஈரானுக்கு சரியான பாடம் கற்பிக்கப் போகிறோம்!சரியாகச் சொல்வதென்றால் மினி உலகக்கோப்பை....ஸாரி மினி உலகப்போர் -3 என்று சொல்லலாம்!

(ஒட்டு மொத்த நிருபர்களும் பரபரப்பாகிறார்கள்.ஃபாக்ஸ் நியூஸ் நிருபரின் பேனாவில் மை இல்லாததால் பேனாவை டென்சனுடன் உதறுகிறார்.டோனி ப்ளேர் ஓடிவந்து தன்னுடைய பேனாவைக் கொடுக்கிறார்.)

பி.பி.சி: மிஸ்டர் ப்ரெசிடெண்ட்! ஈரான் மீது அணுகுண்டு வீசுவீர்களா?

புஷ்: (புன்முறுவலுடன்) அவசரப்பட்டு அணுகுண்டு வீசிவிட மாட்டோம். ஐக்கிய நாடுகள் சபையில் இதற்கான சிறப்புத் தீர்மானம் போட்டு பான் கீ மூன் அவர்களின் அனுமதியுடன் குண்டு வீசவே அமெரிக்கா விரும்புகிறது.

சி.என்.என்: பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் ஈராக் மீது படையெடுத்தீர்கள். கடைசியில் அப்படியொன்றும் இல்லை என்பதால் உலக மக்களின் வெறுப்பை சம்பாதித்தீர்கள். அதேபோன்ற தவறை ஈரான் விசயத்திலும் அமெரிக்கா செய்யுமா?

புஷ்: ஈராக் விசயத்தில் FBI தந்த ரிப்போர்ட்டில் டைப்பிங் மிஸ்டேக் இருந்ததை நேற்றுதான் கோண்டி சுட்டிக் காட்டினார்.IRAN என்பதற்குப் பதிலாக IRAQ என்று டைப் செய்யப்பட்டிருந்தது. நானும் அப்படியே நம்பி படித்துத் தொலைத்து விட்டேன்.இத்தகைய டைப்பிங் மிஸ்டேக் ஈரான் விசயத்தில் நடக்காமல் கவனமாக இருப்போம்.

பாக்ஸ்: மிஸ்டர் பிரசிடெண்ட்! ஈராக் போரில் ஏழு இலட்சம் ஈராக்கியர்களைக் கொன்று சாதனை படைத்திருக்கிறீர்கள்.இந்த சாதனையை ஈரானுடனான போர் முறியடிக்குமா?

புஷ்: ஈரானுடனான போரில் பல யுக்திகளைக் கையாள்வோம்! 2007க்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர குறைந்தது ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கொன்றாவது ஈரானில் அமைதியை ஏற்படுத்துவோம். முக்கியமாக, அஹமது நிஜாஸின் பல் டாக்டரின் பல்லை உடைப்போம்!

தினமலர்: பல் டாக்டரின் பல்லை உடைப்பீர்களா!!! சற்று விபரமாகச் சொல்ல முடியுமா? அந்த பல் டாக்டர், அல் காயிதாவுக்கு பல் சப்ளை செய்பவரா?

புஷ்: ஆப்கானில் சில இலட்சம் முஸ்லிம்களைக் கொன்றோம்! யாரும் கேட்கவில்லை! ஈராக்கில் ஏழு இலட்சம் முஸ்லிம்களைக் கொன்றோம்!!அதையும் யாரும் கேட்கவில்லை!ஈரானில் ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கொன்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!!!அஹமது நிஜாஸின் பல் டாக்டரின் பல்லை உடைப்பேன் என்றதை மட்டுமே எல்லோரும் கவனிப்பார்கள்!!!

மேலும்,துரதிஷ்டவசமாக அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எனக்கு எதிராக போர்க் குற்றங்களை விசாரித்தால் சாதாரண பல் டாக்டரின் பல்லை உடைப்பேன் என்றதற்காக மட்டுமே விசாரிக்கப் படுவேன்! தீவிரவாதத்திற்கு எதிரான போர்களில் எதிரியின் பல்லை உடைக்கும் உரிமை (Special Right for Tooth-Breaking 2007) என்ற சிறப்புச் சட்டத்தை அதிபருக்குள்ள வீட்டோ பவர்கொண்டு எப்படியும் நிறைவேற்றுவேன்.

பேட்டியை நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டே சி.என்.என்னில் லார்ரி கிங் President's special rights for Tooth-Breaking 2007 பற்றிய காரசாரமான விவாதம் நடக்கிறது! செய்திகளை முந்தித்தரும் தினமலரில் "ஈரான் பல் டாக்டரின் பல் தப்புமா?" என்ற தலைப்புச்
செய்தியுடன் பரபரப்பாக விற்பனையாகிறது!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP