செக்ஸ் கல்வியாம் - அடி செருப்பால!

Saturday, October 27, 2007

நோட்டு,புத்தகம், பேனா,பென்சில்ஜியோமெட்ரிக் பாக்ஸ் இவற்றோடு இனி நம் வருங்கால வல்லரசு இந்தியாவின் பள்ளி மாணவ-மாணவிகள் மேலும் சில 'உபகரகணங்களை'யும் ?!எடுத்துச் செல்ல வேண்டி வரலாம்.

இந்தியா ஏற்கனவே எயிட்சில் வல்லரசாகி விட்டதால், செக்ஸ் கல்வியைப் பள்ளிப்பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும் என்று மத்திய அரசும் மனித வள மேம்பாட்டுத் (???) துறையும் செக்ஸ் கல்வியை பள்ளிப்பருவத்திலேயே நடைமுறைப்படுத்தப் போகிறார்களாம்!

எயிட்ஸ் விழிப்புணர்வுக்காகவே செக்ஸ் கல்வி என்றால் அதை ஏன் தனிப் பாடமாகச் பயிறுவிக்க வேண்டும்? திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள கற்பொழுக்கமே போதும் வாத்தியாரே!

புகைப்பழக்கம் உடலுக்குக் கேடு! மது நாட்டிற்கு, வீட்டிற்கு உடலுக்குக் கேடு என்றெல்லாம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்து வந்தபோதிலும் சிகரெட் புகைப்பவர்களும் குடிகாரர்களும் குறையவில்லை. விழிப்புணர்வு என்ற பெயரில் ஆண்-பெண் அந்தரங்க உறவுகளை பள்ளியில் போதிப்பது எந்தவகையான விழிப்புணர்வை ஏற்படுத்துமோ தெரியாது!

சபலபுத்தி வாத்தியார்களிடமிருந்து மாணவிகளைக் காப்பதற்கே இன்னும் முறையான பாதுகாப்புகள் இல்லை; இந்த லட்சனத்தில் பள்ளிகளில் அதுவும் +1, +2 மாணவ-மணவிகளுக்கு செக்ஸ் கல்வியாம்! உருப்பட்ட மாதிரிதான்!

'கண்டங்கள்' பெயரை உச்சரித்த மாணவர்களை இனி 'காண்டங்கள்' பெயரை உச்சரிக்க வைத்து விடாதீர்கள்!
********
இனி தினமலரில் கீழ்கண்டவாறு தலைப்புச் செய்திகள் வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை:
1) பள்ளியரையில் கசமுசா!
2) செக்ஸ் கல்வியில் இந்தமுறையும் மாணவர்கள் முதலிடம்!
3) "நமீதா மாதிரி ஆவேன்!" செக்ஸ் கல்வியில் நாஇலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவி பேட்டி.
*********
பின்குறிப்பு: செக்ஸியானப் பின்னூட்டத்திற்கு ஒரு பாக்கெட் xxXxx இலவசம்!

Read more...

நாடு NRI க்களுக்கு என்ன செய்தது?

Wednesday, October 24, 2007

நம்நாட்டு அன்னியச் செலாவணி இருப்பை கணிசமான அளவில் உயர்த்தியதில் NRI க்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. எந்த ஒரு நாட்டிற்கும் சர்வதேச வர்த்தகத்தில் அன்னியச் செலாவணிக் கையிருப்பு முக்கியப் பங்காற்றுகிறது. போக்ரான் அணுகுண்டு சோதனையால் கடுப்படைந்த அமெரிக்கா நம்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்த போதும் நமது பொருளாதாரம் சீர்குழையாமல் காத்ததும் NRI க்களே!

அரசியல்வாதிகளின் நாற்காலிச் சண்டைகள், கட்சித்தாவல்,ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமையே கண்ணென பணியாற்றி குருவி சேர்ப்பது போல் சிறுகச்சிறுக பணம் சேர்த்தாலும், NRI க்களின் சேமிப்புக்களுக்கு இருந்த மவுசு வங்கிகளிடம் வெகுவாகக் குறைந்து விட்டது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் NRI க்கள் வங்கிகள் மூலம் அனுப்பும் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து எடுப்பதற்கும் வரி விதித்து மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் NRI க்களில் ஓரிருவரை ஆண்டுக்கு ஒருமுறை டெல்லியில் விழா நடத்தி ஜனாதிபதி கையால் விருது வழங்குவதோடு சரி. கோடிக்கணக்கான NRI க்களின் அவலங்களைக் கண்டு கொள்வதே இல்லை.

வெளிநாட்டு இந்திய தூதரகங்களில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி. துபாய் போன்ற பெருநகரங்களில் தூதரகச் சேவைகளுக்காக வெயிலில் காத்திருப்பவர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நம்நாட்டுப் பணமதிப்பு உயரும்போதும் நிச்சயமாக NRI க்கள் சந்தோசப்படமாட்டார்கள். பணமதிப்பு உயர்ந்தாலும் விலைவாசியும் சேர்ந்து உயர்வதால் அனுப்பும் பணத்தின் மதிப்பு NRI க்களைப் பொருத்த மட்டில் யாருக்கோ செல்கிறது. இந்தியப் பணம் ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டுமென்றால் 90 UAE திர்ஹம் கொடுத்தால் போதும்! ஆனால் தற்போது 95 திர்ஹம் வரை கொடுக்க வேண்டும்.
ஆயிரத்திற்கு ஐந்து திர்ஹம் என்றால் இருபதாயிரம் அனுப்பும் ஒருவர் மாதத்திற்கு நூறு திர்ஹம் (சுமார் ஆயிரத்து 1200 ரூபாய்) இழப்பு!

மட்டுமின்றி, UAE ஐப் பொருத்தவரை ரூம் வாடகை, பேச்சிலருக்கான கெடுபிடிகள் ஆகியக் காரணங்களால் ஏற்கனவே சாமான்ய NRI க்கள் மனஉளைச்சலில் நொந்து போயுள்ளார்கள். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25% விலை உயர்வு எதிர்பார்க்கப் படுகிறது.

வெளிநாட்டில்தான் கஷ்டப்படுகிறோம். ஓராண்டுக்கு அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் விடுமுறையில் ஊர் சென்று வரலாம் என்று கிளம்பினால் ஏர்போர்ட்டிலிருந்து சுங்கத் துறையினரின் கெடுபிடி, உபரி லக்கேஜ் கட்டணம் முதல் டாக்சி டிரைவர்கள் வரை எல்லோரையும் சமாளித்து ஊர்வந்து சேர்ந்தால் குடும்பப் பிரச்சினைகளும் இருந்தால் அவற்றையும் சமாளித்து விடுமுறை முடித்து மீண்டும் பணிக்குத் திரும்புவதை நினைக்கும் போது NRI களின் நிலை ராணுவ வீரர்களின் நிலையை விடக் கொடுமையானது!

இப்படியாக உள்நாட்டு பணமதிப்பு உயர்வு, விலைவாசி உயர்வு, ஏர்போர்ட் கெடுபிடிகள் எனப் பல்வேறு சுமைகளோடு, குடும்பச் சுமையையும் சுமந்து கொண்டிருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு இந்தியர்களை நினைவுகூற சர்வதேச NRI க்கள் தினம் ஒன்றை அறிவித்து அவர்களுடன் குடும்பத்தினர் ஒருநாள் மட்டும் இலவசமாக தொலைதொடர்பு கொள்ள இந்தியப் பேரரசு உதவலாமே!

நாட்டிற்கு NRI க்கள் செய்ததைச் சொல்லிவிட்டேன்! இப்பொழுது சொல்லுங்கள் நாடு NRI களுக்கு என்ன செய்ததென்று?

Read more...

பாபி ஜிண்டால் ஜெயித்தால் நமக்கென்ன?

Monday, October 22, 2007

அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுனராக இந்திய வம்சாவழியைச் சார்ந்த பாபி ஜிண்டால் வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் பிறந்த ஒருவரை அமெரிக்கர்கள் மாகாண ஆளுநராகத் தேர்ந்தெடுத்துள்ளதை பலரும் பெருமிதப்பட்டு எழுதியுள்ளார்கள். தேசத்துரோகிகள்!!!

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என இந்தியாவிலிருந்து அமெரிக்க டாலருக்குச் சேவை செய்யச் சென்ற இந்தியர்களைப் பற்றியும் பெரிதாக விளம்பரம் செய்து தேசபக்தியை அவமதிக்கிறார்கள்!கல்பனா சாவ்லா அமெரிக்க விண்கலத்தில் வெடித்துச் சிதறிய விபத்தில் இறந்தார். சகமனுஷி என்பதற்காக இரங்கல் தெரிவிக்கலாம். அவர் பெயரால் விருது வழங்கும் அளவுக்கு அமெரிக்க மோகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விட்டு வைக்கவில்லை!

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லோகநாதனின் இறுதிச்சடங்கில் அவரின் குடும்பத்தினர் கலந்து கொள்ளச் செல்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி சிறப்பு கவனம் எடுத்ததை சிலமாதங்களுக்குமுன் செய்திகளில் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.

சமீபத்தில் சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வந்தபோது எல்லா பத்திரிக்கைகளும் ஏதோ விண்ணுல தேவதையே வந்திறங்கியதைபோல செய்தி வெளியிட்டனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஒருபடி மேலே போய் சுனிதா வில்லியம்ஸ் இந்தியப் பெண்களின் முன்மாதிரி என்றார்.

சுனிதா வில்லியம்ஸ் அல்லது கல்பனா சாவ்லா போன்றவர்களால் இந்தியாவுக்கோ அல்லது இந்தியர்களுக்கோ எந்த நன்மையும் கிடையாது! சொல்லப்போனால் தீங்குதான்! இவர்களைப் போல் அமெரிக்கச் சேவகம் செய்தால்,பிரபலம் அடையலாம் என்ற எண்ணம்தான் வளரும்.

2020 இல் அமெரிக்காவுக்கு ஆப்படிக்க இருக்கும் இந்தியாவின் வல்லரசுக் கனவை இத்தகைய அமெரிக்க மோகம் தடுக்கும் என்பதை இந்தியாவை நேசிப்பவர்கள் உணர வேண்டும்.

என்னைப் பொருத்தவரை இந்தியாவில் படித்து, குறைந்த சம்பளமாக இருந்தாலும் இந்தியாவுக்காகவே உழைக்கும் உள்நாட்டு ஊழியர்கள்தான் பெருமிதப்படத்தகுதியானவர்கள். இதை அமெரிக்காவில் இந்தியன் ஒருவன் கக்கூஸ் கழுவினாலும் பெருமையாகத் தம்பமடிக்கும் தினமலர் போன்ற அமெரிக்க அடிவருடி பத்திரிக்கைகள் உணர வேண்டும்.

என்னதான் அமெரிக்காவுக்கு லாவனி பாடினாலும், தினமலரை டாய்லெட் டிஸ்யூவாகக் கூட வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதை தினமலர் உணர்ந்து அடக்கிவாசிக்க வேண்டும்.

Read more...

ஜெயலலிதா செல்வியா அம்மாவா?

Wednesday, October 17, 2007

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டுத்தொடரின் ஓரிரு நாட்களுக்கு முன்,ஜெயலலிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி ஒருவர் நுழைந்ததைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் செல்வி.ஜெயலலிதா அம்மையார் (அதுஎப்படி ஒருவரே செல்வியாகவும் அம்மையாராகவும் இருக்க முடியும்?) சந்திரபாபு நாயுடுவுக்கு சுமார் 65 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு வழங்கப் படுவதுபோல் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகப் போகிறாராம்!

ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டில் அத்துமீறி ஒருவன் நுழையும் அளவுக்கு பாதுகாப்பில் மெத்தனமாக இருக்கக்கூடாது.ஒரு கன்னிப்பெண் (செல்வி) தனியாக இருக்கும்போது படுக்கையறை வரைக்கும் வந்தது தவறு! ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் முன்னாள் முதல்வர்தான்! தனக்குப் பாதுகாப்பில்லை என்று ஒருபோதும் சொல்லியதில்லை. (இதைத்தான் சிண்டுமுடிதல் என்பார்கள்)

இன்னொருபக்கம், அத்துமீறி நுழைந்தவன் ஏன் லஷ்கர் ஐ தொய்பா அல்லது அல்காயிதா தீவிரவாதியாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தப்பித் தவறி எந்த பத்திரிக்கைக்கும் வரவில்லை? சுடச்சுட செய்திகளை முந்தித்தரும் தினமலர்கூட இவ்விசயத்தில் கோட்டை விட்டது நியாயமா? என்ற கேள்விகள் எழுகின்றது :-)

டெய்ல்பீஸ்: ஜெயலலிதாவின் மகள் ஊட்டி கான்வெண்டில் படித்துக் கொண்டிந்ததாக பழைய புலணாய்வுப் பத்திரிக்கைகளில் முன்பு வாசித்த நினைவு.இன்னும் அதே கான்வெண்டில்தான் படிக்கிறாரா? என்று யாராச்சும் புலணாய்வு செய்து எழுதினால் நன்றாயிருக்கும்.

Read more...

710 ஐப் பற்றித் தெரியுமா?

Monday, October 15, 2007

காரோட்டும் பெண்களெல்லாம் முட்டாள்(ச்சி?)களாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. நேற்று ஒரு FORD காரின் உதிரிப்பாகங்கள் விற்கும் கடையில் நின்று கொண்டிருந்தபோது, அவசரமாக வந்த ஒரு பெண்மணி, 710 வேண்டும் என்றார்.

கடைக்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை? "710 என்றால் என்ன?" என்றார்.

பெண்மணி: "எஞ்சினின் நடுவில் இருக்கும். என்னுடைய காரின் "710 " தொலைந்து விட்டது; அதனால் புதிதாக ஒன்று வேண்டும்" என்றார்.

கடைக்காரர் மீண்டும் குழப்பத்துடன் ஒரு பேப்பரையும் பேனாவையும் அப்பெண்மணியிடம் நீட்டி "நீங்கள் கேட்கும் 710 எப்படி இருக்கும்?" என்று வரைந்து காட்டச் சொன்னார். அப்பெண்மணியும் ஒரு வட்டம் போட்டு, நடுவில் 710 என்று வரைந்து காட்டினார்.

ம்ஹூம்! கடைக்காரர் தலையைச் சொரிந்தவாறே, அம்மனி, நீங்கள் வரைந்துள்ள பாகம் என்னவென்று விளங்கவில்லை. என்னுடன் வாருங்கள். நான் காட்டும் காரில் அதைக் காட்டுங்கள் என்று ஒர்க்-ஷாப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு நின்ற இன்னொரு காரின் பானெட்டைத் திறந்து, 710 ஐக் காட்டச் சொன்னார்.

அட! அந்தக் காரிலும் 710 இருந்தது. முகம் மலர்ந்த அப்பெண்மணி 710 ஐத் தொட்டுக் காட்டினார். அப்பாடா! ஒருவழியாகக் கடைக்காரர் பெருமூச்சு விட்டார்!

கார் வைத்திருப்பவர்கள் கட்டாயம் 710 ஐ அறிந்து கொள்ள வேண்டும். 710 ஐப் பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடலாம். யாரும் சரியான பின்னூட்டம் போடாத பட்சத்தில் பெண்மணி வரைந்து காட்டிய அசல் 710 இன் படத்திற்கான சுட்டி கொடுக்கப்படும்.

முதல் பத்து பின்னூட்டத்திற்குள் (சரியான விடையெழுதுவருக்கு ஒரு ஒரிஜினல் 710 அவரின் (சொந்தச் செலவில்) கொரியரில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

ஹும்!எப்படியெல்லாம் பின்னூட்டம் எழுதத் தூண்ட வேண்டியுள்ளது! நேரம்டா!

Read more...

கட்டையில போறவன்!

Monday, October 08, 2007

படத்திலுள்ள மனிதன் உண்மையிலேயே கட்டையில்தன் போகிறார்.ஆம்! படத்திலுள்ள கார் மரத்தினால் வடிவமைக்கப் பட்டதாம். ஓட்டுனர் ஒரு தச்சர் என்பதாக மடலனுப்பியவ்ர் சொல்கிறார்.






இனி யாராவது "கட்டையில போக" என்று திட்டினால் கோபப்படக்கூடாது!

Read more...

டென்மார்க் ஒரு இந்திய மாநிலம் ? - வேதாந்தியின் புதிய பத்வா

Friday, October 05, 2007

"நான் பாத்வா விதித்ததற்கு என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நான் பாத்வா விதித்தது போல் முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் முஸ்லீம் மதத்தை பற்றி தவறாக சித்தரித்த தனிஷ் (டென்மார்க்) கார்டூனிஸ்ட் மீது பாத்வா விதித்திருந்தார்.ஆனால் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - ராம் விலாஸ் வேதாந்தி. (முழு உளரல்)

தமிழக முதல்வர் கருணாநிதியின் நாக்கையும் தலையையும் வெட்டி கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் பரிசு என்று கொலைவெறி கருத்தைச் சுதந்திரமாகச் சொன்ன ராம் விலாஸ் வேதாந்திதான் இவ்வாறு புலம்பியுள்ளார்.

வரவர சங் பரிவாரங்களின் உளரல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது! நேற்றுதான் ராஜ் நாத்(த) சிங் உளரியதைப் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்குள் நம் நநக்கு,தலெ ஸ்பெஷலிஸ்ட் ராம்விலாஸ் வேதாந்தி இவ்வாறு சொல்லியுள்ளார்.

இந்தியச் சட்டத்திற்கு எதிராகப் பேசினால், குற்றவியல் தண்டனை சட்டப்படி இந்தியாவில் எவரும் வழக்குப் போடலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கவும் செய்யலாம். அதேபோல் டென்மார்க் கார்ட்டூனிஸ்டுக்கு எதிராக பத்வா கொடுத்த முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் மீது டென்மார்க்கில் வேண்டுமானால் நடவடிக்கை எடுக்கலாம்.

டென்மார்க் சார்பாக (அல்லது டென்மார்க் அரசு/ இண்டர்போல் கேட்டுக் கொள்ளத வரையில்) இந்தியாவில் அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாது என்பது வேதாந்திகளுக்குத் தெரியாதா? அல்லது "அகன்ற பாரதம்" திட்டத்தை டென்மார்க் வரைக்கும் நீட்டியுள்ளார்களா?

ஒன்னுமே புரியவில்லைடா சாமியோவ்!

Read more...

வாஜ்'பாய்' பெயரையும் மாற்ற வேண்டும்

Thursday, October 04, 2007

அடல் பிகாரி வாஜ்பாய் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள அன்பினால்தான் வாஜ்'பாய்' என்று பெயர் வைத்துள்ளார் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ, அதேபோல்தான் உள்ளது பா.ஜ.கவின் ராஜ்நாத்(த) சிங், சோனியா காந்தி தனது பெயருடன் 'காந்தி' என்று சேர்க்கக்கூடாது என்பதும்!

மகாத்மா காந்தி ராமரையும் ராமர் பாலத்தையும்? நேசித்தாராம்; அதுபோல் சோனியா காந்தியும் நேசிக்க வேண்டுமாம்! அப்போதுதான் காந்தியை மதிப்பதாக ஆகுமாம்! இல்லாவிட்டால் சோனியாவுடன் 'காந்தி' என்று சேர்க்கக் கூடாதாம்!

சோனியாவின் கணவர் பெயர் ராஜீவ் காந்தி என்பதால்தான் தன் குடும்பப் பெயரையும் சேர்த்து சோனியா காந்தி என்று வைத்துள்ளார். சோனியாவின் கணவர் பெயர் கந்தசாமி என்று இருந்திருந்தால் சோனியா கந்தசாமி என்றே வைத்திருப்பார் என்பதை ராஜ் நாத் சிங்கிற்கு யாராச்சும் எடுத்து சொன்னால் நல்லது

Read more...

மாண்புமிகு நீதிபதிகளுக்குச் சில கேள்விகள்

Tuesday, October 02, 2007

சேது சமுத்திரத் திட்டத்தை துரிதப்படுத்த் வலியுறுத்தி தி.மு.க கூட்டனிக் கட்சிகள் நடத்திய (அக்-1,2007) உண்ணாவிரதப் போராட்டத்தை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி கலைஞர் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக்கூடாது என்றும் தங்கள் வானளாவிய அதிகாரத்தைக் காட்டியுள்ளனர்.இதனால் பாதியிலேயே உண்ணவிரதம் முடிக்கப்பட்டதாகச் செய்திகளில் அறிந்தோம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், "தனி அரசியல் கட்சிகளின் நியாயத்தை விட நாட்டு மக்களின் நலனே முக்கியம்" என்று சொல்லி கடையடைப்புப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தியது! இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில், எதிர்ப்பைத் தெரிவிக்க காந்திய வழியிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அங்கீகரித்துள்ளது.

இத்தகைய போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு மக்களின் எதிர்ப்பை உணர்த்தும் என்பதை ஆங்கிலேய அரசுக்கு எதிரான காந்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் அறிந்தோம்."தனி அரசியல் கட்சிகளின் நியாயத்தைவிட நாட்டு மக்களின் நலனையே மதிப்பதாகச் சொல்லும்" மாண்புமிகு நீதிபதிகளுக்குச் சில கேள்விகள்:

1) பாபர் மஸ்ஜித் வழக்கையும் அதனைத் தொடர்ந்த இடிப்பு வழக்கையும் பல வருடங்களாக இழுத்தடிப்பதும்,

2) கிருஷ்ணா கமிசன் அறிக்கையை முடக்கி வைத்து மென்மேலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதும்,

3) ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த குஜராத் நரேந்திர மோடிய டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்காமலும், அடுத்தடுத்த முறையும் தேர்தலில் மதவெறியைத் தூண்டி மென்மேலும் வெறியூட்டி ஆட்சி செய்ய அனுமதிப்பதும்,

4) பால்தாக்கரே, ப்ரவீன் தொக்காடியா, ராமகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது விஷம் கக்கி பேச அனுமதிப்பதும்,

5) ஜெயலலிதாவின் மீதான பல்வேறு வழக்குகளையும் சாவகாசமாக விடுதலையாகும் வகையில் இழுத்தடிக்க அனுமதிப்பதும்,

6) சங்காராச்சாரியார் மீதான கொலை வழக்கை விசாரிக்க மறுப்பதும், கிட்டத்தட்ட விடுதலையாக வழிசெய்வதும்,

7) காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு என பல பிரச்சினைகளில் மாநில அரசுகள் தமிழகத்தைத் தொடந்து வஞ்சிக்க அனுமதிப்பதும்,

8) உருப்படாத விசயங்களுக்காகப் பலமுறை பா.ஜ.கவினரால் பாராளு மன்றம் முடக்கப்பட்டதும் etc..etc..ஆகியவையெல்லாம் பொதுமக்களின் நலனுக்கு எதிரானதாகத் தெரியவில்லையா?

அவற்றையெல்லாம் கண்டிக்கவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத அரசுகளை கலைக்கவோ பரிந்துரைக்காத உச்சநீதிமன்றம், இந்திய நலனிற்காக தமிழகத்தின் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி உண்ணாவிரதம் இருப்பதைத் தடுப்பதோடு ஆட்சி கலைக்கப்படும் என்றும் மிரட்டுவது நியாயமா?

சேது சமுத்திர திட்டத்திற்கு இடையூறாக அறிக்கை விட்டும், ஊர்வலம் நடத்தியும் தமிழகத்தின் அமைதிக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் சங் பரிவாரங்களையும் பொதுமக்களின் நலனே முக்கியம் என்று கண்டிக்க முன்வருமா?

இடஒதுக்கீட்டிற்கு இடையூறாக இருக்கும் ஓரிரு நீதிபதிகள், நூறுகோடி இந்தியப் பிரஜைகளின் நலனுக்கு எதிராக தடுப்பாணை வழங்கி வாழ்வியல் உரிமையை தடுப்பதையும் மான்புமிகு நீதிபதிகள் கண்டிக்கலாமே?தமிழன் என்றாலே எல்லோருக்கும் இளிச்சவாய்ர்கள்தான் போலும்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP