பாபி ஜிண்டால் ஜெயித்தால் நமக்கென்ன?

Monday, October 22, 2007

அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுனராக இந்திய வம்சாவழியைச் சார்ந்த பாபி ஜிண்டால் வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் பிறந்த ஒருவரை அமெரிக்கர்கள் மாகாண ஆளுநராகத் தேர்ந்தெடுத்துள்ளதை பலரும் பெருமிதப்பட்டு எழுதியுள்ளார்கள். தேசத்துரோகிகள்!!!

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என இந்தியாவிலிருந்து அமெரிக்க டாலருக்குச் சேவை செய்யச் சென்ற இந்தியர்களைப் பற்றியும் பெரிதாக விளம்பரம் செய்து தேசபக்தியை அவமதிக்கிறார்கள்!கல்பனா சாவ்லா அமெரிக்க விண்கலத்தில் வெடித்துச் சிதறிய விபத்தில் இறந்தார். சகமனுஷி என்பதற்காக இரங்கல் தெரிவிக்கலாம். அவர் பெயரால் விருது வழங்கும் அளவுக்கு அமெரிக்க மோகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விட்டு வைக்கவில்லை!

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லோகநாதனின் இறுதிச்சடங்கில் அவரின் குடும்பத்தினர் கலந்து கொள்ளச் செல்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி சிறப்பு கவனம் எடுத்ததை சிலமாதங்களுக்குமுன் செய்திகளில் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.

சமீபத்தில் சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வந்தபோது எல்லா பத்திரிக்கைகளும் ஏதோ விண்ணுல தேவதையே வந்திறங்கியதைபோல செய்தி வெளியிட்டனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஒருபடி மேலே போய் சுனிதா வில்லியம்ஸ் இந்தியப் பெண்களின் முன்மாதிரி என்றார்.

சுனிதா வில்லியம்ஸ் அல்லது கல்பனா சாவ்லா போன்றவர்களால் இந்தியாவுக்கோ அல்லது இந்தியர்களுக்கோ எந்த நன்மையும் கிடையாது! சொல்லப்போனால் தீங்குதான்! இவர்களைப் போல் அமெரிக்கச் சேவகம் செய்தால்,பிரபலம் அடையலாம் என்ற எண்ணம்தான் வளரும்.

2020 இல் அமெரிக்காவுக்கு ஆப்படிக்க இருக்கும் இந்தியாவின் வல்லரசுக் கனவை இத்தகைய அமெரிக்க மோகம் தடுக்கும் என்பதை இந்தியாவை நேசிப்பவர்கள் உணர வேண்டும்.

என்னைப் பொருத்தவரை இந்தியாவில் படித்து, குறைந்த சம்பளமாக இருந்தாலும் இந்தியாவுக்காகவே உழைக்கும் உள்நாட்டு ஊழியர்கள்தான் பெருமிதப்படத்தகுதியானவர்கள். இதை அமெரிக்காவில் இந்தியன் ஒருவன் கக்கூஸ் கழுவினாலும் பெருமையாகத் தம்பமடிக்கும் தினமலர் போன்ற அமெரிக்க அடிவருடி பத்திரிக்கைகள் உணர வேண்டும்.

என்னதான் அமெரிக்காவுக்கு லாவனி பாடினாலும், தினமலரை டாய்லெட் டிஸ்யூவாகக் கூட வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதை தினமலர் உணர்ந்து அடக்கிவாசிக்க வேண்டும்.

14 comments:

Anonymous 10/22/2007 6:19 AM  

//அமெரிக்காவில் இந்தியன் ஒருவன் கக்கூஸ் கழுவினாலும் பெருமையாகத் தம்பமடிக்கும் தினமலர் போன்ற அமெரிக்க அடிவருடி பத்திரிக்கைகள் உணர வேண்டும்.

என்னதான் அமெரிக்காவுக்கு லாவனி பாடினாலும், தினமலரை டாய்லெட் டிஸ்யூவாகக் கூட வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதை தினமலர் உணர்ந்து அடக்கிவாசிக்க வேண்டும்.//
Please change these lines and put the same message in a good way.

Anonymous 10/22/2007 2:01 PM  

Asathal post...

Excellent

Anonymous 10/22/2007 3:19 PM  

//"பாபி ஜிண்டால் ஜெயித்தால் நமக்கென்ன?"//

ஒரு இந்திய வம்சாவளியினரை கவ்னரா நியமிச்சு அமெரிக்கா வழி காட்டியிருக்கிறது. இதையே ஃபாலோ பண்ணி இந்தியாவுல ஒரு இத்தாலியரை பிரதமராக்கிக் காட்டுவோம்!

என்ன நாஞ்சொல்றது?

Anonymous 10/23/2007 2:09 AM  

//ஒரு இந்திய வம்சாவளியினரை கவ்னரா நியமிச்சு அமெரிக்கா வழி காட்டியிருக்கிறது. இதையே ஃபாலோ பண்ணி இந்தியாவுல ஒரு இத்தாலியரை பிரதமராக்கிக் காட்டுவோம்!//

ஆகாது ஆகாது , பின்லேடந்தான் பிரதமராகணும் , இந்த உலகமே இஸ்லாமியமயமாகனும் . அதுதான் எங்க ஆசை

enRenRum-anbudan.BALA 10/23/2007 4:53 AM  

தேவையான பதிவு!

ஜிண்டால், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்களால் நமக்குப் பெரிய பயனோ பெருமையோ இல்லை என்பதும், இவர்களை வைத்து ஊடகங்களும்,
அரசியல்வாதிகளும் செய்யும் கலாட்டா டூ மச் என்பதும், நிச்சயமாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே!

எ.அ.பாலா

Anonymous 10/23/2007 8:38 AM  

"ஒரு இந்திய வம்சாவளியினரை கவ்னரா நியமிச்சு அமெரிக்கா வழி காட்டியிருக்கிறது. இதையே ஃபாலோ பண்ணி இந்தியாவுல ஒரு இத்தாலியரை பிரதமராக்கிக் காட்டுவோம்!

என்ன நாஞ்சொல்றது?"



உனக்கு ஆறு அறிவு இருக்கா?

அமெரிக்க சட்டம் என்ன சொல்லுது தெரியுமா?
அமெரிக்க பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறந்த ஒருவர்தான் ஜனாதிபதி ஆக வரலாம்.

சோனியா விரும்பினால் ஆளூனராக காலம் தள்ளட்டும்.
பிரதமர் பதவியா? இத்தாலியில்கூட இந்தியன் பிரதமராக முடியாது!!!!

புள்ளிராஜா

Anonymous 10/24/2007 2:16 AM  

//உனக்கு ஆறு அறிவு இருக்கா?

அமெரிக்க சட்டம் என்ன சொல்லுது தெரியுமா?
அமெரிக்க பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறந்த ஒருவர்தான் ஜனாதிபதி ஆக வரலாம்.

சோனியா விரும்பினால் ஆளூனராக காலம் தள்ளட்டும்.
பிரதமர் பதவியா? இத்தாலியில்கூட இந்தியன் பிரதமராக முடியாது!!!!//

அப்டின்னாக்கா பாகிஸ்தான்ல பொறந்த அட்வானி இந்தியாவுல எப்படி து.பிரதமரா ஆனாரு? சோனியாவுக்கு ஒரு நியாயம், அட்வானிக்கு வேற நியாயமா? வேணும்னா அட்வானியை பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்ச்சுட்டு இந்தியாவுல பொறந்த முஷாரப்பை இந்தியாவுக்கு பிரதமரா ஆக்கிடலாம். இப்ப ஓக்கேவா?

Unknown 10/24/2007 9:03 PM  

//ஜிண்டால், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்களால் நமக்குப் பெரிய பயனோ பெருமையோ இல்லை என்பதும், இவர்களை வைத்து ஊடகங்களும்,
அரசியல்வாதிகளும் செய்யும் கலாட்டா டூ மச் என்பதும், நிச்சயமாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே!//

ரிப்பீட்டேய்...

Anonymous 11/01/2007 11:54 AM  

"அப்டின்னாக்கா பாகிஸ்தான்ல பொறந்த அட்வானி இந்தியாவுல எப்படி து.பிரதமரா ஆனாரு? "

கடவுளே .... இப்படீலாமா அபத்தக்களஞ்சியமா யோசிக்கிறது ? அத்வானி பொறந்தப்ப பாகிஸ்தான்-னே ஒரு தேசம் கிடையாது-ங்கிற சாதாரண பொது அறிவு கூடவா இல்லை ?

அட பொது அறிவுதான் இல்லை ? Common sense-னு ஒண்ணு இருக்கே ? அத பயன்படுத்தி சிந்திச்சிருந்தா "அத்வானிக்கு வயசு 75-க்கும் மேல, ஆனா பாகிஸ்தானோட வயசு ஜஸ்ட் 60 தான்"-ன்னாவது புரிஞ்சிருக்குமே ?

"ஒரு இந்திய வம்சாவளியினரை கவ்னரா நியமிச்சு அமெரிக்கா வழி காட்டியிருக்கிறது. இதையே ஃபாலோ பண்ணி இந்தியாவுல ஒரு இத்தாலியரை பிரதமராக்கிக் காட்டுவோம்!

என்ன நாஞ்சொல்றது?"

பாபி ஜிண்டல் அமெரிக்காவுல பொறந்த அமெரிக்க குடிமகன்.

ஆனா சோனியா இத்தாலில பொறந்து ஒரு திருமணத்தால இந்தியா வந்து ரொம்பநாளா இந்திய குடிமகளா ஆகாம ஆதாயம் இருக்கும்-னு தெரியும்போது ஆனவரு. ஆனாலும் அவருதான் ஒங்களுக்கு பிரதமாரா வரணும் இல்ல ?

வாழ்த்துக்கள் அன்பர்களே !

அன்புடன்
பொன்.முத்துக்குமார்

Anonymous 11/03/2007 9:55 AM  

//கடவுளே .... இப்படீலாமா அபத்தக்களஞ்சியமா யோசிக்கிறது ? அத்வானி பொறந்தப்ப பாகிஸ்தான்-னே ஒரு தேசம் கிடையாது-ங்கிற சாதாரண பொது அறிவு கூடவா இல்லை ?

அட பொது அறிவுதான் இல்லை ? Common sense-னு ஒண்ணு இருக்கே ? அத பயன்படுத்தி சிந்திச்சிருந்தா "அத்வானிக்கு வயசு 75-க்கும் மேல, ஆனா பாகிஸ்தானோட வயசு ஜஸ்ட் 60 தான்"-ன்னாவது புரிஞ்சிருக்குமே //

அய்யா காமன்சென்ஸ் தெலகமே! ராமன் என்ற ஒரு கதாபாத்திரம் உலவியதாக சொல்லப்படும் காலக்கட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் லெமூரியா என்ற ஒரெ நிலப்பரப்பைச் சேர்ந்ததாக இருந்தது என்ற பொது அறிவு கூட இல்லாமல் மணல் திட்டுகளை ராமன் கட்டிய பாலம் என்று சொல்லி கூத்தடிக்கிறாங்க பாருங்க.. அவங்கட்ட போய் சொல்லுங்க இந்த பொது அறிவு, காமன் சென்ஸ், லாஜிக் எல்லாம்.

என்ன நாஞ்சொல்றது?

Anonymous 11/03/2007 10:32 AM  

//கடவுளே .... இப்படீலாமா அபத்தக்களஞ்சியமா யோசிக்கிறது? அத்வானி பொறந்தப்ப பாகிஸ்தான்-னே ஒரு தேசம் கிடையாது-ங்கிற சாதாரண பொது அறிவு கூடவா இல்லை?//

அய்யா பொது அறிவுக்களஞ்சியம்(:-)),

அத்வானி பொறந்தப்ப பாகிஸ்தான்ற தேசம் இல்லைங்கிறது சரி தான். ஆனால் அத்வானி பொறந்தது தற்பொழுது ஒரு தனி தேசமாக இருக்கும் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா?

//அட பொது அறிவுதான் இல்லை? Common sense-னு ஒண்ணு இருக்கே? அத பயன்படுத்தி சிந்திச்சிருந்தா "அத்வானிக்கு வயசு 75-க்கும் மேல, ஆனா பாகிஸ்தானோட வயசு ஜஸ்ட் 60 தான்"-ன்னாவது புரிஞ்சிருக்குமே?//

நல்லது. பொது அறிவுக் களஞ்சியத்தை விட்டு காமன் சென்ஸுக்கு வந்தாலும் மேலேயுள்ள அதே கேள்வி இதுக்கும் பொருந்தும் தானே?.

நிறைய காமன் சென்ஸ் உள்ள சகோ. முத்துக்குமாரிடம் அதே காமன் சென்ஸ் உபயோகித்துப் பதில் கூற சிலக் கேள்விகள்:

பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் எனக் கூறி பாபரி பள்ளிவாசலைத் தரைமட்டமாக்கினார்களே!,

1. ராமன் தசரதனுக்குத் தலைப்பிள்ளை. தலைப்பிள்ளை தாய் வீட்டில் பிறப்பது தான் இந்துப் பாரம்பரியம். ராமனின் தாயான கோசலையின் தாய்வீடு, கோசலையில் தான் உள்ளது என்பதும், அது அயோத்தியில் பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் இருப்பதற்கான எவ்வித சாத்தியமும் இல்லை என்பதும் சாதாரண காமன் சென்ஸ் உள்ளவர்களுக்கும் புரியுமே? உங்களுக்கு எப்படி?

2. அதை விடுங்கள். சாதாரணமாக, ஒரு மகவு பிறப்பது ஒரு தாயின் வயிற்றிலிருந்து தான் என்பது காமன்சென்ஸ் கூட இல்லாதவர்களுக்கும் தெரிந்த விஷயம். ராமன் வானத்திலிருந்தோ, பூமியிலிருந்தோப் பிளந்து வரவில்லை என்றும் ஒரு பெண்ணிடமிருந்துப் பிறந்ததாகவுமே இதிகாசகங்கள் கூறுகின்றன. அவ்வாறு இருக்கும் பொழுது ராமன் பிறந்த இடம் பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் தான் எனக் கூறுவது கிறுக்குத்தனமாகப்படவில்லையா?

3. கடவுளின் அவதாரமான ராமனின் மனைவியை அவருக்கேத் தெரியாமல் மற்றொருவன் தூக்கிக் கொண்டுப் போய் விட்டான் எனக் கூறுவது சுத்தமடத்தனம் என்பதைக் கொஞ்சூண்டு காமன்சென்ஸ் இருந்தாலேப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் எப்படி?

4. நேரடியாக நின்று தாக்கினால் தோற்று விடுவோம் என்பதை அறிந்து மறைந்து நின்று வஞ்சகமாக வாலியைக் கொன்று அவன் நாட்டை அபகரித்து, அவனின் மனைவியையும் சேர்த்து அவன் தம்பிக்குக் கொடுத்து விட்டு அதற்குப் பகரமாக அவன் தந்த வானப்படையுடன் கடவுள் தன் மனைவியை மீட்கச் சென்றார் எனக் கூறுவதை காமன்சென்ஸ் சிறிதுகூட இல்லாதவன் மிகப்பெரிய அநியாயம் மற்றும் கேனத்தனம் என்பானே? நீங்கள் எப்படி?

5. மனைவியை மீட்க கடல் கடந்து(பறந்து)ச் செல்வதற்கு முடியாமல், கடலில் வானரப்படை உதவியுடன் பாலம் அமைத்தார் கடவுள் எனக் கூறுவதைக் கேட்டு, காமன்சென்ஸ் என்றால் என்னவென்றே அறியாத சுத்த மடையன் கூட எள்ளி நகையாடுவானே? நீங்கள் எப்படி?

கொஞ்சூண்டு காமன்சென்சுடன்
இறை நேசன்.

Anonymous 11/10/2007 11:06 PM  

"அத்வானி பொறந்தப்ப பாகிஸ்தான்ற தேசம் இல்லைங்கிறது சரி தான். ஆனால் அத்வானி பொறந்தது தற்பொழுது ஒரு தனி தேசமாக இருக்கும் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா?"

பிரம்மித்துப்போய்விட்டேன் அன்பரே. "அத்வானி பொறந்தப்ப பாகிஸ்தான்கிற தேசம் இல்லைங்கிறது சரி"-ங்கிறவரைக்கும் புரியரவருக்கு அப்போ "பாகிஸ்தான்ல பொறந்த அத்வானி"-னு சொன்னா அது அபத்தமாவோ, காமன் சென்ஸ் இல்லாமை காரணமாவோ செய்யப்படும் உளறல்-னு புரிஞ்சுகொள்ள முடியாம போனதுக்கு காரணம் என்னவோ ?

ஒங்களோட மத்த கேள்விகள் (?!) மூலமா வீசுற உங்க அறிவுச்சுடரின் தகதகப்பின் வெம்மையை என்னால் தாங்க இயலாததால் இதுவே உமக்குக் கடைசீ.

அடக்கஒண்ணா சிரிப்புகளுடன்
பொன்.முத்துக்குமார்

Anonymous 6/21/2008 7:07 AM  

wow gold!All wow gold US Server 24.99$/1000G on sell! Cheap wow gold,wow gold,wow gold,Buy Cheapest/Safe/Fast WoW US EU wow gold Power leveling wow gold from the time you World of Warcraft gold ordered!

wow power leveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power levelingcheap wow power leveling wow power leveling buy wow power leveling wow power leveling buy power leveling wow power leveling cheap power leveling wow power leveling wow power leveling wow power leveling wow powerleveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power leveling buy rolex cheap rolex wow gold wow gold wow gold wow goldfanfan980110
sdfsdfs

Anonymous 6/23/2008 2:14 AM  

fds升降机 同声翻译 同声传译 同声翻译设备 文件柜 会议设备租赁 同声传译设备租赁 表决器租赁 更衣柜 钢管 无缝钢管 服务器数据恢复 论文发表

升降平台 登车桥 升降机 升降机 铝合金升降机 液压升降机 液压机械 升降平台 升降台 高空作业平台 升降机 升降平台 弹簧 数据恢复 RAID数据恢复 无缝管 博客

WOW Gold WOWGold World Of Warcraft Gold WOW Power Leveling WOW PowerLeveling World Of Warcraft Power Leveling World Of Warcraft PowerLeveling

Breathalyzer Gas Alarm Breathalyser Co Alarm Co Detector Alcohol Tester Alcohol Tester Gas Detector
vdsf

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP