ஜெயலலிதா செல்வியா அம்மாவா?
Wednesday, October 17, 2007
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டுத்தொடரின் ஓரிரு நாட்களுக்கு முன்,ஜெயலலிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி ஒருவர் நுழைந்ததைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் செல்வி.ஜெயலலிதா அம்மையார் (அதுஎப்படி ஒருவரே செல்வியாகவும் அம்மையாராகவும் இருக்க முடியும்?) சந்திரபாபு நாயுடுவுக்கு சுமார் 65 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு வழங்கப் படுவதுபோல் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகப் போகிறாராம்!
ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டில் அத்துமீறி ஒருவன் நுழையும் அளவுக்கு பாதுகாப்பில் மெத்தனமாக இருக்கக்கூடாது.ஒரு கன்னிப்பெண் (செல்வி) தனியாக இருக்கும்போது படுக்கையறை வரைக்கும் வந்தது தவறு! ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் முன்னாள் முதல்வர்தான்! தனக்குப் பாதுகாப்பில்லை என்று ஒருபோதும் சொல்லியதில்லை. (இதைத்தான் சிண்டுமுடிதல் என்பார்கள்)
இன்னொருபக்கம், அத்துமீறி நுழைந்தவன் ஏன் லஷ்கர் ஐ தொய்பா அல்லது அல்காயிதா தீவிரவாதியாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தப்பித் தவறி எந்த பத்திரிக்கைக்கும் வரவில்லை? சுடச்சுட செய்திகளை முந்தித்தரும் தினமலர்கூட இவ்விசயத்தில் கோட்டை விட்டது நியாயமா? என்ற கேள்விகள் எழுகின்றது :-)
டெய்ல்பீஸ்: ஜெயலலிதாவின் மகள் ஊட்டி கான்வெண்டில் படித்துக் கொண்டிந்ததாக பழைய புலணாய்வுப் பத்திரிக்கைகளில் முன்பு வாசித்த நினைவு.இன்னும் அதே கான்வெண்டில்தான் படிக்கிறாரா? என்று யாராச்சும் புலணாய்வு செய்து எழுதினால் நன்றாயிருக்கும்.


19 comments:
குந்தி கர்ணனை பெற்ற பிறகும் சூரிய பகவானின் அருளால் மீண்டும் கன்னித்தன்மையைப் பெற்றாள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருவேளை இது சூரியபகவானின் கருணையாக இருக்குமோ!
///ஒரு கன்னிப்பெண் (செல்வி) தனியாக இருக்கும்போது படுக்கையறை வரைக்கும் வந்தது தவறு!////
மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆத்து பொன்னு ஐயர் ஆத்து பொன்னு
-ன்னு பாட்டு பாட போயிருப்பார்.
//குளிர்காலக் கூட்டுத்தொடரின்...//
இந்த குளிர்காலம் வந்த உடனே "அங்கெல்லாம்" சிலருக்கு புத்தி போயிட்டிருக்கு போல! ;-D இதுக்கு போயி அலட்டிக்கலாமா?
எத்தனையோ ஏழைங்க வீடு வாசல் இல்லாம கஷ்டபடறாங்க. அத விட்டுட்டு ...
இதுல வேற அவங்க மகள் பத்திய செய்தி உங்களுக்கு வேணும்களா? அது கெட்டது போ!
///ஒரு கன்னிப்பெண் (செல்வி) தனியாக இருக்கும்போது படுக்கையறை வரைக்கும் வந்தது தவறு!////
கன்னிப்பொன்னு மூஞ்சிய இன்னிக்கி பூராத்தினிக்கும் உக்காந்துனு பாக்கலாம்பா. அம்மாம் அயகு!
போங்க சார். போயி வேலை இருந்தா பாருங்க சார்.
;-D
இந்தப் பதிவை இலைக்காரன் படித்தால் கோபித்துக் கொள்வார்!
அதிரைக்காரன்
ஒரு விளம்பரத்துக்காக
இது பி.க
வேறொண்ணுமில்ல - பதிவுலயும்.
"ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் முன்னாள் முதல்வர்தான்! தனக்குப் பாதுகாப்பில்லை என்று ஒருபோதும் சொல்லியதில்லை."
அதிரைக்காரத் தம்பி,என்னையும் ஒரு முன்னாள் முதல்வரா மதிச்சு நீங்க கவலைப்பட்டிருக்கிறீர்கள். நன்றி.
அம்மாவின் கட்டளையை ஏற்று முதல்வராக இருந்த மாதங்களில் நான் செத்துசெத்து பொழைச்சேன். ஏற்கனவே செத்தவனுக்கு எதுக்கு பாதுகாப்பு?
இப்பின்னூட்டத்தை அம்மா பார்த்தால் என்ன நடக்கும்னு தெரியாது. எதுக்கும் பலமுறை யோசிச்ச பின்னாடி அனுமதிக்கவும்.
//ஒருவேளை இது சூரியபகவானின் கருணையாக இருக்குமோ!//
அத்து மீறியது சூரியபகவானின் சதி என்றல்லாவா சொல்கிறார்கள்.
சூரியபகவான்னு கலைஞரைத் தானே சொல்றீங்க?
//மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆத்து பொன்னு ஐயர் ஆத்து பொன்னு
-ன்னு பாட்டு பாட போயிருப்பார்.//
அந்தப் பாட்டை பாடி நடித்தவர்கூட அதே பகுதியில்தான் இருக்கிறாம். :-)
//எத்தனையோ ஏழைங்க வீடு வாசல் இல்லாம கஷ்டபடறாங்க. அத விட்டுட்டு ...இதுல வேற அவங்க மகள் பத்திய செய்தி உங்களுக்கு வேணும்களா? அது கெட்டது போ!//
நக்கீரன், ஜூ.வி மாதிரியான பத்திரிக்கைகள் புலணாய்வு என்ற பேர்ல எதையாச்சும் எழுதி பக்கத்தை ஓட்டுவதோடு மக்களையும் முட்டாளாக்கினார்கள்.
நக்கீரன்ல போட்டோவெல்லாம் கூட போட்டிருந்தார்கள். அதனால்தான் கேட்டேன் இன்னும் அதே காண்வெண்டுல படித்துக் கொண்டிருகிறாரா அல்லது படிச்சுக் கொடுக்கிறாரா என்று!
//கன்னிப்பொன்னு மூஞ்சிய இன்னிக்கி பூராத்தினிக்கும் உக்காந்துனு பாக்கலாம்பா. அம்மாம் அயகு!//
பாவம் அந்த பாக்கியம் சட்டசபை உறுப்பினர்களுக்குக் கிட்டவில்லை :-(
//இந்தப் பதிவை இலைக்காரன் படித்தால் கோபித்துக் கொள்வார்!//
அப்படித் தப்பா ஒன்னும் நான் எழுதிடவில்லையே? இலைக்காரன் மெளனம் கலைத்து விடுங்கள் :-)))
//ஒரு விளம்பரத்துக்காக இது பி.க
வேறொண்ணுமில்ல - பதிவுலயும்.//
பி.க எனக்குப் பிடிக்காத ஒன்று ;-)
//இப்பின்னூட்டத்தை அம்மா பார்த்தால் என்ன நடக்கும்னு தெரியாது. எதுக்கும் பலமுறை யோசிச்ச பின்னாடி அனுமதிக்கவும்.//
பயப்படாதீங்க. உங்களுக்கு ஒன்னும் நேராது. அப்படி எதாச்சும் நடந்து விட்டால் சரத்குமார் கட்சியில சேர்ந்திடுங்க. அங்கதான் உருப்படியா யாரும் இல்லை.
செல்வியாக இருப்பவர் அம்மையாராக இருக்க இயலாதா? என்ன லாஜிக் இது?
செல்வியாக இருப்பவர் அம்மாவாக இருக்க இயலுமா என்று கேட்டிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
ஜெ., வீட்டுக்கு வந்து செல்பவர்கள் யார், யார்? பார்வையாளர் குறிப்பேடு வைக்க முயன்ற போலீசார்: உதவியாளர் எகிறியதால் "தோல்வி'யுடன் திரும்பினர்
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு, "சபாரி' உடையில் கட்சி விசுவாசிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுமையான சோதனைக்கு பின், ஜெயலலிதா வீட்டிற்குள் பார்வையாளர்களை அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்குள், தாராபுரத்தைச் சேர்ந்த தண்டபாணி என்ற நபர் நுழைந்தார். ஜெயலலிதாவின் அறை வரை அந்த நபர் சென்றதாக புகார் எழுந்தது. தண்டபாணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, அ.தி.மு.க., கட்சி சார்பில் மன்னார்குடி மற்றும் தேனியைச் சேர்ந்த வாட்டசாட்டமான ஆறு பேர், ஜெயலலிதா வீட்டு பாதுகாப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கட்சி விசுவாசிகள்; "செக்யூரிட்டி' பயிற்சி பெறாதவர்கள். "சபாரி' உடையில் ஜெயலலிதா வீட்டிற்குள் முன்புறமும், பின்புறமும் சுற்றி வருகின்றனர். நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு பேர், இந்த வீட்டின் பெரிய இரும்பு கேட்டை திறந்து மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிற்குள் "சபாரி' உடையில் இருக்கும் கட்சி விசுவாசிகள் கூறினால் தான், இரண்டு பேரும் கேட்டை திறப்பர். ஜெயலலிதா வீட்டிற்குள் தாராபுரம் தண்டபாணி நுழைந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த வீட்டிற்கு வந்து செல்லும் அனைவரையும் கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், வி.ஐ.பி., பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டை நேற்று காலை பார்வையிட்டனர். "வீட்டிற்கு வருபவர்கள் கேட்டிற்கு வெளியே வைக்கப்பட உள்ள குறிப்பேட்டில் கையெழுத்திட வேண்டும்' என உத்தரவிட்டனர். இந்த குறிப்பேட்டை தயாரிக்க மயிலாப்பூர் துணை கமிஷனர் மவுரியா உத்தரவிட்டார். தேனாம்பேட்டை போலீசார் 200 பக்கம் கொண்ட பெரிய குறிப்பேட்டை தயாரித்தனர். அதில் வரிசை எண், பார்வையாளர் பெயர், விலாசம், வரும் நேரம், செல்லும் நேரம், பார்வையாளர் பற்றிய குறிப்பு ஆகிய விவரங்களை எழுத கோடுகள் போடப்பட்டன. இந்த குறிப்பேட்டை உதவி கமிஷனர் கண்ணபிரான், ஜெயலலிதா வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரிடம் அதை ஒப்படைத்தார். ஜெயலலிதாவின் உதவியாளரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. "முன்னாள் முதல்வர் வீட்டிற்கு வி.ஐ.பி.,க்கள் வந்து செல்வர். அவர்கள் வரும் காரை வழி மறித்து கையெழுத்து வாங்குவது சாத்தியமில்லை. என்ன தைரியம் இருந்தால், முன்னாள் முதல்வர் வீட்டிற்கு போலீசார் நோட்டு போடுவர்' என உதவியாளர் எகிறினார். அதற்கு உதவி கமிஷனர், "வீட்டிற்கு வந்து செல்கிறவர்களை எப்படி நாங்கள் அடையாளம் காண முடியும். மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்ததாக நீங்கள் தானே புகார் கொடுத்தீர்கள்' என்றார். பின்னர் உதவியாளர், இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார். "வீட்டிற்கு வந்து செல்கிறவர்களை முழுமையாக சோதனை செய்து வீட்டிற்குள் அனுப்ப அனுமதிக்கிறோம். நாங்கள் குறிப்பிடும் முக்கிய நபர்களை சோதனை செய்யாமல் அனுப்ப வேண்டும்' என உதவியாளர் கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறிய உதவி கமிஷனர், பார்வையாளர் குறிப்பேட்டை அங்கு வைக்க முடியாமல் திரும்பினார்.
தினமலர்
19/10/2007
//செல்வியாக இருப்பவர் அம்மாவாக இருக்க இயலுமா என்று கேட்டிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்//
தி.ராச்கோலு ஐயா,
தலைப்பில் அப்படித்தான் கேட்டிருக்கிறேன். சரி பதில் சொல்லுங்கள் :"செல்வியாக இருப்பவர் அம்மாவாக இருக்க இயலுமா?"
:-)
ஜெயாரசிகன்,
தகவலுக்கு நன்றி. தினமலர் திருந்தி விட்டதா?
ஜெயலலிதா கன்னித்தாய். அது எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது.
சொன்னா நம்பனும்!
Post a Comment