ஆணுறைகள் எரிப்பு - சங் பரிவாரங்களின் சதியா?

Saturday, November 24, 2007

நேற்று கண்ட செய்தியைப் படித்து விட்டு மனதுக்குள் நினைத்தை அடைப்புக் குறிக்குள் எழுதியுள்ளேன். பச்சையாக எழுதி இருப்பதால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தேனியில் ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் சலசலப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்த படியாக எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டம் தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், ரேஷன் கடை போன்றவற்றில் ஆணுறைகள் இலவசமாக தரப்படுகின்றன. இந்த நிலையில் தேனி கொட்டக்குடி ஆற்று தடுப்பணை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. (அதிர்ஷ்டவசமாக எரிக்கப்பட்ட உறைக்குள் எதுவும் காணப்படவில்லை!)

இதில் பல ஆணுறைகள் பாதி எரிந்தும், மீதி எரியாத நிலையிலும் இருந்துள்ளன. இவற்றின் உண்மையை உணராத சிறுவர்கள் ஆணுறையை எடுத்து பலூன்களாக ஊதி விளையாடி உள்ளனர்.(சில வருடங்களுக்கு முன்பே இவற்றை இலவசமாகக் கொடுத்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது!)

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் என்ன என்று பார்த்தபோதுதான் ஆணுறைகள் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த அதிகாரிகள் ஆணுறைகள் அங்கு எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

(ஒரிஸ்ஸாவில் பாதிரியாரையும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களையும் எரித்துக் கொன்றதை ஆதாரத்துடன் சொன்னதையே கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம், சாதாரண ஆணுறைகள் எரிக்கப் பட்டதை விசாரித்து என்ன செய்வார்கள்?)

Read more...

கொடுத்து வைத்த சிறைக்கைதிகள்

Wednesday, November 21, 2007

படத்திலிருக்கும் கட்டிடம் IT பார்க் அல்லது ஐந்து நட்சத்திர விடுதி என்று நினைத்து விடாதீர்கள். குளுகுளு மலைப்பிரதேசத்தில் இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் சிறைச்சாலை. இதில் அடைக்கப்பட்டுள்ள ??? கைதிகள் கூடைப்பந்து,டேபில் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களுடன் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் வசதியும் உள்ளது.

குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் நம்நாட்டு சிறைச்சாலைகளில் கொசுக்கடி, மூட்டைப்பூச்சி இவற்றுடன் அரசியல் நடத்த முடியாது என்பதால் 'நெஞ்சுவலி' என்று டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்கி கொஞ்ச நாட்கள் ஆஸ்பத்திரியில் ஓய்வெடுப்பார்கள். இதேபோன்ற சிறைச்சாலைகளை நம் நாட்டிலும் கட்டினால் இனிமேல் போலியாக நெஞ்சுவலி நாடகம் ஆட மாட்டார்கள்.

ஆஸ்திரியா நாட்டு சிறையைப் பார்த்ததும் தோன்றிய சில கற்பனை உரையாடல்கள்.
=======
நீதிபதி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத காரணத்தினால், கபாலியை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது.
கபாலி: என்னைக் கைவிட்டுடாதீங்க எஜமான். வேற ஏதாவது செக்சனில் தண்டனை கொடுக்க முடியாமன்னு பாருங்க சாமி.
=======
பக்கிரி: கபாலி ஸ்டார் ஹோட்டல்ல தங்கனும்னு ஆசைப்பட்டியே. போயி ரெண்டு எடத்துல பிக்பாக்கெட் அடிச்சிட்டு வா. ஒரு பதினைஞ்சு நாளைக்கு ஜாலியா உள்ளே போய்ட்டு வரலாம்.
=======
நீதிபதி: மன்னாரு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மூன்று மாதம் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேற்கொண்டு மூன்று மாதம் சிறையில் கழிக்க வேண்டும்.
மன்னாரு: அபராதம் கட்டப் பணமில்லை எஜமான். டோட்டலா ஒரு வருசம் ஜெயில்லேயே போட்டுங்க சந்தோசமா இருப்பேன்.
========






















உங்களுக்கு ஏதாச்சும் தோணுதா? இருக்கவே இருக்கு பின்னூட்டப் பெட்டி.

Read more...

பத்து நிமிடத்தில் ஜாதகம் மாறியது!

Wednesday, November 14, 2007

இப்பதிவிற்கு நீங்கள் எழுதவிருக்கும் நூற்றுக்கணக்கானப் பின்னூட்டங்கள் வெளிவராமல் இருந்தால் தயவு செய்து என்னை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது! ஏனென்றால் நாளைக்கு (16-11-2007) அன்று துபாயைச் சுனாமி தாக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்!

முன்பெல்லாம் ஜோதிடர்கள் தொழில்,திருமணம் போன்றவற்றில் வெற்றி கிடைக்குமா? என்று கணித்துச் சொல்லி அப்பாவிகளிடம் காசு பார்த்தார்கள். ஆடு மாடுகள் காணாமல் போனால் வெற்றிலையில் மைதடவிப் பார்த்துக் கண்டுபிடித்துக் கொடுக்கும் பாரம்பர்யமுறைகள் கிளி,எலி ஜோஸ்யமாக முன்னேறியது.கணினி யுகத்தில் கம்ப்யூட்டர் ஜோதிடம் சென்னை மவுண்ட் ரோட்டிலும் ஹை கோர்ட் எதிர்புறமும் சக்கை போடு போட்டது!

போட்டோஷாப் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே பிரபலங்களுக்கு ஜோதிடம் பார்ப்பதுபோல் பிளாக்& ஒயிட் போட்டோக்களை பிரேம் போட்டு மதுரையிலிருந்தும் கோவையிலிருந்தும் பலரை கோலிவுட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் இந்த ஜோதிடர்கள். தற்போதெல்லாம் இத்தகைய முச்சந்தி ஜோதிடர்களைக் காண முடியவில்லை.

மக்கள் அறியாமையில் இருந்த காலங்களில் அவர்களின் அச்சங்களையும் ஐயங்களையும் முதலீடாக வைத்து 'ஜோதிடக் கணிப்பு' என்ற பீலா விட்டு காசு பார்த்தார்கள். நாளாவட்டத்தில் அவர்களின் கணிப்புகள் வெறும் கற்பனைகள் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு சீவலப்புரி ஜோதிட சிகாமணிகள் தினத்தந்தியின் இலவச இணைப்புக்கு மட்டுமே கணித்துச் சொல்கிறார்கள்!

காலேஜில் படிக்கும்போது ஒரு ஜோதிடரிடம் நண்பர்களுடன் நானும் நாடி ஜோதிடம் பார்த்தேன். பெயர் கேட்டு விட்டு கையைப் பிடித்துக் கொண்டே என் ஜாதகத்தைப் 'புட்டு'ப் 'புட்டு' வைத்தார். (மலையாள ஜோதிடரோ?) கும்பலாக கைநீட்டியதால் ஒவ்வொருவராகக் கணித்துச் சொன்னார். சற்று நேரம் கழித்து மீண்டும் கை நீட்டினேன். பெயரைக் கேட்டார். உண்மையான பெயரைச் சொல்லாமல் 'முருகன்' என்று சொன்னேன். பத்து நிமிடத்தில் என் ஜாதகமே மாறியது!

எப்படியோ பதிவின் தலைப்பிற்கான காரணத்தைச் சொல்லியாச்சு! சுனாமி வருவதற்குள் பின்னூட்டம் போட்டு புண்ணியம் தேடிக்கொள்ளவும்.

பின்குறிப்பு: ஒரேயொரு பின்னூட்டம்கூட வரவில்லை என்றால் 'துபாயை சுனாமி தாக்கும் என்று நான் கணித்தது பலித்து விட்டது' என்று மீண்டும் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்து விடுவார். மூடநம்பிக்கையை ஒழிக்கும் முயற்சியாக போலிப்பின்னூட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! :-)

Read more...

நான் ஓர் அப்பாவி! - நரகாசுரன் சிறப்புப் பேட்டி!!

Tuesday, November 06, 2007

ஆன்லைனில் இருந்தபோது மெசஞ்சர் பெட்டி துள்ளியது. narakasuran@hellmail.com என்ற முகவரியிலிருந்து ஒருவர் சாட்டிங் பண்ண விரும்புவதாகக் காட்டியது. உடனடியாக ACCEPT பண்ணினேன்.

நரகாசுரன்: ஹலோ!

அதிரைக்காரன்: ஹலோ! ASL ப்ளீஸ்!

நரகாசுரன் : 50000+/M/NL

அதிரைக்காரன்: அடேங்கொப்பா! அதென்ன லொக்கேசன் NL ?

நரகாசுரன்: NL = நரகலோகம்

அதிரைக்காரன்: ஓஹோ! மோசமான லொக்கேசன்னு படிச்சிருக்கேன். அங்கு எப்படிப் போனீர்கள்?

நரகாசுரன்: நான் எங்கே போனேன். வலுக்கட்டாயமாக தள்ளி விட்டார்கள்.

அதிரைக்காரன்: ஓஹோ! எப்படியென்று சற்று விளக்க முடியுமா?

நரகாசுரன்: நான் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி சிலர் கிருஷ்ணாவிடம் முறையிட்டுள்ளார்கள். உண்மை என்னன்னு விசாரிக்காமல் கிருஷ்ணாவும் என்னுடன் சண்டையிட்டு சிறைபிடித்து இங்கே தள்ளிட்டார். உண்மையில் நான் அவ்வளவு மோசமானவன் இல்லீங்க!

அதிரைக்காரன்: ஓஹோ! எப்படிச் சொல்றீங்க?

நரகாசுரன்: நான் கொடுமைக்காரன்னு சொல்லிதானே என்னை நரகத்துக்கு அனுப்புனார். என்னை விட மோசமான கொடுமைக்காரங்க சொகுசா பூமில சுத்திக் கொண்டிருக்கிறார்களென்று கேள்விப்பட்டேன். அவிங்களுக்கு ஒரு நாயம். எனக்கு ஒரு நாயமா?

அதிரைக்காரன்: கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன். எவிங்களைப் பத்திச் சொல்றீங்க?

நரகாசுரன்: நரேந்திர மோடி

அதிரைக்காரன்: ஓ...! குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியா?

நரகாசுரன்: ஆமாங்க! இவர் ஆட்சியில நடந்தக் கொடுமைகளை போனவாரம் இண்டெர்நெட்டுல படிச்சிட்டு கண் கலங்கிடுச்சு!

அதிரைக்காரன்:உங்களுக்கே கண் கலங்கிடுச்சா!மோடியோட ஒப்பிடும்போது நீங்க அப்பாவிதான் Mr.நரகாசுரன்.

நரகாசுரன்: பின்னே என்னாங்க! குஜராத்தில் முஸ்லிம்கள மட்டும் குடும்பம் குடும்பமாகக் கொல்லலே. ராம பக்தர்களையும் ரயில் பெட்டிக்குள் வச்சு எரிச்சுக் கொன்றிருக்கானுங்க இவரோட ஆளுங்க!

அதிரைக்காரன்: பாவிகள்! எதுக்கு இப்படிச் செய்தார்கள்?

நரகாசுரன்:எல்லாம் இந்துத்துவா வெறி! கர்ப்பினிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவையும் கொன்னு நெருப்பில் வீசி எரிந்துள்ளார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்க!

அதிரைக்காரன்: இந்துத்துவா என்றால் வாழ்க்கை நெறின்னு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்னாரே.

நரகாசுரன்: ஒருகாலத்தில் இருந்தது. முனிவர்களும் துறவிகளும் இதைப் பின்பற்றி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அதுவேறு; இவர்கள் பின்பற்றுவது இந்துத்துவா அல்ல! ஜந்துத்துவா!!

அதிரைக்காரன்: சரிசரி டென்சனாகாதீங்க.எப்படியோ உங்க புண்ணியத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருக்கார்கள். ஜவுளி, பட்டாசு, இனிப்புக் கடைக்காரர்களும் சந்தோசமா இருக்காங்க. அவங்களுக்கு எதாச்சும் சொல்லனுமா?

நரகாசுரன்: என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு பொதுமன்னிப்புக் கொடுத்து பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் உண்மையான நரகாசுரர்களை இங்கு அனுப்பச் சொல்லி மத்திய அரசாங்கத்திடம் மக்களைப் போராடச் சொல்லுங்க! முதல் கட்டமாக மோடியை ஆட்சியிலிருந்து தூக்கி வீசும் நாள்தான் உண்மையான தீபாவளி!

அதிரைக்காரன்: Mr.நரகாசுரன். உங்களுடன் சாட்டிங்கில் உரையாடியதை அப்படியே என் வலைப்பூவில் போட்டு விடுகிறேன். மக்கள் படித்து விட்டு பின்னூட்டம் போடுவார்கள். முடிஞ்சா நீங்களும் ஒரு பின்னூட்டம் போட்டு மக்களுக்கு இச்செய்தி போய்ச்சேர உதவுங்கள்!

Read more...

நல்ல ஐடியா!

பேரூந்துகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் Footboard தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க முடியவில்லை. "ஏய் பொறம்போக்கு மேலே வா" என்று அன்பாகச் சொன்னாலும் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதிலிருக்கும் த்ரில் வேறெதிலும் இல்லை. தமிழக அரசும் என்னென்னவோ செய்து பார்த்து கடைசியில் சோதனை அடிப்படையில் படத்திலுள்ளவாறு பேரூந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது.



முன்னாள் மாணவன்: அப்படியே அந்தக் கைப்பிடியையும் எடுத்துவிடால் நல்லது:-)

Read more...

பத்து செகண்டில் முட்டை உரிக்கலாம்

Friday, November 02, 2007

காலையில் அவசரமாக அலுவலகத்திற்குச் செல்பவரா நீங்கள்? டிஃபன் கூட சாப்பிட நேரமில்லையா? இனி அந்தக் கவலையில்லை!வீடியோவைப் பாருங்கள்.




நன்றி

முட்டைபோடாமல் ஒரு பின்னூட்டம் போட்டுச் செல்லுங்கள் :-)

Read more...

லட்ச ரூபாயில் அம்பானியை ஆண்டியாக்கலாம்!

Thursday, November 01, 2007

சிலநாட்களாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 20,000 புள்ளிகளைத் தாண்டியதால் இந்திய பங்குகளின் மதிப்பு எகிறியது.இந்த சைக்கில்கேப்பில் நம்பர் ஒன் பில்லியனராக இருந்த பில்கேட்ஸையும் அதற்கடுத்தடுத்த பில்லியனர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அனில் அம்பானி உலகின் நம்பர் ஒன் பில்லியனராகி விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. மகிழ்ச்சி!


அம்பானி உலகின் முதல்நிலை பில்லியனர் ஆனதாலோ அல்லது இந்தியப் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததாலோ இந்தியர்களாகிய நமக்குப் பெருமையே தவிர ஏதேனும் பலன்கள் உண்டா என்று தெரியவில்லை. ப.சிதம்பரம் அவர்களின் பட்ஜெட்டினால் ஏழைகள் பரம ஏழைகளாகவும் பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகும் வாய்புண்டு என்று சொல்லப்பட்டது ஓரளவு உண்மைதான் போலும்?



தற்போதைய உலகின் நம்பர்ஒன் பில்லியனராக இருக்கும் அம்பானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நாற்பத்தைந்தே நாட்களில் உலகின் நம்பர் ஒன் பில்லியனராக நீங்கள் இருக்க ஆசையா? அம்பானியுடன் கீழ்கண்டவாறு ஒப்பந்தம் மட்டும் செய்தால் போதும்,நாற்பத்தி மூன்றாவதுநாள் அம்பானி, உலகிலேயே நம்பர் ஒன் ஒட்டாண்டி ஆகிவிடுவார்!






1) ஒப்பந்தப்படி அம்பானியின் வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் ரூபாயை டெபாசிட் செய்யவும்.



2) அதை அம்பானி உங்களிடம் 45 நாட்களில் கீழ்கண்டவாறு திருப்பித் தர வேண்டும்.



3) நாளொன்றுக்கு ஒரு ரூபாயின் மடங்குகளில் அடுத்த நாற்பத்தைந்து நாட்களுக்கு அம்பானியின் கணக்கிலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆட்டோமாடிக் டிரான்ஸ்பர் ஆகும்படி STANDBY INSTRUCTION கொடுக்கச் சொல்லவும்.(முதல் நாள் ரூ1.00 ,இரண்டாம் நாள் ரூ.2.00, மூன்றாம் நாள் ரூ.4.00, நான்காம் நாள் ரூ8.00 .......என்ற வீதத்தில்)



4)அம்பானியின் தற்போதைய சொத்துமதிப்பு 64 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,560,000,000,000.00 (ஒரு அமெரிக்க டாலரின் தோரய மாற்றுமதிப்பு [Exchange Rate] ரூபாய்.40.00)



6) நாற்பத்தி இரண்டாவதுநாள் அம்பானியின் வங்கி இருப்பைவிட உங்களின் வங்கி இருப்பு அதிகரித்திருக்கும்.



7) நாற்பத்தி மூன்றாவது நாள் அம்பானி அம்பேல் ஆகி இருப்பார்!



8) இன்னும் குறைந்த நாட்களில் அம்பேல் ஆக ஆசைப்பட்டால், திருப்பித்தர வேண்டிய ரூபாய் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.



9) வாழ்த்துக்கள் உலகின் வருங்கால நம்பர் ஒன் (பிராடு) பில்லியனரே!



பின்குறிப்பு: இந்த கணக்கை Ms-Excel லில் செய்து பார்த்தேன். கணக்குப்படி அம்பானி அம்பேல் 43 ஆம் நாளில் ஆகிறார். நீங்களும் செய்து பார்த்து பின்னூட்டமிட்டு பல பில்லியனர்களை உருவாக்க உதவலாமே!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP