நான் ஓர் அப்பாவி! - நரகாசுரன் சிறப்புப் பேட்டி!!
Tuesday, November 06, 2007
ஆன்லைனில் இருந்தபோது மெசஞ்சர் பெட்டி துள்ளியது. narakasuran@hellmail.com என்ற முகவரியிலிருந்து ஒருவர் சாட்டிங் பண்ண விரும்புவதாகக் காட்டியது. உடனடியாக ACCEPT பண்ணினேன்.
நரகாசுரன்: ஹலோ!
அதிரைக்காரன்: ஹலோ! ASL ப்ளீஸ்!
நரகாசுரன் : 50000+/M/NL
அதிரைக்காரன்: அடேங்கொப்பா! அதென்ன லொக்கேசன் NL ?
நரகாசுரன்: NL = நரகலோகம்
அதிரைக்காரன்: ஓஹோ! மோசமான லொக்கேசன்னு படிச்சிருக்கேன். அங்கு எப்படிப் போனீர்கள்?
நரகாசுரன்: நான் எங்கே போனேன். வலுக்கட்டாயமாக தள்ளி விட்டார்கள்.
அதிரைக்காரன்: ஓஹோ! எப்படியென்று சற்று விளக்க முடியுமா?
நரகாசுரன்: நான் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி சிலர் கிருஷ்ணாவிடம் முறையிட்டுள்ளார்கள். உண்மை என்னன்னு விசாரிக்காமல் கிருஷ்ணாவும் என்னுடன் சண்டையிட்டு சிறைபிடித்து இங்கே தள்ளிட்டார். உண்மையில் நான் அவ்வளவு மோசமானவன் இல்லீங்க!
அதிரைக்காரன்: ஓஹோ! எப்படிச் சொல்றீங்க?
நரகாசுரன்: நான் கொடுமைக்காரன்னு சொல்லிதானே என்னை நரகத்துக்கு அனுப்புனார். என்னை விட மோசமான கொடுமைக்காரங்க சொகுசா பூமில சுத்திக் கொண்டிருக்கிறார்களென்று கேள்விப்பட்டேன். அவிங்களுக்கு ஒரு நாயம். எனக்கு ஒரு நாயமா?
அதிரைக்காரன்: கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன். எவிங்களைப் பத்திச் சொல்றீங்க?
நரகாசுரன்: நரேந்திர மோடி
அதிரைக்காரன்: ஓ...! குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியா?
நரகாசுரன்: ஆமாங்க! இவர் ஆட்சியில நடந்தக் கொடுமைகளை போனவாரம் இண்டெர்நெட்டுல படிச்சிட்டு கண் கலங்கிடுச்சு!
அதிரைக்காரன்:உங்களுக்கே கண் கலங்கிடுச்சா!மோடியோட ஒப்பிடும்போது நீங்க அப்பாவிதான் Mr.நரகாசுரன்.
நரகாசுரன்: பின்னே என்னாங்க! குஜராத்தில் முஸ்லிம்கள மட்டும் குடும்பம் குடும்பமாகக் கொல்லலே. ராம பக்தர்களையும் ரயில் பெட்டிக்குள் வச்சு எரிச்சுக் கொன்றிருக்கானுங்க இவரோட ஆளுங்க!
அதிரைக்காரன்: பாவிகள்! எதுக்கு இப்படிச் செய்தார்கள்?
நரகாசுரன்:எல்லாம் இந்துத்துவா வெறி! கர்ப்பினிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவையும் கொன்னு நெருப்பில் வீசி எரிந்துள்ளார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்க!
அதிரைக்காரன்: இந்துத்துவா என்றால் வாழ்க்கை நெறின்னு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்னாரே.
நரகாசுரன்: ஒருகாலத்தில் இருந்தது. முனிவர்களும் துறவிகளும் இதைப் பின்பற்றி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அதுவேறு; இவர்கள் பின்பற்றுவது இந்துத்துவா அல்ல! ஜந்துத்துவா!!
அதிரைக்காரன்: சரிசரி டென்சனாகாதீங்க.எப்படியோ உங்க புண்ணியத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருக்கார்கள். ஜவுளி, பட்டாசு, இனிப்புக் கடைக்காரர்களும் சந்தோசமா இருக்காங்க. அவங்களுக்கு எதாச்சும் சொல்லனுமா?
நரகாசுரன்: என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு பொதுமன்னிப்புக் கொடுத்து பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் உண்மையான நரகாசுரர்களை இங்கு அனுப்பச் சொல்லி மத்திய அரசாங்கத்திடம் மக்களைப் போராடச் சொல்லுங்க! முதல் கட்டமாக மோடியை ஆட்சியிலிருந்து தூக்கி வீசும் நாள்தான் உண்மையான தீபாவளி!
அதிரைக்காரன்: Mr.நரகாசுரன். உங்களுடன் சாட்டிங்கில் உரையாடியதை அப்படியே என் வலைப்பூவில் போட்டு விடுகிறேன். மக்கள் படித்து விட்டு பின்னூட்டம் போடுவார்கள். முடிஞ்சா நீங்களும் ஒரு பின்னூட்டம் போட்டு மக்களுக்கு இச்செய்தி போய்ச்சேர உதவுங்கள்!
11 comments:
சூப்பர் சாட்டிங் பேட்டி!
மோடி மட்டுமா போட்டி?
காலத்தின் கட்டாயத்தை கணக்கில் கொள்ளாமல் சற்று விரிவாக எழுதியிருந்தால் தீபாவளி பரிசாக ஒரு நல்ல கருத்தியல் நகைச்சுவை படித்த நிறைவேற்பட்டிருக்கும். நல்ல கற்பனை. :)
நானும் இரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன்
நல்ல கற்பனை.பாராட்டுக்கள்.
ஒரு செய்தி;
அசுரனுக்குப் பொருள் தெரியுமா?
சுரா பானம் அருந்தாதவர்கள் அசுரர்கள்.
சுரா பானம் அருந்தியவர்கள் சுரர்கள்.
சுத்தம்xஅசுத்தம்-இதுபோல
அதி.அழகு,
தற்போதைக்கு மோடி மட்டும்தான். ஏமாற்றுக்காரனைக் குறிப்பிடும் போது 'மோடி மஸ்தான்' என்பார்கள். இதுவர்ரை யாருன்னு தெரியாம இருந்தேன்.மோடி மஸ்தான்னு இனி யாராச்சூம் சொன்னால் நரேந்திர மோடிதான் நினைவில்ல் வருவான்.
இசை,
இன்னும் சாட்டிங்கை நீட்டி இருக்கலாம். கலைஞருக்கே நாக்கை அறுப்பேன்னு பத்வா கொடுத்தானுங்க. அதேமதிரி நமக்கும் கொடுத்துடப் போறானுங்கன்னு சுருக்கிட்டேன்.
//நானும் இரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன்//
Mr.நரகாசுரன்,
இது கயமைத்தனமல்ல. மோடி மஸ்தானை மாம்மியார் வீட்டுக்கு அனுப்ப இதுமாதிரியான 'கருத்தியல் நகைச்சுவை' (நன்றி: இசை) அவசியம்.
//சுரா பானம் அருந்தாதவர்கள் அசுரர்கள்.சுரா பானம் அருந்தியவர்கள் சுரர்கள். /
மணிமகன்,
எந்த சுரா பாணம்? நம்ம சோ சொன்னாரே திராட்சை சுரா பானாமா? கலைஞர் ஐயா சொன்ன 'அந்த' சுரா பானமா?
தகவலுக்கு நன்றி ஐயா.
//சுரா பானம் அருந்தாதவர்கள் அசுரர்கள்.சுரா பானம் அருந்தியவர்கள் சுரர்கள். /
மணிமகன்,
எந்த சுரா பாணம்? நம்ம சோ சொன்னாரே திராட்சை சுரா பானாமா? கலைஞர் ஐயா சொன்ன 'அந்த' சுரா பானமா?
தகவலுக்கு நன்றி ஐயா.
அனானி,
என்னை திட்டி எழுதியதை நான் ஏற்கவில்லை. (நான் துலுக்கன் தான். இருட்டில் கல்லெறியும் கயமைத் தனத்தை ஒழியுங்கட்டா.)
intha modiyaiththan priminister padhavikku poruththamanavarnnu CHO thannoda Kumudham pettiyila sonnar
Post a Comment