மணிப்பூர்:நாத்திகத் தீவிரவாதிகள்?

Tuesday, September 02, 2008

மணிப்பூர் முதல்வர் வீடுமீது ராக்கெட் குண்டு வீசப்பட்டதாம்.வீசியவர்கள் தீவிரவாதிகளாம்!! பெரும்பாலும் தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் சார்ந்திருக்கும் மதத்துடன் இணைத்து, குறிப்பிடுவர். உதாரணமாக இத்தகையத் தாக்குதலில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டிருந்தால் 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்றுதான் குறிப்பிடுவார்கள்; இதுவே காலங்காலமாகக் கடை பிடிக்கப்படும் ஊடகத் த்ர்மமாக இருந்து வருகிறது.


மணிப்பூர் முதல்வரைக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 'தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்' என்று மட்டு போட்டுள்ளார்கள்! என்ன கொடுமை சார் இது! தெரியாமத்தான் கேட்கிறேன்.


1) மணிப்பூர் தீவிரவாதிகள் மதநம்பிக்கையற்ற நாத்திகர்களா? அல்லது

2) பாகிஸ்தான், பங்களாதேஷ் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அல்லது

3) பத்திரிக்கைக்காரர்களெல்லாம் திருந்தி விட்டார்களா? அல்லது

4) இந்த ராக்கெட் லாஞ்சர்கள் செய்வதற்கு மணிப்பூரில் யாருமே ஆணி, பேட்டரி, ப்ளாஸ்டிக் வயர், உடைந்த குழாய் போன்றவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருக்கவில்லையா?



விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்!

24 comments:

கோவி.கண்ணன் 9/02/2008 1:53 AM  

//
மணிப்பூர் முதல்வரைக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 'தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்' என்று மட்டு போட்டுள்ளார்கள்! என்ன கொடுமை சார் இது! தெரியாமத்தான் கேட்கிறேன்.


1) மணிப்பூர் தீவிரவாதிகள் மதநம்பிக்கையற்ற நாத்திகர்களா? அல்லது

2) பாகிஸ்தான், பங்களாதேஷ் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அல்லது

3) பத்திரிக்கைக்காரர்களெல்லாம் திருந்தி விட்டார்களா? அல்லது//

சூப்பர் கேள்வி, பதில் எதிர்பார்க்காதிங்க !

:)

'கிறித்துவ பாதிரியார் கற்பழித்தார்' என்று நிகழ்வை எழுதும் 'ஹிந்து' பத்திரிக்கைகள், சாமியார் கற்பழித்தார் என்றே இந்து சாமியார் பற்றிய நிகழ்வை எழுதும், மறந்தும் கூட 'இந்து சாமியார் கற்பழித்தார்' என்று எழுதமாட்டார்கள்.

ஊடகங்கள் சார்பாக நடந்து கொள்வது இப்படித்தான்.

Anonymous 9/02/2008 1:53 AM  

மனிப்பூருங்கறீங்க...

சீனாவில் இருந்து வரும் "புத்தமத" தீவிரவாதிங்களா இருப்பாங்களோ ???

:)))

Anonymous 9/02/2008 2:03 AM  

//Labels: இஸ்லாம், தீவிரவாதி//

:)

கிறித்துவ தீவிரவாதிகள்!

வால்பையன் 9/02/2008 2:26 AM  

நாத்திகர்கள் தீவிரவாதியாக இருக்கமுடியாது, அவர்களை இழுக்கவேண்டாம்,

Robin 9/02/2008 3:55 AM  

//கிறித்துவ தீவிரவாதிகள்!// -
கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இந்தியாவில் இருந்திருந்தால் காவி மிருகங்கள் ஒரிசாவில் வெறியாட்டம் போட்டிருக்க முடியாது. ஆனால் கிறிஸ்தவம் அன்பை போதிப்பதால் வன்முறைக்கு இடமில்லை. மேலும் கிறிஸ்தவத்தை அடிப்படையாக வைத்து யாரும் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பிக்க முடியாது. அப்படியே ஆரம்பித்தாலும் அது முரண்பாடாகத் தான் இருக்கும்.

Anonymous 9/03/2008 11:57 AM  

//இந்தியாவில் இருந்திருந்தால் காவி மிருகங்கள் ஒரிசாவில் வெறியாட்டம் போட்டிருக்க முடியாது.//

அப்புறம் National Liberation Front of Tripura,Nagaland Rebels இந்தக் குரூப்புகெல்லாம் என்ன காந்தியாவாதிகளா?

//ஆனால் கிறிஸ்தவம் அன்பை போதிப்பதால் வன்முறைக்கு இடமில்லை. மேலும் கிறிஸ்தவத்தை அடிப்படையாக வைத்து யாரும் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பிக்க முடியாது//

விக்கிபீடியா போய் பார்க்கவும்.

Anonymous 9/03/2008 12:19 PM  

//சூப்பர் கேள்வி, பதில் எதிர்பார்க்காதிங்க ///

இவை சூப்பர் கேள்விகள் அல்ல. டுபாக்கூர் கேள்விகள்.

இத்தாக்குதல் People's Revolutionary Party of Kangleipak அமைப்பால் நடத்தப்பட்டது. அவர்களில் நோக்கம் சுதந்திர மணிப்பூர். எந்த மத்தையும் அவர்கள் தாங்கிப் பிடிக்கவில்லை. அதாவது நம்ம புலிகள் போன்ற அமைப்பு.

அவர்கள் மதவாத அரசை நிறுவ முயற்சி செய்தால் தானே அவர்களை இந்து அல்லது கிறித்துவ பயங்கரவாதி என முடியும்?

//மணிப்பூர் தீவிரவாதிகள் மதநம்பிக்கையற்ற நாத்திகர்களா? //

தீவிரவாதிகள் மதத்தினை இணைத்து அழைக்க அவர்களீன் மத நம்பிக்கை மட்டும் காரணி அல்ல. அவர்கள் எதை முன்னிறுத்தி பயங்கரவாதம் புரிகின்றனர் என்பதுதான் முக்கியம்.

உ-ம் புலிகள். இக்குழு உறுப்பினர்களீல் சிலர் கிறுத்துவர் சிலர் இந்து. ஆனால் இவர்களின் நோக்கம் இந்து அல்லது கிறுத்துவ அரசு அல்ல. தமிழ் மக்களின் சுதந்திர தாகம்தான் இவர்களின் நோக்கம்.

இவர்கள் தாக்கினால் தீவிரவாத தாக்குதல் மட்டும்தான்.

ஆனால் ஒரு இசுலாமியன் குண்டுவைத்தால் எப்போதும் இசுலால் முன்னிறுத்த படுவதால் அது இசுலாம் தீவிரவாதமே!

Anonymous 9/03/2008 12:29 PM  

//நாத்திகர்கள் தீவிரவாதியாக இருக்கமுடியாது, அவர்களை இழுக்கவேண்டாம்//

நாத்திகனுக ரொம்ப நல்லவுக்களோ?

ஸ்டாலினும் மாவோ-ம் பண்ணாத பயங்கரவாதமா? ஹ ஹா

அதிரைக்காரன் 9/04/2008 12:09 AM  

//நாத்திகனுக ரொம்ப நல்லவுக்களோ?ஸ்டாலினும் மாவோ-ம் பண்ணாத பயங்கரவாதமா? ஹ ஹா //

ஸ்டாலின் தன்னை நாத்திகராகச் சொல்லி கொள்ளவில்லை; அவரின் குடும்பத்தினர் கோவில் வழிபாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கவும் இல்லை. ஆமா! நீங்க எந்த ஸ்டாலினைச் சொன்றீங்க? ;-)

அதிரைக்காரன் 9/04/2008 12:10 AM  

//இவை சூப்பர் கேள்விகள் அல்ல. டுபாக்கூர் கேள்விகள்.//

ஓஹோ! அப்படியா! சரி உங்க டுபாக்கூர் பதில்களைப் பார்ப்போமா!

//இத்தாக்குதல் People's Revolutionary Party of Kangleipak அமைப்பால் நடத்தப்பட்டது. அவர்களில் நோக்கம் சுதந்திர மணிப்பூர். எந்த மத்தையும் அவர்கள் தாங்கிப் பிடிக்கவில்லை. அதாவது நம்ம புலிகள் போன்ற அமைப்பு. அவர்கள் மதவாத அரசை நிறுவ முயற்சி செய்தால் தானே அவர்களை இந்து அல்லது கிறித்துவ பயங்கரவாதி என முடியும்?//

மதவாத அரசை நிறுவ முயற்சி செய்யும் பாஜகவை இந்து பயங்கரவாத அமைப்புன்னு ஒத்துக்குவீங்களா? அது கிடக்குது கழுதை!

எல்லாத் தீவிரவாதிகளும் இப்படித்தான் சொல்கிறார்கள். RSS ஐயே சேவை இயக்கம் என்றவர்களல்லவா! கொஞ்சம் விட்டால் நரேந்திர மோடிக்கு பாரத ரத்னா கூட கொடுப்ப்பீங்க!!

//தமிழ் மக்களின் சுதந்திர தாகம்தான் இவர்களின் நோக்கம்.இவர்கள் தாக்கினால் தீவிரவாத தாக்குதல் மட்டும்தான்.ஆனால் ஒரு இசுலாமியன் குண்டுவைத்தால் எப்போதும் இசுலால் முன்னிறுத்த படுவதால் அது இசுலாம் தீவிரவாதமே! //

'தீவிர' தமிழ்பற்று உங்களை இப்படியெல்லாம் எழுதத் தூண்டுகிறதோ என்னவோ? தீவிரவாதத்துடன் இஸ்லாத்தைத் முன்னிருத்துபவர்கள் பத்திரிக்கைகளும் காவல்(வித்து)றையினரும்தான்!

ஏதேனும் தீவிரவாதத்தாக்குதலில் முஸ்லிம் பெயர்தாங்கி ஈடுபட்டிருந்தால் உடனடியாக இஸ்லாத்தை முன்னிறுத்துவதில் காட்டும் 'தீவிரம்' மற்ற மதப் பெயர்தாங்கிகள் விசயத்தில் காணாமல் போய்விடுகிறதே. ஏன்? முஸ்லிம் குண்டு வைத்தால் மட்டும்தான் வெடிக்குமா? அல்லது மற்ற மதத்தவர் வைக்கும் குண்டுகளின் சத்தம் ஊடகங்களின் காதில் கேட்காதா?

அதிரைக்காரன் 9/04/2008 12:11 AM  

//ஆனால் கிறிஸ்தவம் அன்பை போதிப்பதால் வன்முறைக்கு இடமில்லை. மேலும் கிறிஸ்தவத்தை அடிப்படையாக வைத்து யாரும் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பிக்க முடியாது//

கிறிஸ்தம் அன்பையே போதிக்கிறது. ஆனால் கிறிஸ்தவப் பெயர்தாங்கி அரசியல்வாதிகள் அவற்றைக் கடைபிடிப்பதில்லை.அவர்களின் பொருளியல் பேராசையே ஹிரோசிமா-ஈராக்வரைக்கும் கோடிக்கணக்கான உயிர்களைக் கொன்றொழிக்கக் காரணமாக இருந்தது.

சர்வதேச ஊடகங்களைக் காலடியில் வைத்திருக்கும் யூத/கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை சர்வதேச அளவில் தீவிரவாதிகளாக முன்னிறுத்துவதில் இந்திய பார்ப்பனீய ஆதிக்கச் சக்திகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்லர்.

முஸ்லிம்களைப் பூதாகரப்படுத்துவதில் காட்டும் தீவிரத்தை,பத்திரிக்கைத் தர்மத்தை மற்றவர்கள் விசயத்தில் காட்ட மறுப்பது ஏன்?

குண்டு வைத்தவனின் XXXகுறியைப் பார்த்து தீவிரவாதத்தை அளவிடும் போக்கைக் ஊடகங்கள் கைவிட வேண்டும் என்ற ஆதங்கமே இப்பதிவை எழுதத் தூண்டியது.

வால்பையன் 9/04/2008 12:18 AM  

கம்யூனிஷ கொள்கைகளையும் வெறித்தனமாக ஆதரிப்பது நாத்திக தன்மையல்ல,
இன்று கம்யூநிஷமும் ஒரு மதம் போல தான் பார்க்கப்படுகிறது.

நான் சொல்லும் நாத்திகர்கள் வேறு

Anonymous 9/04/2008 5:22 AM  

//மதவாத அரசை நிறுவ முயற்சி செய்யும் பாஜகவை இந்து பயங்கரவாத அமைப்புன்னு ஒத்துக்குவீங்களா? அது கிடக்குது கழுதை!//

பாஜகா இதுவரை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக அதாவது குண்டு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தகவல் இல்லை.

ஆனால் கலவரங்களுக்கு காரணமாக இருந்திருக்கின்றார்கள். இதனை தீவிரவாதம் என ஏற்றுக் கொண்டால் எல்லா அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர்.காங்கிரஸ்,திமுக அதிமுக பாமக எல்லாமே தீவிரவாத அமப்புக்கல்தான். ஆனால் பிஜேபி இந்து தீவிரவாதி லிஸ்டில் வரும்.I agree!

Anonymous 9/04/2008 5:38 AM  

//RSS ஐயே சேவை இயக்கம் என்றவர்களல்லவா!//

ஏன் ஐயா சொல்லக் கூடாது. சுனாமி தாக்கிய போது RSS அமைப்பினர் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் அழுகிய பிணங்களை கூட அப்புறப் படுத்து சேவை செய்தாக படித்துள்ளேன். RSS மட்டுமல்ல தமுமுக அமைப்பினரும் இதோ போன்ற சேவை செய்துள்ளார்கள். இந்த இரு மதவாதிகளும் மத வேறுபாடின்றீ சேவை செய்துள்ளார்கள். ஆனால் எந்தப் பகுத்தறிவு பகலவன்களும் சுனாமி பாதிக்கப்பட்ட்ட இடங்களுக்கு தலை காட்டவில்லை.

தற்போது பிகார் வெள்ளத்தின் போது RSS முஸ்லிகளுக்கு ஆமாம் முஸ்லிகளுக்கு உதவுகிறது எனத் தெரியுமா?

இதோ Tதினமணி செய்தி...

உடனே தினமணி ஒரு பார்பன நாளேடு எனச் சொல்ல வந்தால் இதோ இந்த PTI செய்தி படியுங்கள்.

இதனை சேவை அமைப்பு என்பதில் என்ன தவறு ஐயா?

Anonymous 9/04/2008 5:53 AM  

//RSS ஐயே சேவை இயக்கம் என்றவர்களல்லவா!//

RSS சேவை அமைப்புதான் அதிலென்ன தவறு?

சுனாமி வந்த போது அழுகிய பிணங்களைக்கூட RSS மற்றும் தமுமுக அமைப்பினரும் அகற்றி சேவை செய்துள்ளனர். ஆனால் RSS ஐ குற்றஞ்சொல்லும் பகுத்தறிவு ஆசாமிகளைதான் அங்கு காணவில்லை!

மேலும் தற்போதைய பீகார் வெள்ளத்தின் போது மத வேறுபாடு இன்றி முஸ்லிம்களுக்கும் RSS அமைப்பு உண்வு மற்றும் இருப்பிட வசதி அளித்துள்ளது.

இந்த தினமணி செய்தி பாருங்கள்!

என்ன உடனே தினமணி பார்பனப் பத்திரிக்கையா?

இந்த PTI இடமிருந்துதான் தினமணி இந்த செய்தியைப் பெற்றுள்ளது!

Anonymous 9/04/2008 6:27 AM  

//இந்திய பார்ப்பனீய ஆதிக்கச் சக்திகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்லர்.//

இந்திய ஆதிக்கச் சக்திகள் முஸ்லிகளின் அட்டூழியத்திற்கு எதிர்வினையாகும். தனிநாடு கேட்டு பிரிவினையை விதைத்தது முஸ்லிம்கள்தான்.முஸ்லிம் லீக் தோன்றுவதற்கு முன் இந்துகளுக்கு என எந்த அமைப்பும் இல்லை!

முன்னர் முஸ்லிம்கள் தானே இங்கு படையெடுத்து வந்து இந்தியாவை நாசப் படுத்தினர். முஸ்லிம்களின் இந்திய படையெடுப்புகளின் போது மிகவும் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்டதாக பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்! 1000 - 1525 இடையில முஸ்லிம்களால் கொல்லப்பட்ட இந்துககளின் எண்ணிக்கை 8 கோடி. முகம்மது கஜினி முகம்மது மட்டும் 20 லட்சம் பேரை போட்டுத்தள்ளியுள்ளன். மோடி முஸ்லிகளுக்கு இணையாக முடியுமா?

அதே போல் யூதர்களின் நிலத்தை கைப்பற்றி அவர்களை விரட்டிவிட்டு பின்பு அவர்களையே என்னமோ நாடுபிடிக்க வந்தவர் போல சித்தரிப்பது ஏன்? அவர்களின் உரிமை நிலத்தை கேட்கின்றார்கள்? ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் அல்ல!

அதிரைக்காரன் 9/06/2008 1:44 AM  

1) இந்திய ஆதிக்கச் சக்திகள் முஸ்லிகளின் அட்டூழியத்திற்கு எதிர்வினையாகும்.
அப்படியெனில், தற்போதைய பார்ப்பனர்களின் அட்டூழியத்திற்கு வருங்கால முஸ்லிம்கள் எதிர்வினையாற்றினால் நியாயம் என்பீர்களா?

2) தனிநாடு கேட்டு பிரிவினையை விதைத்தது முஸ்லிம்கள்தான்.

இந்தியாவைப் பிரித்து சிறுபான்மையினரான எங்களைப் பார்ப்பனீயப் பாம்புகளிடம் கடிபட விட்டுச் சென்றவகையில் பாகிஸ்தானியர்கள்மீது எனக்கும் ஆத்திரம் உண்டு. பாகிஸ்தான் பிரிவினையால்தான் 2% பார்ப்பனர்கள் 98% உயர் அதிகாரங்களைப் பெற்று ஒட்டுமொத்த இந்தியர்களையும் இடஒதுக்கீடு பிச்சை கேட்க வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறதே. அதுகுறித்து என்ன நினைக்கிறீர்களய்யா?

3) முஸ்லிம் லீக் தோன்றுவதற்கு முன் இந்துகளுக்கு என எந்த அமைப்பும் இல்லை!

இந்து மகா சபை, ஜனசங்கம் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இருந்தன. காங்கிரஸிலும் படேல் போன்ற இந்துமதத் தலைவர்கள் இருந்தார்கள். சில/பல வருடங்கள் வித்தியாசம் இருந்தாலும் சங்க பரிவாரங்களைப் போல், முஸ்லிம்லீக் மதவெறியாட்டம் ஆடவில்லை; காந்தியைக் கொன்றவர்களும் முஸ்லிம் லீக்கர்கள் அல்ல!

4) முன்னர் முஸ்லிம்கள் தானே இங்கு படையெடுத்து வந்து இந்தியாவை நாசப் படுத்தினர்.

5000வருடங்களுக்கு முன்பே கைபர் வழியாக எல்லைதாண்டும் என்று வழிகாட்டியவர்கள் பார்ப்பனர்கள்தான். பார்ப்பனர்கள் வந்த்போதும் சரி, முகலாயர்கள் வந்த்போதும் சரி இந்தியா என்ற நிலப்பரப்பே இல்லை. சமஸ்தானங்களும், குறுநில மன்னர்களுமே துண்டு துண்டாக சிந்து நதியைச் சுற்றியப் பகுதியை ஆண்டு வந்தார்கள். குடுமிப்பிடிச் சண்டையிடுக்கொண்டு முகலாயர்களை அழைத்துவந்து பரஸ்பரம் நாசப்படுத்தியவர்கள் இந்துகுறுநில மன்னர்களே. மொகலாயர்கள் வருகைக்குப் பின்னர்தான் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டது.

5) முஸ்லிம்களின் இந்திய படையெடுப்புகளின் போது மிகவும் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்டதாக பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்!

எல்லா படையெடுப்புமே காட்டுமிராண்டித் தனமானதுதான். இவற்றில் மொகலாயர்களின் படையெடுப்பை மட்டும் இந்துக்களுக்கு எதிரானப் படையெடுப்பாகத் திரித்தவர்கள் அதே வரலாற்றாசிரியர்கள்தான் என்பதையும் மறக்க வேண்டாம்.

6)1000 - 1525 இடையில முஸ்லிம்களால் கொல்லப்பட்ட இந்துககளின் எண்ணிக்கை 8 கோடி.

இப்படி எதை வேண்டுமானாலும் எழுதி வைத்தால் நாளைக்கு அதையே வரலாறு என்று எவராவது மேற்கோளிடக்கூடும். உங்கள் வாதப்படி,அக்காலகட்டத்தில் முஸ்லிமல்லாதவர்கள் பெரும்பான்மையாகத்தானே இருந்தார்கள்? ஏன் அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை? காரணம் அவர்கள் என்றுமே ஒரே இந்தியர்களாவோ அல்லது எல்லா இந்துக்களும் சமம் என்ற கோட்பாட்டிலோ இருந்திருக்க வில்லை. இதற்குக்காரணம் முஸ்லிம்கள் அல்ல!

7) முகம்மது கஜினி முகம்மது மட்டும் 20 லட்சம் பேரை போட்டுத்தள்ளியுள்ளன். மோடி முஸ்லிகளுக்கு இணையாக முடியுமா?

கஜினியைப் போலவே பல்வேறு இந்து மன்னர்களும் சக இந்துக்களைப் போட்டுத்தள்ளி இருக்கிறார்கள், கஜினி மட்டுமே முன்னிறுத்தப்படுவதற்குக் காரணம் பெயரில் 'முஹம்மது' என்று இருந்ததால்தான். கஜினியாவது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து போட்டுத் தள்ளினான் ஆனால் மோடி...?

8) அதேபோல் யூதர்களின் நிலத்தை கைப்பற்றி அவர்களை விரட்டிவிட்டு பின்பு அவர்களையே என்னமோ நாடுபிடிக்க வந்தவர் போல சித்தரிப்பது ஏன்? அவர்களின் உரிமை நிலத்தை கேட்கின்றார்கள்? ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் அல்ல!

அடா..அடா!! இதுவரை அனாணி பேருல யாருடன் உரையாடிக் கொண்டிருந்தேன் என்று விளங்காமல் இருந்தது. தர்போது புரிந்து விட்டது வஜ்ரா சங்கர்! 50-60 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் என்ற நாடே இல்லை என்பதும், படிபடியாக பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்து இன்றும் அடக்குமுறைக்கு ஆளாக்கி வரும் யூதர்களின் சூழ்ச்சிகள் கூகிலிட்டு பார்த்தால் கிடைக்கும்.

அதிரைக்காரன் 9/06/2008 1:44 AM  

//தற்போது பிகார் வெள்ளத்தின் போது RSS முஸ்லிகளுக்கு ஆமாம் முஸ்லிகளுக்கு உதவுகிறது எனத் தெரியுமா?//

//இதனை சேவை அமைப்பு என்பதில் என்ன தவறு ஐயா? /

இதுவரை நம்நாட்டில் நடந்த மதக்கலவரங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் யிரிழக்கவும் வீடிழக்கவும் பின்னனியில் சங் பரிவாரங்களைத் தூண்டியதில் RSS இன் பங்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் அனைவரும் அறிந்ததே.ஒன்றிரண்டு மருத்துவ முகாம்களால் இவர்கள் கருவருத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல.தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் கில்லாடி யுக்தியே இவை!

அதிரைக்காரன் 9/06/2008 1:44 AM  

//பாஜகா இதுவரை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக அதாவது குண்டு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தகவல் இல்லை.//

பாஜக பெயரில் நேரடியாகத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதில்லை. கொலைவெறி சங் பரிவாரங்களின் அரசியல் முகமூடிதான் பாஜக. அவர்கள் ஆடும் கொலைவெறியாட்டத்திற்கு அரசியல் ரீதியில் பாதுகாப்புக் குரல் கொடுப்பதே பாஜகவின் வேலை.ஒரிஸ்ஸாவில் பாதிரியாரைக் கொன்ற கயவர்களை 'உணர்ச்சி வசப்பட்ட தேசபக்தர்கள்' என்று பாதுகாத்தவர்கள் பாஜக பண்ணாடைகள்தான்!

சட்டையைக் கழட்டினாலும் போட்டிருந்தாலும் பாம்பு, பாம்புதானுங்கோ!

Anonymous 9/06/2008 8:11 AM  

//தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் கில்லாடி யுக்தியே இவை!//

எதற்கு அப்படி RSS நல்ல பெயர் எடுக்க வேண்டும். அவர்கள் என்ன எலெக்ஷனிலா நிற்கிறார்கள்? பிஜேபிதான் முஸ்லிம் ஓட்டு

வேண்டாம் என்கிறதே!

Anonymous 9/06/2008 8:11 AM  

//சட்டையைக் கழட்டினாலும் போட்டிருந்தாலும் பாம்பு, பாம்புதானுங்கோ//

இப்போதும் அதையே சொல்லுகிறேன். ஒரிஸ்ஸாவிலும் எதிர்வினைதான். அவர்களின் சாமியாரை கொன்றாதால் தான்

இவ்விளைவு. பாம்பை சீண்டிவிட்டது யார்? ஒரு முஸ்லிம் நாட்டில் ஒரு இமாமை non-muslim கொன்றால் இதுதானே நடக்கும்.

Anonymous 9/06/2008 8:16 AM  

//அப்படியெனில், தற்போதைய பார்ப்பனர்களின் அட்டூழியத்திற்கு வருங்கால முஸ்லிம்கள் எதிர்வினையாற்றினால் நியாயம்
என்பீர்களா?//

ஏன்னையா நாங்க அடிப்போம். நீங்க மூடிகிட்டுதான் இருக்கணும். நீங்க திருப்பி அடித்தால் அது தப்பு. இது எந்த ஊரு நியாயம்?


//பாகிஸ்தான் பிரிவினையால்தான் 2% பார்ப்பனர்கள் 98% உயர் அதிகாரங்களைப் பெற்று ஒட்டுமொத்த இந்தியர்களையும் இடஒதுக்கீடு பிச்சை கேட்க வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறதே. அதுகுறித்து என்ன நினைக்கிறீர்களய்யா?//

ஜாதி பிரச்சனைதான் ஆண்டாண்டு காலமாய் இருகின்றதே. இதென்ன புதுக் கரடி?


//இந்து மகா சபை, ஜனசங்கம் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இருந்தன. காங்கிரஸிலும் படேல் போன்ற இந்துமதத் தலைவர்கள் இருந்தார்கள்.//

தவறு ஐயா. 1906-ல் முஸ்லிம்லீக் ஆரம்பிக்கப்பட்டது .1915-ல் தான் இந்து மகா சபை முஸ்லிம்லீக்கிற்கு எதிர் வினையாக ஆரம்பிக்கப்பட்டது.1951-ல்தான் ஜனசங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

//சில/பல வருடங்கள் வித்தியாசம் இருந்தாலும் சங்க பரிவாரங்களைப் போல், முஸ்லிம்லீக் மதவெறியாட்டம் ஆடவில்லை //


என்ன சார் சோத்துல முழு பூசணிக்காய மறைக்குறீங்களே!

சில முஸ்லிம் லீக் மதவெறியாட்டங்களுக்கு உதாரணங்கள்...

1946-ல் வங்காளத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16,000 பேர் படுகொலை. பிரிவினைக்கு முன் 1947- பஞ்சாப் இந்து-சீக்கிய படுகொலை (5 பேர் படுகொலை, 1.2 கோடி பேர் வீடிழப்பு), தற்போது கேரளாவில் Marad massacre....


//5000வருடங்களுக்கு முன்பே கைபர் வழியாக எல்லைதாண்டும் என்று வழிகாட்டியவர்கள் பார்ப்பனர்கள்தான்.//

என்ன சொல்லவர்றிங்க.. பார்ப்பானர்களுக்கு முஸ்லிகளுக்கும் வித்தியாசமில்லை.பார்பனர் வழியை பின்பற்றி இந்தியாவை சுரண்ட வந்தவர்கள்தான் முஸ்லிம்கள் என ஒப்புதல் தருகுறிர்களா?

//எல்லா படையெடுப்புமே காட்டுமிராண்டித் தனமானதுதான்.//

ஆனால உலக வரலாற்றிலேயே முஸ்லிம்களின் இந்திய படையெடுப்பும் ஆட்சிதான் காட்டுபிராண்டிதனத்தின் உச்சம் என பல வரலாற்றசிரியர்கள் வர்ணித்துள்ளனர். இதோ வரலாற்றசிரியர் வில்லியம்ஸ் கூறுவது...

The Mohammedan conquest of India is probably the bloodiest story in history. The Islamic historians and scholars have recorded with great glee and pride the slaughters of Hindus, forced conversions, abduction of Hindu women and children to slave markets and the destruction of temples carried out by the warriors of Islam during 800 AD to 1700 AD. Millions of Hindus were converted to Islam by sword during this period.

மேலும் விபரங்களுக்கு பார்க்க

//உங்கள் வாதப்படி,அக்காலகட்டத்தில் முஸ்லிமல்லாதவர்கள் பெரும்பான்மையாகத்தானே இருந்தார்கள்? ஏன் அவர்களால் தடுத்து
நிறுத்த முடியவில்லை?//

பெரும்பான்மையான ஆளுக இருந்த வெற்றி வரும்னு எவன் சொன்னான். அப்படின்னா குட்டி நாடான இஸ்ரேல் ஜோர்டான், சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ,அல்ஜீரியா, மொராக்கோ, சுடான், டுனிஷியா, சிரியா -னு அரபு தேச கூட்டணீய ஆறு நாள் போரில்
தோற்கடித்ததோ எப்படி?

//கஜினி மட்டுமே முன்னிறுத்தப்படுவதற்குக் காரணம் பெயரில் 'முஹம்மது' என்று இருந்ததால்தான். //

புல்லரிக்க வைக்கறீங்க சார்.
அக்பர் பேருலயையும் 'முஹம்மது' இருக்கே சார்? அவரை மட்டும் ஏன் சார் அகபர் த க்ரேட்ன்னு சொல்றோம்?

//50-60 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் என்ற நாடே இல்லை என்பதும், படிபடியாக பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்து இன்றும் அடக்குமுறைக்கு ஆளாக்கி வரும் யூதர்களின் சூழ்ச்சிகள் கூகிலிட்டு பார்த்தால் கிடைக்கும்.//

அதென்ன 50 வருஷம் மட்டும் பின்னாடி போறீங்க. கொஞ்சம் தராளமா நபிகள் நாயகம் காலம் (ஸல்) வரை பின்னோக்கி
போங்களேன். அப்ப அது யாரொட நிலம்?

Anonymous 9/06/2008 8:17 AM  

//அடா..அடா!! இதுவரை அனாணி பேருல யாருடன் உரையாடிக் கொண்டிருந்தேன் என்று விளங்காமல் இருந்தது. தர்போது புரிந்து
விட்டது வஜ்ரா சங்கர்!//

யாருங்க அவரு? நான் அவரு இல்லைங்க. ஏன் அவரு மட்டும் தாம் யூத ஆதவரளார?

அதே மாதிரி நான் ஒரு பார்ப்பான் நினைச்சிகிட்டு சில இடங்களீல் தாக்கி இருக்கீங்க. நம்ம திராவிட ஆளூங்க மாதிரி நீங்களும்

இந்துன்னு உடனே பார்பன்னு தாக்குறீங்க. நான் மாரியாத்தளுக்கு கிடா வெட்டி பொங்க வைக்கும் ஒரு இந்து. பார்ப்பான் இல்லை.

எனக்கு இசுலாம் மேல வெறுபெல்லாம் இல்லை. பாருங்க அண்ணலை எவ்வளவு மரியாதைய விளிச்சிருக்கேன்னு.

ஆனால இந்து அமைப்புகளின் அராஜகம் முஸ்லிம்களில் நடவடிக்கைக்கு எதிர்வினைன்னு நான் நம்புகிறேன்.

இவ்வளவு கருத்து சுதந்திரத்தை அனுமதித்து விவாதித்தற்கு நன்றி!

அதிரைக்காரன் 9/07/2008 1:43 AM  

//ஆனால இந்து அமைப்புகளின் அராஜகம் முஸ்லிம்களில் நடவடிக்கைக்கு எதிர்வினைன்னு நான் நம்புகிறேன்//

இப்படித்தான் பலரும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொலை வெறியாட்டம் போட்ட காவிக்குற்றவாளிகள் சாவகாசமாக விநாயகர் சதுர்த்தி சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு மறு கொலைவெறியாட்டத்திற்குத் தயாராக இருக்கிறார்கள்.

சென்ற வருடம் தமிழகத்தில் ராக்கெட் லாஞ்சர் வைத்திருந்ததைப் பற்றி வாசித்திருப்பீர்கள். அதுபோல் இலங்கைக்கு வெடிமருந்து, வெடிபொருட்கள் கடத்தியவர்களைப் பற்றியும் படித்தோம். இவர்களெல்லாம் முஸ்லிம்கள் அல்ல. இதைக்காரணமாக வைத்து தமிழக இந்துக்கள் வீடுகளில் சோதனை போடவில்லையே ஏன்?

பாட்டரி வைத்திருந்தவனும், அலாரம் வைத்திருந்தவனும் நாட்டையே தகர்க்கத் திட்டம் போட்டதாக மக்களை நம்பவைக்கப்பட்டு, முஸ்லிம்கள் என்ற பாவத்திற்காக சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க மறுக்கப்பட்டுள்ளனர். வீடுவீடாகச் சோதனை! சந்தேகத்தின்பேரில் தொப்பி போட்டவரையெல்லாம் விசாரித்தார்கள்.

//ஏன்னையா நாங்க அடிப்போம். நீங்க மூடிகிட்டுதான் இருக்கணும். நீங்க திருப்பி அடித்தால் அது தப்பு. இது எந்த ஊரு நியாயம்?//

இந்தியாவில் சட்டம், நீதிமன்றம் என்றெல்லாம் இருப்பது தெரியும்தானே? தவறிழைத்தவன் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் என்ன சிரமமய்யா? கொலை செய்தவன் ஆட்டோ சங்கராக இருந்தால் தூக்குத் தண்டனை; காஞ்சி சங்கராக இருந்தால்....?

//ஜாதி பிரச்சனைதான் ஆண்டாண்டு காலமாய் இருகின்றதே. இதென்ன புதுக் கரடி?//

பழைய கரடிதான். இந்தியாவுடன் பாகிஸ்தான் முஸ்லிம்களும் இருந்தால் உயர் பதவிகளை ஆக்கிரமிக்க முடியாது என்பது தெரிந்திருந்ததால்தான் பிரிந்து செல்ல அனுமதித்தார்கள். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும் இதை மனதில் வைத்தே காய்நகர்த்தினார்கள்.

//தவறு ஐயா. 1906-ல் முஸ்லிம்லீக் ஆரம்பிக்கப்பட்டது .1915-ல் தான் இந்து மகா சபை முஸ்லிம்லீக்கிற்கு எதிர்வினையாக ஆரம்பிக்கப்பட்டது.1951-ல்தான் ஜனசங்கம் ஆரம்பிக்கப்பட்டது.//

முஸ்லிம் லீகிற்கு முன்பே காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. காங்கிரஸில் இந்து மேலாதிக்கவாதிகளின் கை ஓங்கி இருந்ததாலேயே முஸ்லிம்லீக் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

//என்ன சொல்லவர்றிங்க.. பார்ப்பானர்களுக்கு முஸ்லிகளுக்கும் வித்தியாசமில்லை.பார்பனர் வழியை பின்பற்றி இந்தியாவை சுரண்ட வந்தவர்கள்தான் முஸ்லிம்கள் என ஒப்புதல் தருகுறிர்களா?//

பார்ப்பனர்களைப் போல் முஸ்லிம்கள் சுரண்டுவதற்காக இந்தியாவிற்கு வரவில்லை. பார்ப்பனரின் அடக்குமுறையே முஸ்லிம்களை இந்தியாவிற்கு அழைத்துவரக் காரணமானது.

//ஆனால உலக வரலாற்றிலேயே முஸ்லிம்களின் இந்திய படையெடுப்பும் ஆட்சிதான் காட்டுபிராண்டிதனத்தின் உச்சம் என பல வரலாற்றசிரியர்கள் வர்ணித்துள்ளனர். இதோ வரலாற்றசிரியர் வில்லியம்ஸ் கூறுவது...//

வரலாற்றாசிரியர்கள் மதசார்புள்ளவர்களாகவும், இஸ்லாமோஃபோபியா கொண்டவர்களாகவும் இருந்ததே இவ்வாறு பதிந்துவைக்கக் காரணம். உங்கள் தேடல்களைப் பொருத்தே தகவலும் கிடைக்கிறது. முஸ்லிம்களால் உலகிற்குக் கிடைத்த நலன்கள் என்று கூகிலிட்டுப்பார்த்தால் உங்கள் கூற்றுக்கு எதிரான வரலாற்றுத் தகவல்களும் கிடைக்கும்.

//பெரும்பான்மையான ஆளுக இருந்த வெற்றி வரும்னு எவன் சொன்னான். அப்படின்னா குட்டி நாடான இஸ்ரேல் ஜோர்டான், சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ,அல்ஜீரியா, மொராக்கோ, சுடான், டுனிஷியா, சிரியா -னு அரபு தேச கூட்டணீய ஆறு நாள் போரில் தோற்கடித்ததோ எப்படி?//

இஸ்ரேல் பெயரில் அமெரிக்கா அல்லவா ஆட்டம் போட்டது. கொஞ்ச நாளைக்கு அமெரிக்கா பொத்திக் கொண்டிருந்தால் இஸ்ரேலை ஒடுக்க ஹிஸ்புல்லாவே போதுமே!

//புல்லரிக்க வைக்கறீங்க சார்.அக்பர் பேருலயையும் 'முஹம்மது' இருக்கே சார்? அவரை மட்டும் ஏன் சார் அகபர் த க்ரேட்ன்னு சொல்றோம்?//

அதான் சார்! படியளப்பவரின் புகழ்பாடி காணிக்கை பெறும் பார்ப்பன புத்தி! அக்பரரின் மதம் தீன் இலாஹி.

//அதென்ன 50 வருஷம் மட்டும் பின்னாடி போறீங்க. கொஞ்சம் தராளமா நபிகள் நாயகம் காலம் (ஸல்) வரை பின்னோக்கி போங்களேன். அப்ப அது யாரொட நிலம்? //

நீங்க என்னதான் சொல்ல வர்ரீங்க? யூதர்கள் வலுக்கட்டாயமாக பாலஸ்தீனத்தில் குடியமர்த்தப்படவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

//ஒரிஸ்ஸாவிலும் எதிர்வினைதான். அவர்களின் சாமியாரை கொன்றாதால் தான் இவ்விளைவு. பாம்பை சீண்டிவிட்டது யார்? ஒரு முஸ்லிம் நாட்டில் ஒரு இமாமை non-muslim கொன்றால் இதுதானே நடக்கும். //

சாமியாரைக் கொன்றவர்கள் முதலில் மாவோயிஸ்டுகள் என்றல்லவா சொல்லப்பட்டது.கொலைநடந்த ஓரிரு மணிநேரத்தில் சங்கபரிவாரங்கள் கொலைவெறியாட்டத்தைத் தொடங்கியதைப் பார்த்தால் அவர்களே காவு கொடுத்திருப்பார்கள் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. குஜராத்தில் சபர்மதியை அவர்களே கொளுத்திவிட்டு ருத்ரதாண்டவம் ஆடியதைப் போல்!

//எதற்கு அப்படி RSS நல்ல பெயர் எடுக்க வேண்டும். அவர்கள் என்ன எலெக்ஷனிலா நிற்கிறார்கள்? பிஜேபிதான் முஸ்லிம் ஓட்டு வேண்டாம் என்கிறதே! //

அப்படியெல்லாம் பிஜேபி சொல்லி, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளாது. ரெண்டு மூனு வாரத்திற்கு முன் அத்வானிஜி என்னா சொன்னாருன்னு தேடிப்பார்த்து கொஞ்சமாவது விபரமாக எழுத உயற்சி செய்யுங்கள். பொறுமையாக உரையாடியதற்கு நன்றி.

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP