தினமலருக்கு முதல் ஆப்பு!

Wednesday, September 10, 2008

சமீபத்தில் தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக டென்மார்க் பத்திரிக்கையில் வெளியான முஹம்மது நபி[ஸல்] அவர்களை இழிவு செய்யும் விதமாக வெளியான கேலிப்படத்தை வெளியிட்டது. ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய முஸ்லிம்கள வீதிக்கு வரவழைத்து காவல்துறையினரின் தடியடியைப் பெற வைத்த தினமலர் ஒப்புக்கு "வருந்துகிறோம்" என்று வெளியிட்டது.

தினமலரின் இந்த விஷமத்தனத்தால் கொதிந்தெழுந்த தமிழக முஸ்லிம்கள் தினமலரை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் தினமலருக்கு ஆப்படித்துள்ளது.காகித வடிவப் பதிப்புக்கும் ஆப்படிக்கும் முயற்சிகளை பலவேறு அமைப்பினரும் துரிதப்படுத்தி வருவதாக பெயர் சொல்ல விரும்பாத உளவுத்துறை அதிகாரி (தினமலர் பாணி;-) தெரிவித்தார்.

இனி, தினமலர் பெருநாள், ரமலான் மலர் வெளியிட்டு முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த நினைத்தாலும் தினமலரின் சூழ்ச்சியை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். தினமலரின் சரிவு தொடங்கி விட்டதால் என் பங்குக்கு தினமலர் ஸ்டைலில் சொல்லிக் கொள்ள விரும்புவது!

வருந்துகிறோம்!

7 comments:

Anonymous 9/10/2008 2:41 AM  

ஐயா,
நீங்கள் எல்லாம் எதிர்ப்பு காட்டினாலே அந்த பொருளை வாங்குவதற்கு ஒரு பெரிய சமூகமே காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். இது வரைக்கும் தினமலர் வாங்காதவன் கூட இனிமேல் தான் வாங்க ஆரம்பிப்பான். முதலில் கருத்து சுதந்திரம் வேண்டும். அது இல்லா விட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். உங்களுடைய இந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை பார்த்த பிறகு சகிப்புத்தன்மை அதிகம் உள்ளவனே அதிகம் ஆத்திரப்படும் அளவுக்கு ஆகி விட்டது.

உங்க நம்பிக்கையை கேலி செய்வது மிகவும் கண்டிக்கப்படத்தக்க காரியம் தான், ஆனால் உங்கள் ஆள் எம்.எஃப். உசேன் சீதையின் பெண்ணுறுப்பில் அனுமார் வாலை வைத்து தூக்கி வருவது போலவும், அதில் சீதையானவள் மெய்மறந்து காணப்படுவது போலவும் ஓவியம் வரைந்தாரே.. அப்பொது நீங்கள் என்ன செய்தீர்கள்? அதை கண்டித்த அனைவரையும் கலையை அறியாதவர்கள் என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் கூக்குரல் எழுப்பினீர்களே? அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா?

ஒரு இணைய தளத்தை தடை செய்து விட்டால் உலகம் ஒன்றும் இருண்டு போகாது. முதலில் உங்கள் முதுகை சொறிந்து கொள்ளுங்கள் பிறகு அடுத்தவர்களதை சொறியுங்கள்.

நன்றி வணக்கம்.

Anonymous 9/10/2008 3:00 PM  

அதிரைக்காரன்said :வருந்துகிறோம்,
அதிரை கிரொவ்ன்(தஸ்தகீர்)said :வரவேற்கிறோம்.விச விதைதரும் விச மலர் இனி வாசகர் தோட்டத்தில் விலாசம் இழந்து பிடிங்கியெறியப்படும்.

அதிரைக்காரன் 9/10/2008 10:52 PM  

ராஜா,

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு சீண்டிப்பார்க்க முஸ்லிம்கள்தான் கிடைத்தார்களா? யூடூபை அறிமுகப்படுத்த முஹம்மது நபி அவர்கள் குறித்த டென்மார்க் கேலிச்சித்திரத்தின் தொடுப்புதான் தினமலரின் கண்ணில் பட்டதா?

ஒருமுறை செய்திருந்தால் கவனக் குறைவு என்று மன்னித்து விடலாம். மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்தால், தினமலருக்கு உள்நோக்கம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? இதைக் கண்டிக்க வேண்டியது சமுக நல்லிணக்கவாதிகளின் கடமையல்லவா? முஸ்லிம்களிடமும் சிறுசிறு பத்திரிக்கைகள் உள்ளன. அவர்களும் பதிலுக்கு யூடூபை அறிமுகப்படுத்துகிறோம் என்று தினமலர் ஸ்டைலில் இறங்கினால் என்னவாகும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நண்பரே.!

M.Fஹுசைன் சரஸ்வதியை நிர்வானமாக ஓவியம் வரைந்தது கண்டிக்கத்தக்கதும் சட்டப்படி தண்டித்தக்கதும் ஆகும். ஒரு பக்கம் ஆபாசச் சிற்பங்களை ஆராதித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் ஹுசைன் ஆபாசமாக வரைந்துவிட்டார் என்று புலம்புவது முரண்பாடாக இருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. நான் கேள்விப்பட்டவரை பிறர் வணங்கும் தெய்வங்களை ஒரு முஸ்லிம் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.

தினமலரை வாசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை நீங்கள் சொல்லும் சமூகத்தைவிட சிறுபான்மையினரே என்பதும், தடைசெய்யப்பட்ட தினமலரின் இணையதளம் ஓசியில்தான் தமிழர்களுக்குச் செய்தியை வழங்குகிறது என்பதும் தெரிந்துமே உலகத் தமிழ்முஸ்லிம்கள் தினமலரை முடக்கும் முயற்சியில் இறங்கினர்.அவர்களுக்கும் தங்கள் மனக்குமுறலை உரிய முறையில் காட்டும் சுதந்திரம் இருக்கிறது.

நன்றி.

நட்புடன் ஜமால் 9/16/2008 12:11 AM  

நாம நாமலா இருந்தா, இந்த மாதிரி தொந்தரவுகள் வராது.
ஆனாலும் எதிர்ப்பு செய்தல் வேண்டும்.
நாம் இஸ்லாத்தை சரியான வடிவில் விளங்கி கொள்வதும் இல்லை, பிறர்க்கு கொண்டு செல்வதும் இல்லை. இந்த போக்கு மாற வேண்டும்.

யாழ் Yazh 9/20/2008 7:16 AM  

திருந்துமா தினமலம்?

Unknown 9/20/2008 10:56 PM  

இஸ்லாமிய நண்பர்களே தயவுசெய்து பிறமதங்களிடமும் பரிவு காட்டுங்கள். உங்கள் மதநம்பிக்கையை விமரிசித்துப்பார்ப்பது எனது நோக்கம் அன்று. அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஆனாலும் எந்த மதம் மீதும், கட்சியின் மீதும்,பத்திரிகைகள் மீதும், தொலைக்காட்சிகள் மீதும், சினிமா உலகத்தின் மீதும் விருப்போ, அல்லது வெறுப்போ கிடையாது. ஏனன்றால் விருப்பு, வெறுப்புகள்தான் குறுகிய மனப்பான்மையும், தீவிரவாதம் என்கிற மதவெறியையும் உண்டாவதற்கு காரணமாக அமைகின்றன.
As Velmurugan says, whosever likes to read let them read Dinamalar. Why you should stop it..That will make a curiosity among people to read secretly. Actually you are helping dinamalar for more circulation.

If you really want to do good for your religion plz fight against Terrorism. Show your anger against the terrorist. And teach them to change their path not to kill innocent people. I know Islam doesn't encourage terrorism, but people don'w knwo this..so make strong publicity about true islam how it is away from terrorism.
தீவிரவாதத்திற்கு எதிராக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகள்தான், இஸ்லாம் மதத்திற்கு எதிராக இருக்கும் களங்கத்தை நீக்குவதற்காக நீங்கள் செய்யும் உண்மையான தொண்டு.

Sripathy 12/14/2008 11:45 AM  

ஐயா,
தினமலர் பதித்த இந்த செய்தி நியாயமா என்று கேட்டால் சத்தியமாக நியாயம் இல்லை. நீங்கள் இந்துவா முஸ்லிமா என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் கொதித்து எழுகிறீர்கள். ஆனால் M.F.Hussein செய்த தவறுக்கு எந்த முஸ்லிமும் கண்டனம் தெரிவத்ததாக நயாபகம் இல்லையே..நாம் மட்டும் யார் என்ன செய்தாலும் வாயில் விரலை வெய்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP