இந்தியாவில் ஒட்டகங்கள் இல்லையா தருமி சார்?

Saturday, February 28, 2009

அதிரை பாருக்கின் எல்லைதாண்டிய இஸ்லாமிய ஈமெயில் படையெடுப்பு குறித்து தருமி பதிவிட்டிருந்தார். நம்ம அதிரைக்காரர்களுக்கு வேறுவேலையே இல்லை. ஆட்டைக்கழுதையாக்கிய பழியிலிருந்தே மீளாதபோது, தருமியை வலுக்கட்டாயமாக சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்துள்ளார்.

பாவம் பாய், தருமிக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உங்கள் மெயிலிங் லிஸ்டிலிருந்து நீக்கிடுங்க அல்லது அற்புத சுகமளிக்கும் மின்மடல் குழுமம் தொடங்கி அதில் UNSUBSCRIBE வசதி கொடுத்துவிட்டால் வேண்டாதவர்கள் UNSUBSCRIBE செய்து கொள்வார்கள்.


தருமிபாவம்! இந்தியாவில் ஒட்டகங்கள் இருப்பதுகூடத் தெரியாத அப்பாவி மனுசர் அவர். பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க ;-)

//இப்படி சிறப்பு மிக்க ஒட்டகத்தைப் படைத்த இறைவன் அதை அரேபிய நாட்டினருக்கு கொடுத்துவிட்டு நமக்கெல்லாம் வெறும் எருமையையும், பசுமாட்டையும் கொடுத்து ஏமாற்றிவிட்டானே... ச்சே!//


வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற நம்ம தருமிசாருக்கு தயவுசெய்து யாராச்சும் எருமையும் பசுவும் பால் கொடுக்கும் என்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வையுங்க. ஏனென்றால் அரபு நாட்டு ஒட்டகம் மட்டும்தான் பால் கறக்கும் நம்ம பசுவும் எருமையும் 'கோ'கோலா (கவ்ஜல்?)தான் கறக்கும்னு நம்பிக்கிட்டு இருக்கார்.

கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்// அதன் பால் எத்தகைய உயர்வானது, அதனை உண்டு // அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் //....

மதமும் வேண்டாம் கடவுளும் வேண்டாமென கரையொதுங்கிய தருமியை 'அடக்கடவுளே" என்று சொல்ல வைத்தது ஆட்டைக் கழுதையாக்கியதைவிட கொடுமை பாய்!எல்லோருமே சொர்க்கத்துக்குப் போயிட்டால் நரகத்துக்கும் ஆள் வேண்டாமா? என்று கேட்ட கழுதைகளும் அதிரையில் உண்டுதானே!

அதனால................. ;-)

9 comments:

Anonymous 2/28/2009 1:14 AM  

அருமையான பதிவு. நீங்கள் எழுதிய பதிவிலயே அட்டகாசமான பதிவு இதுதான். நெத்தியடி! கலக்குறீங்க!! பட்டய கிளபிட்டிங்க!!! சூப்பர்!!!

ஹாஜியார் 2/28/2009 8:12 AM  

//எல்லோருமே சொர்க்கத்துக்குப் போயிட்டால் நரகத்துக்கும் ஆள் வேண்டாமா? என்று கேட்ட கழுதைகளும் அதிரையில் உண்டுதானே!

அதனால................. ;-)//

:-)

Anonymous 2/28/2009 8:16 AM  

தருமி சார் உங்களுக்கு என்ன பாவம் செய்தாரு? இப்படிப்போட்டு அடிக்கிறீங்க? அவருக்குக் குழந்தை மனசு சார்.

குழந்தை வடிவேலு.

Unknown 2/28/2009 8:31 AM  

--ஆட்டைக்கழுதையாக்கிய பழியிலிருந்தே மீளாதபோது--

அது என்ன ஆட்டைக் கழுதையாக்கிய கதை? கொஞ்சம் சொல்லுங்களேன்.

--தருமியை வலுக்கட்டாயமாக சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்துள்ளார்.--

அதிரைகாரர்களின் மெயில் கிடைக்கப்பெற்றால் சொர்ர்க்கம் நிச்சயம் என்பது எனக்கு புது அறிவு. அவ்வறெனில் நமக்கும் அனுப்பி வையுங்கள். இல்லாத சொர்க்கத்தையும் பார்த்து விடுவோமே.

நன்மனம் 3/01/2009 5:37 AM  

நீங்கள் அதிரைக்காரன் என்பதால் இந்தப்பதிவு போட்டிங்களா?

என்ன இருந்தாலும் அந்த ஆளு செஞ்சது தப்புதானே

மார்க்கத்தில் யாரும்யாரயும் நிர்பந்திக்கக்கூடாதல்லவா?

தருமி போன்றவர்கள் இந்தமாதிரி சான்ஸ் கிடைத்தால் விடுவார்களா?

உலகத்தில் ஒருவருக்கு நாயமா தெரிவது மற்றவருக்கு அநியாயமா தெரியலாம். அதுதானெ உலகத்துட இயல்பு.

இப்பப்பாருங்க, நிர்வாணமா குளிக்காதீங்க என்று இஸ்லாம் சொல்வது மனிதர்களுக்காகத்தான் என்பதைக் கூட அதனால் இறைவனுக்கு என்ன வந்தது என்று தருமிகள் கேட்கிறார்கள்

Anonymous 3/01/2009 11:04 PM  

இங்கே கும்மி அலவ்டா?

அதிரைக்காரன் 3/01/2009 11:11 PM  

நன்,

//நீங்கள் அதிரைக்காரன் என்பதால் இந்தப்பதிவு போட்டிங்களா?//

அதிரையில் 'வெட்டி'யும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவும் பதிந்தேன்

//என்ன இருந்தாலும் அந்த ஆளு செஞ்சது தப்புதானே//

தப்புதான்.

//மார்க்கத்தில் யாரும்யாரயும் நிர்பந்திக்கக்கூடாதல்லவா?//

அதிரை பாரூக் ஒன்றும் கையில் வெடிகுண்டை வைத்துக் கொண்டு கலிமா சொல்லி முஸ்லிமாகிவிடு என்று தருமியை மிரட்டவில்லையே? பல்க் மெயிலிங் லிஸ்டில் தருமிக்கும் ஒரு காப்பி அனுப்பியிருக்கிறார்.அது உரிமை மீறலா? அதிரை பாரூக் அவர்களின் மெயிலைத் தவிர தருமியின் இன்பாக்ஸில் வந்து விழும் மெயிலகளெல்லாம் தரமுள்ள மெயில்களா?

//தருமி போன்றவர்கள் இந்தமாதிரி சான்ஸ் கிடைத்தால் விடுவார்களா.//

தருமி அவர்கள் தன்னை ஓர் மத மறுப்பாளராகச் சொல்கிறார். ஆனாலும் அவருடைய பல பதிவுகள் 'ஒரு மதம்' மீதான வெறுப்பை உமிழ்வதாகவே காணமுடிகிறது. நேசகுமார் மாதிரியோ ஆரோக்கியம் மாதிரியோ அல்லாது கொஞ்சம் ப்ரண்ட்லியாகப் பதிவிட்டு சாடுகிறார் அவ்வளவுவே. தருமியிடம் விமர்சன நேர்மையிருப்பதாக நான் கருதவில்லை.கேள்வி மட்டும்தான் என்ற டிஸ்கியுடன் யாரும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கமுடியும்.

//இப்பப்பாருங்க, நிர்வாணமா குளிக்காதீங்க என்று இஸ்லாம் சொல்வது மனிதர்களுக்காகத்தான் என்பதைக்கூட அதனால் இறைவனுக்கு என்ன வந்தது என்று தருமிகள் கேட்கிறார்கள்//

நிர்ப்பந்தந்த்தின் காரணமாக நிர்வாணமாகக் குளிப்பதை இஸ்லாம் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.நிர்வாணமாக மட்டும்தான் எப்போதுமே குளிப்பேன் என்று அடம்பிடித்தால் வேறு காரணங்கள் ஏதும் இருக்கக்கூடும்!

முக்தியடைய நிர்வாணமே அருமருந்து என்ற மஹாவீரரின் தீவிரபக்தரோ என்னவோ ;-)

Anonymous 3/01/2009 11:53 PM  

"""//நீங்கள் அதிரைக்காரன் என்பதால் இந்தப்பதிவு போட்டிங்களா?//

அதிரையில் 'வெட்டி'யும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவும் பதிந்தேன் """"

புரீது....புரீதூ.

""""பல்க் மெயிலிங் லிஸ்டில் தருமிக்கும் ஒரு காப்பி அனுப்பியிருக்கிறார்.அது உரிமை மீறலா? அதிரை பாரூக் அவர்களின் மெயிலைத் தவிர தருமியின் இன்பாக்ஸில் வந்து விழும் மெயிலகளெல்லாம் தரமுள்ள மெயில்களா?""""

அது நமக்கு தேவயில்ல. ஆனா, பல்க் மெயிலிங்க்ல இருந்தாலும் வேணாம்னு ஒரு பதில் மெயிலு வந்துடுச்சுன்னா அத்தோட ரிமூவிட்டு விட்ருக்கலாம்ல.

""""ஆனாலும் அவருடைய பல பதிவுகள் 'ஒரு மதம்' மீதான வெறுப்பை உமிழ்வதாகவே காணமுடிகிறது. """"

அது தன்னோட முதல்நோக்கம் என்று ஒரு பின்னூட்டத்துல சொல்லிக்கிறாரே!

""""நிர்வாணமாக மட்டும்தான் எப்போதுமே குளிப்பேன் என்று அடம்பிடித்தால் வேறு காரணங்கள் ஏதும் இருக்கக்கூடும்! """"

சரியா சொன்னீங்க,

நான் கேட்டது என்னான்னா 'கொள்கைல நம்பிக்கையில்லேன்னு சொல்லிட்டு பின்ன எனக்குப் பொருந்துதா பொருந்தலையானு ஏன் சார் கவலப்படறீங்க ?ன்னு!

Anonymous 3/02/2009 12:39 AM  

//வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற நம்ம தருமிசாருக்கு தயவுசெய்து யாராச்சும் எருமையும் பசுவும் பால் கொடுக்கும் என்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வையுங்க. //

You trying to twist and confuse the point dear. What is the need for Cow and Buffalo if Camel is just enough for providing milk?

//இப்பப்பாருங்க, நிர்வாணமா குளிக்காதீங்க என்று இஸ்லாம் சொல்வது மனிதர்களுக்காகத்தான் என்பதைக் கூட அதனால் இறைவனுக்கு என்ன வந்தது என்று தருமிகள் கேட்கிறார்கள்
//

Pls eloborate the reasons to the non-believers.

//பல்க் மெயிலிங் லிஸ்டில் தருமிக்கும் ஒரு காப்பி அனுப்பியிருக்கிறார்.அது உரிமை மீறலா? //

Yes it is.

//அதிரை பாரூக் அவர்களின் மெயிலைத் தவிர தருமியின் இன்பாக்ஸில் வந்து விழும் மெயிலகளெல்லாம் தரமுள்ள மெயில்களா?
//

That is none of his/your/my business. It is Dharumi's business.

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP