நாம ஜென்மபூமி (நகைச்சுவை)

Tuesday, October 05, 2010

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் மனமுடைந்து போய் இருப்பவர்கள் ரிலாக்ஸ் ஆகும் நோக்கில் வெட்டியின் சிறப்பு 'கடி'கள்!. பின்னூட்டத்திலும் கடிக்கலாம்!



வக்கீல்: இந்த கேஸில் ஹைகோர்டுல மேல்முறையீடு செய்யலாமா?

பாதிக்கப்பட்டவர்: வேணாம் சார் ரொம்ப செலவாகும்! நம்ம ராயபுரம் கபாலி அண்ணாத்தேகிட்டேயே போயிடுறேன்.

***********
போலீஸ் : கபாலி! கட்டப்பஞ்சாயத்து செய்யிறத நிறுத்தலேன்னா உன்னை உள்ளே தள்ளிடுவேன்.

கபாலி : அப்படி சொல்லாதீங்க சார்! இப்பவெல்லாம் கபாலி பஞ்சாயத்தும் நீதிமன்றமும் ஒன்னுதான்!

***********

ராமு: ஆட்டோ திருட்டுப்போன வழக்கில் என்ன தீர்ப்பு கிடைத்தது?

சோமு: எனக்கு ஒரு வீலும் திருடனுக்கு ரெண்டு வீலும் என்று தீர்ப்பு வழங்கி பிரிச்சுக் கொடுத்தாங்க!

***********
குப்பன் : அண்ணே! நம்ம கபாலி அண்ணனுக்கு குசும்பு ஜாஸ்தி!

சுப்பன் : எதை வச்சுப்பா சொல்றே?

குப்பன் : அரிவாளுக்குப் பதிலாகக் கையில் சுத்தியல வச்சிருக்கார்!

***********

வக்கீல் (1): கபாலியும் நீதிபதியும் என்ன சீரியஸா பேசிக்கிறாங்க?

வக்கீல் (2): முக்கியமான தீர்ப்பு விசயமா கபாலிகிட்ட டிஸ்கஸ் பண்றாராம்!

************

குமாஸ்தா: எதுக்குசார் நீதிபதி உங்க மேல கடுப்பாயிருக்கார்?

வக்கீல் : ஏதோ ஞாபகத்தில் "கனம் கபாலி அவர்களே" என்று சொல்லிட்டேன்

3 comments:

அதிரை தாருத் தவ்ஹீத் 10/05/2010 11:39 PM  

நகைச்சுவைக்குள் தெரியும் சோகம்.

சிரித்துக் கொண்டே அழலாம்.
முடியவில்லையா?
அழுது கொண்டே சிரிக்கலாம்.

அலஹாபாத் நீதிபதிகளின் தீர்ப்பைவிட கபாலியின் தீர்ப்பு சிறப்பானதாக இருக்கும்.

பதிவுக்கு நன்றி!

அரபுத்தமிழன் 10/13/2010 1:29 AM  

//ராமு: ஆட்டோ திருட்டுப்போன வழக்கில் என்ன தீர்ப்பு கிடைத்தது?

சோமு: எனக்கு ஒரு வீலும் திருடனுக்கு ரெண்டு வீலும் என்று தீர்ப்பு வழங்கி பிரிச்சுக் கொடுத்தாங்க!//

இது டாப்பு :)

AHSIRAH 1/04/2011 3:01 AM  

good one

visit my blog

tamil web library

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP