அச்சுருத்தல் இல்லாத குடியரசு தினம்! தினமலர் திருந்தி விட்டதா?
Thursday, January 26, 2012
சுதந்திர தினம்,குடியரசுதினம் மட்டுமின்றி தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற மத பண்டிகை தினங்களிலும் "தீவிரவாத அச்சுருத்தல்", குடியரசு/சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பாகிஸ்தான்/லஷ்கர் தீவிரவாதிகள் சதி/ ஊடுறுவல்" என்றெல்லாம் பீதிகிளப்புவதோடு, ஓரிரு மாதங்கள் முன்னதாவே சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக முஸ்லிம்களை அதிலும் தாடி வைத்திருந்தால் கூடுதல் அடைமொழியுடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு கைது செய்து, மேற்கண்ட தேசிய கொண்டாட்ட தினங்களில் முஸ்லிம்களை தனிமைபடுத்தி சுகம்கண்ட ஊடகங்களில் 'தினமலம்' மற்றவர்களைவிட சற்று கூடுதலாகவே சுகம் கண்டது.
நேற்று 26-01-2012 இந்தியாவில் 56 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த செய்தியில் இடம்பெற்றிருந்த தினமலர் செய்தியின் வாசகங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படியே பதிகிறோம்.
நேற்று 26-01-2012 இந்தியாவில் 56 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த செய்தியில் இடம்பெற்றிருந்த தினமலர் செய்தியின் வாசகங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படியே பதிகிறோம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும், மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.
நமது கேள்வி என்னவென்றால்,
- "இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? நாட்டில் இதுவரை குழப்பம் செய்த தீவிரவாதிகள் எல்லோரும் திருந்தி விட்டார்களா?
- நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராடி வருபவர்களின் கோரிக்கைகளை எல்லாம் அரசு ஏற்று நிறைவேற்றி வைத்து விட்டதா?
- லஷ்கர் தீவிரவாதிகள், எல்லை தாண்டுவதை நிறுத்திக் கொண்டார்களா?
- இதுவரை இத்தகைய பீதியைக் கிளப்பி,பரபரப்பு ஏற்படுத்தியது நம்நாட்டு உளவுத்துறையிலுள்ள சில மதவெறியர்களா?
- அல்லது தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் திருந்தி விட்டனவா?
ஒரு சேஞ்சுக்கு குடியரசு தினத்தன்று மதக்கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி என்று கோவை பள்ளிவாசலில் நேற்று நடந்த தாக்குதலைச் செய்தியாக போட்டிருக்கலாம். பரவாயில்லை! சட்டம் தன் கடமையைச்செய்து நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் உண்மையான தீவிரவாதிகளை அடையாளம் காட்டும் என்று குடியரசு இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கவில்லை.
அமைதியாக நேற்றைய 63 ஆவது குடியரசு கொண்டாட்டங்களில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை குடியரசு தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
இதேநிலை நாட்டின் அனைத்து கொண்டாட்டங்களிலும் நீடிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.வாருங்கள் வளமான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்வோம்!
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்